Wednesday, October 14, 2009

கமலுடன் முத்தக் காட்சி: ரூ.1.25 கோடி கேட்கும் தமன்னா?

கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம் தமன்னா... - இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் சூடான செய்தி
18 வயதாகும் தமன்னா, மேஜராவதற்கு முன்பே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்துவிட்டார்.

இப்போது பெரிய நடிகர்களின் விருப்பமான நாயகியாக மாறிவிட்டார்.

பரத், ஜெயம் ரவி, விஜய் என அவரது ஆட்டம் களைகட்டிவிட்டது. இந்த நிலையில், அவருக்கு கமலுடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கவிருக்கும் கமலின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் தமன்னா.

கமல் படமாச்சே... முத்தக் காட்சி இருக்குமா என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வந்ததாம். 'அப்படின்னா என் ரேட்டே வேற' என்ற ரீதியில் பேசிய தமன்னா, ரூ.1.25 கோடியை சம்பளமாகக் கேட்க, 'இவ்வளவு காஸ்ட்லி லிப்ஸ் தேவையா' என யோசித்து வருகிறாராம் ரவிக்குமார்.

சிம்புவும் நயனும் அருகருகில்! வெளியேறிய பிரபுதேவா?

ஓபாவும், பின்லேடனும் ஒண்ணா உட்கார்ந்த பில்டப் கொடுக்கிறாங்க இந்த சம்பவத்திற்கு. ஆனால் இந்த சந்திப்புக்கு ஒரு சாதாரண இஞ்சி மரபா எபெஃக்ட் கூட இல்லாமல் போனதுதான் ஆச்சர்யம்.
வேறொன்றுமில்லை. ஃபெப்சி தொழிலாளர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார் நயன்தாரா. இவரது போதாத நேரமோ என்னவோ, லேட்டாக வந்த நயனுக்கு சிம்புவின் பக்கத்தில் உட்காரதான் இடம் கிடைத்தது.

இதுக்கு முன்னாடி ஒருமுறை திரையுலகினர் உண்ணாவிரதம் நடத்தின போதும் சிம்புவுக்கு இங்குதான் இடம் கிடைத்தது. அபபோது கொஞ்சம் முன்னேறி அவரது மனசில இடம் பிடிக்க ட்ரை பண்ணிய சிம்புவுக்கு கிடைத்தது ஏமாற்றம்தான். இந்த முறை அப்படியெல்லாம் அவர் ட்ரை பண்ணவே இல்லை. வெந்த புண்ணுல வெங்காயத்தை பிழிவானேன் என்று அமைதியாக இருந்துவிட்டார். பதிலுக்கு நயன்தாராவும் அமைதியாக இருந்துவிட்டாராம். ஆனால், நயன்தாராவின் வரவில் அதிர்ந்து போனது பிரபுதேவாதான்.

தனது குடும்பத்தினருடன் இந்த விழாவுக்கு வந்திருந்த பிரபுதேவா, நயன்தாராவை பார்த்ததும் விருட்டென்று எழுந்து வெளியேறிவிட்டார். ஒருவேளை இருவரும் அருகருகில் இருப்பது மாதிரி யாராவது படம் எடுத்துவிட்டால், அதற்கு பின்பு எழுகிற சர்ச்சையை சமாளிப்பது யாராம்? அதனால்தான் இந்த உஷார்.

விவேக்கின் ‘பத்மஸ்ரீ’ - திரும்ப பெற வலியுறுத்தல்!

திரையுலகில் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல் காரணமாக அவசர பொதுக்குழுவை கூட்டியது சினிமா பிரஸ் கிளப்.
இரா.த.சக்திவேல், ஆப்ரஹாம், இராமானுஜம் மற்றும் இராவணன் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பத்திரிகையாளர்களை ஒட்டுமொத்தமாக திட்டி தீர்த்த நடிகர் நடிகைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக நடிகர் விவேக் தொடர்பான ஒரு தீர்மானத்தை பத்திரிகையாளர்கள் அனைவரும் பேரார்வத்துடன் வரவேற்றனர்.

விவேக்கிற்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது தொடர்பான தீர்மானம்தான் அது. ‘நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் திரு.விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும் அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றவர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி அந்த விருதை திரும்ப பெற வேண்டுகோள் வைக்க வேண்டும்’

இதுதான் சினிமா பிரஸ்கிளப்பின் அந்த முக்கிய தீர்மானம். இதே கருத்தை வலியுறுத்தி மத்திய அரசுக்கு பத்திரிகையாளர்களின் பல்வேறு அமைப்புகள் கடிதம் அனுப்பவும் முடிவு செய்துள்ளன.

Tuesday, October 13, 2009

Peranmai - HQ Ayngaran Exclusive Trailer !! 2009

வேட்டைக்காரன் குழப்பம்

தீபாவளிக்கு வேட்டைக்காரன் வெளியாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தீபாவளி ரேஸில் கலந்து கொள்கின்றன. கடைசி நேரத்தில் சா பூ தி‌ரி, அதே நேரம் அதே இடம் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகவில்லை. ச‌ரி, அப்படியானால் எப்போதுதான் படம் வெளியாகும்? தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே பெ‌ரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் வெளியிட வேண்டும் என்ற தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதிமுறை இந்த தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த புதிய விதியின்படி பொங்கலுக்குதான் வேட்டைக்காரனை வெளியிட வேண்டும். அவ்வளவு நாள் படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் காத்துக் கொண்டிருக்குமா? அதற்கு முன்னால் அவர்கள் படத்தை வெளியிட துணிந்தால் என்ன செய்வது? இதுதான் இப்போது தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தை ஆட்டிப் படைக்கும் கேள்வி.

பொங்கலுக்கு முன்னால் வேட்டைக்காரன் வெளியானால் என்ன சமாதானம் சொல்லலாம் என கூட்டாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி

இந்திப் படவுலகின் வான்டட் லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் பிரபுதேவா. இவரது இயக்கத்தில் சல்மான் நடித்த வான்டட் இன்னும் வசூலில் பட்டையை‌க் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்திப் படங்களை இயக்க வாய்ப்புகள் வ‌ரிசைகட்டி நின்றாலும், பிரபுதேவா அடுத்து இயக்கப் போவது ஒரு தமிழ்ப் படத்தை என்கிறார்கள். அந்தப் படத்தை தயா‌ரிப்பவர் ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம்.

இவரது தயா‌ரிப்பில் விஷால் நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குவதாக‌த்தான் முதலில் கூறப்பட்டது. விஷால் பாலா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவருக்கு பதில் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஜெயம் ரவி தெலுங்கு கிக் படத்தின் ‌‌ரீமேக்கான தில்லாலங்கடியில் தற்போது நடித்து வருகிறார். அடுத்து அமீ‌ரின் கண்ணபிரானில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல், த்ரிஷா, வினய்க்கு விருது - பிலிம் ஃபேன்ஸ் அசோசியேஷன்

கடந்த 58 வருடங்களாக திரைப்பட கலைஞர்களுக்கு விருது கொடுத்து கௌரவித்து வருகிறது பிலிம் ஃபேன்ஸ் அசோசியேஷன். எவ்வித பாரபட்சமும் இன்றி வழங்கப்படுவதால் திரைப்பட துறையினரிடையே மிகவும் விரும்பப்படுகிற விருதாகவும் அமைந்திருக்கிறது இந்த விருதுகள். தற்போது 2008 ம் ஆண்டிற்கான 58 வது விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன்
சிறந்த படங்களாக தசாவதாரம், அபியும் நானும், யாரடி நீ மோகினி, பிரிவோம் சந்திப்போம் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த நடிகர்களாக கமல்ஹாசன், சூர்யா, வினய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகைகளாக சினேகா, த்ரிஷா, சிம்ரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் (தசாவதாரம்)
சிறந்த கதை சசிக்குமார் (சுப்ரமணியபுரம்)
சிறந்த பாடல் வாலி (தசாவதாரம்)
சிறந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம்)
சிறந்த ஒளிப்பதிவு ரவி (நான் கடவுள்)
குணச்சித்திர நடிகர் பிரகாஷ்ராஜ் (அபியும் நானும்)
குணச்சித்திர நடிகை ஐஸ்வர்யா (அபியும் நானும்)

Monday, October 12, 2009

Prabhu Deva - Next Movie














 
The dancer, choreographer, actor and director landed up at Sify.com to chat with his fans from across the country. From his alleged romance with Nayanthara to his latest Bollywood flick, the star took everything with a smile, almost!
I kow item numbers sound silly but if a director wanted you to do a special appearance as a dancer, would you agree?
Of course. If I am convinced.
Why Salman in Wanted?
Why not?
How was your experience with the movie Wanted?
It was a good experience
Will u work with chiyan vikram?
Yeah...
Who is your fav heroine in tamil . pls other than nayan.
Priya Mani
sir why u are gone to direction, i am your fan for dancing
I dance too.
who would you like to direct in bollywood?
Many
U like Dance India dance ?
Yeah!
Hi Prabhu Sir. wat is ur DOB ?
3/4/73
Any plans to direct surya?
Yeah...
hi, how do you keep yorself so fit?
take good care of myself....diet
Working experience with salman & boni kapoor?
Great!
I want a chance from your movie is possible?
Definitely possible
master vs nayanthara love percentage is?
how much?
R u goin to direct jayam ravi in tamil?
Yes, I think I might
sir tell us abt ur father and sibllings in 2 lines pls..
Jolllyana appa. Hardworking brothers.
now, who is ur best dancer?
Chiranjeevi sir is always my favourite
what is your favourite film in hingi?
Sholay
Hi Mr.Prabhu, How about making a movie with kamalhaasan with core importance to dance?
Waiting for that....
master favourite movie is kathalan...your a legend in my life.
Thanks!
why you and nayan are afraid of cameras and public apperances?
No, not afraid
Hi Prabu, I like ur dance with Facial expression, Chanceless... U r introduced this kind of Dance with Exression infact.Also in ur period only groupdancers got noticed. I like equally shobi too. All the very best for ur future
Rombo thanks. I will convey to Shobi also.
Hi Prabhu thank for doing a graet film in hindi "Wanted"...Congrats for his success
Thank you
Prabu master, My advance hearty diwali wishes to you
Same to you...Happy Diwali!
Hai, congrats for the sucsees of wanted.What is your next projects.
Thank you very much. Next projects will be out soon
sir u prefer to dance,act or direct??
Definitely Dance
Hai Prabu master i like very much your dance and my special wishes 2 ur next project
Rombo thanks
I really admire your advance and the humility with which you behave
Thank you
Hi Prabhu Deva Nalla Irukkingala
Nalla iruken. Neengalum jollya irunga
Wil u work again as a dance master?
Yeah
Is it true that Nayan has your name tatooed on her hand??
Even a child knows the answer to that
What came to your mind when MJ died ?
I thought it was a lie
Helo Deva, how u feel while work in reality show in bollywood?
It was a fun experience...it was worth watching the talent
Are the rumors true about Nayantara?
Rombo thanks pa
Or is she your girlfriend?
Ha ha...
Are you really married to Nayantara?
No
Sir, why dont u direct 1 film of Rajini sir
Idha avarakitaye solunga
prabhu, do u want to join in politics....?
No.
what are your plans for directing Tamizh movie...
Next film is Tamildhan pa
hello sir,i watched urz latest movie wanted..it was awesome..especially the action stunts and the acting of prakash raj,simply fabulous.when can we xpect urz next movie?
Thanks for watching. Soon you will see another Hindi movie
Do you watch dance reality shows on TV?
Not much.
Who would you like to choreograph?
Anybody who is interested
Whats your reactions to the demise of the great, Michael Jackson?
Crying
Who is the best dancer in Kollywood - after you, of course?
Vijay, Simbu, Dhanush and Jayam Ravi
I know item numbers sound silly, but if a director wanted you to do a special appearance as a dancer, would you agree?
No problem. I will if I am convinced
we need to c u dancing for rehman tunes,when it is going to happen,need 2 c muquabala agian
Even I want to
Your favourate female actor?
Sreedevi
when is your next telugu movie?
Not yet decided
When you going to start the film about Your and my favorate micheal jackson?
Idhu edho pudhu ideava irukke. Nalla idea
Why not direct Kannada movie?...
No offers
The reason for your sudden disappearance in Kollywood?
because of the Hindi movie Wanted
Dear prabhudeva, wat do u feel r u a better director than an actor?
Therilaya
which life do you prefer more. Actor? Director? Choreographer?
Choreographer
if you really want to direct one hero means who it will be ?
Kamal sir
Prabhudeva ji are you there ?
Yes, I am always here.
List Best dancing heros in India ????
Chiranjeevi, Hrithik, Govinda, Vijay, Allu Arjun and many more
vannakam anna epdi irukkenga???
Nalla iruken. Neenga eppadi irukenga
Hiiiiiiiiiii !!! Hellllllllllllllo
Hi!
hi this is Karthik here
Hi! This is Prabhu here :-)
friends???
Many
school name
Santhome Higher Secondary School
Hai sir,Between Vijay n Salman who is better dancer?
Vijay
what is your next picture released in bollywood
My next is a Tamil film. The one following that will be a Hindi film
ur Hindi movies Wanted is Super Hit
Rombo thanks!
Sir ur next film in vijay u direction?
Not anytime soon. Later maybe
Hai sir ur movies always are very nice and ur dance also very nice. u are same to micle jackson
Thanks
How is ur life
Twist & turns and U turns and a rollercoaster ride
Hai sir How are u
Fine. How are you?
Hi prabhu anna vanakkam
Vannakkam
Hi, do you think any day you might try an offbeat movie?
Yeah, I will
Hi Prabhu Sir! Im a big fan of you! I just would like to ask you...who portrayed the female lead of the film better Asin or Ayesha?
In Tamil Asin....Hindi Ayesha

வில்லி ஆகிறார் மோனிகா

ஏய்... அவ்ளோ...தான் நீ...’ சொர்ணம்க்கா ஸ்டைலில் அதிர குரல் கொடுக்கிறார் மோனிகா. எல்லாம் ஒரு ஹோம் ஒர்க் தானாம். என்னதான் அந்த ஹோம் ஒர்க் என்று விசாரித்துப் பார்த்தால்... மோனிகாவுக்கு அமைதியான கேரக்டரில் நடித்து நடித்து போரடித்து விட்டதாம். ஒரு ஹாட்டான வெயிட்டான வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதுதான் மோனிகாவின் இப்போதைய ஆசையாம். இந்த மாதிரி கேரக்டர் உள்ள படமாக இருந்தால் உடனே கால்ஷீட் தரேன் என்று தமது மேனேஜர் மூலம் தூது விட்டுக் கொண்டிருக்கிறார் மோனிகா. இவருக்கு வில்லி ரோல் மாடல் ‘திமிர்’ படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி தானாம். ம்... தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு வில்லி ரெடி....

விக்ரம் தயாரிப்பில் நகரம்

‘ராவணன்’ அதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் படம் என நடிப்பில் பிஸியாகிவிட்ட விக்ரம், தயாரிக்கும் படம் நகரம்.
இந்தப் படத்தை இயக்குபவர் ‘சுப்ரமணியபுரம்’ சசிகுமார். இந்தப் படத்தின் கதை நகரம் சம்பந்தப்பட்டது என்பதால் நகரம் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். அவர்களுடன் ஹீரோயினாக நாடோடிகள் அபினயாவும் நடிக்கிறார்.
 
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் புதுமுகங்களே நடிப்பார்கள் என்று தெரிகிறது. படத்திற்கு இசை சசிகுமாரின் குருநாதர் ஜேம்ஸ்வசந்தனேதான்.

பிரவிண் காந்த் இயக்கும் படம்

‘ரட்சகன்’ என்ற பிரமாண்ட படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆன பிரவின்காந்த் அந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் குஞ்சுமோனை மண்ணைக் கவ்வ வைத்தார்.
அதற்குப் பிறகு ‘ஜோடி’ படத்தை எடுத்தார் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ‘ம்... இனி என்ன... நடிப்பு தான்’ என்று நடிப்பில் இறங்கியவர் சர்ரென வழுக்கினார். தற்போது விளம்பரப் படங்களை எடுத்து வருகிறார் பிரவிண்காந்த். இவர் லலிதா ஜூவல்லரிக்காக எடுத்த விளம்பரப் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. இதனால் உற்சாகத்தில் துள்ளிக் குதித்த லலிதா ஜூவல்லரி நிறுவனம் பிரவிண் காந்த் திறமையைப் பார்த்து அசந்து போய்விட்டதாம். உடனே கூப்பிட்டு ‘படம் தயாரிக்கிறோம் என்றும் அதை நீங்கள் தான் இயக்குகிறீர்கள்’ என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளது லலிதா ஜூவல்லரி. ஹீரோ ஹீரோயின் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சிக்ஸ் பேக் கவிஞர்

பாடலாசிரியர் விஜய்க்கு கதாநாயகநாக நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையை நிறைவேற்றி வைத்தப் படம்தான் ‘ஞாபகங்கள்’. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவிகா நடித்திருந்தார். காவியக் காதல் அது இது என்று ஏகப்பட்ட பில்டப்களைக் கொடுத்து இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்டார்கள். ஆனால் படம் வந்த வேகத்தில் ஓட்டம் பிடிக்க, செய்வதறியாமல் திகைத்த விஜய் ஒரு வழியாக தன்னைத் தேற்றிக் கொண்டார். சுற்றிலும் இருந்தவர்கள் எல்லாம் இனிமேல் இந்த மாதிரி காவியக் காதலை படம்பிடிக்கிறதை விட்டுட்டு கமர்ஷியலுக்கு மாறுறதுக்கு வழியப் பாருங்க... என்று செல்லமாய் கோபித்துக் கொள்ள இயக்குநர்களைத் தேடிப் பிடித்து கதை சொல்லுமாறு தொல்லை கொடுத்து வருகிறாம் விஜய். இந்நிலையில் ஆக்க்ஷன் படம் பண்ணுவது என்று முடிவாகி விட, இப்போது ஜிம்முக்கு சென்று சிக்ஸ் பேக்... முயற்சியில் இருக்கிறாராம் இந்த வித்தக கவிஞர்.

Sunday, October 11, 2009

இனி, பிற ஏடிஎம்களைப் பயன்படுத்த கட்டணம்!

கணக்கு வைத்துள்ள வங்கி தவிர்த்த பிற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்த இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு முறைப்படி வெளியாகிவிட்டது.

மூன்றாம் தரப்பு ஏடிஎம்களைப் பயன்படுத்த முன்பு ரூ.20 தொடங்கி ரூ. 100 வரை கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன.

ஆனால் கடந்த ஆண்டு அனைத்து ஏடிஎம்களிலும் கட்டணம் ஏதுமின்றி பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த முறை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை மாதத்தில் 5 முறைக்கு மேல் உபயோகித்தால் 6வது பயன்பாட்டிலிருந்து ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் தலா ரூ.20 வீதம் வசூலிக்கப்படும் என இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல, அதிகபட்சம் ரூ 10000 மட்டுமே ஒவ்வொரு முறையும் எடுக்க முடியும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

Source : Other Websites

சூர்யா ஏன் அப்படி பேசினார்?

Surya
நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடிகர் நடிகைகளின் ஆபாசப் பேச்சுக்கு முதல் சுழி போட்டவர் நடிகர் சூர்யாதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பத்திரிகையாளர்களின் இப்போதைய கோப லிஸ்டில் விவேக்குக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளவர் சூர்யாதான்.

பத்திரிகையாளர்கள் அனைவரையுமே பொத்தாம் பொதுவாக ஈனப்பயல்கள் என்றும், இவர்களை நசுக்க வேண்டும் என்றும் இவர் அந்தக் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியது:

சமுதாயத்துக்கு வழிகாட்டியாக பத்திரிக்கைகள் இருக்க வேண்டும். வயிற்றை கழுவுவதற்காக இப்படி அவதூறு எழுதுகிறார்கள். இவர்களை சும்மா விடக்கூடாது. இப்போதே நசுக்கிவிட வேண்டும்.

பொழப்புக்காக அசிங்கத்தை எழுதும் ஈனப்பயல்கள் இவர்கள். நடிகர் சங்கம் சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை [^] எடுக்க குழு அமைக்க வேண்டும். அதற்கான செலவை நான் ஏற்கிறேன். அந்த குழுவைக்கொண்டு அவதூறு எழுதுபவர்களை நசுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டம் [^] நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். அப்புறம் முக்கியமானது... சீட்டுக்கடியில் போட்டோ எடுக்காதீங்க, என்றார் கடுப்புடன்.

எல்லாம் சரிதான்... உள்ளாடை வெளியில் தெரிய குட்டைப் பாவாடை போட்டுக்கொண்டு கேமராவுக்கு போஸ் தரும் த்ரிஷாக்கள், ப்ரியா மணிகள், நயன்தாராக்களிடம் இந்த அறிவுரையை முழங்கியிருக்கலாமே சூர்யா!

'போல்டு' தீபிகா!

Deepika Padukone
பர்ஹான் அக்தாரின் எதிர் வரும் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தில் படு துணிச்சலான குணம் உடைய, தன்னம்பிக்கையுடன் கூடிய பெண் கேரக்டரில் நடிக்கிறாராம் தீபிகா.

இந்த கேரக்டர் குறித்து யாரேனும் கேட்டால் படு உற்சாகமாக விளக்க ஆரம்பித்து விடுகிறார் தீபி. கார்த்திக் [^] காலிங் கார்த்திக் படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் ஆகும். அதில் நான் மிகவும் துணிச்சலான, தைரியசாலியான, தன்னம்பிக்கை நிறைய உடைய பெண் [^]ணாக வருகிறேன். இது எனக்கு உற்சாகமான கேரக்டராக உள்ளது என்கிறார்.

சரி படத்தின் கதை என்ன தெரியுமா... படத்தின் ஹீரோவுக்கு அவரிடமிருந்தே அடிக்கடி போன் கால்கள் வருகிறதாம். வித்தியாசமாக இருக்கிறதா, படத்தைப் பார்த்தால் இன்னும் வினோதமாக இருக்கும் போலத் தோன்றுகிறது.

தீபிகா கடைசியாக நடித்த படம் [^] லவ் ஆஜ் கல். அப்படத்திற்கு செமத்தியான வரவேற்பும், வசூலும் கிடைத்ததாம். இதனால் தீபிகா படு உற்சாகமாக தனது புதிய படத்தில் நடிக்கக் காத்திருக்கிறார்.

கமல்-ரஜினி இரு கண்கள்: கருணாநிதி

ரஜினிகாந்தும் கமல்ஹாஸனும் சினிமாவின் இரு கண்கள் என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.

அகில இந்திய திரைப்பட தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் [^] கருணாநிதி [^], கலையுலக படைப்பாளி விருதினைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது:

ரஜினிகாந்தை, கமல்ஹாசனை பற்றியெல்லாம் நான் கூற வேண்டாம். அவர்களைப் பற்றி நான் சொல்வது- என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொள்வதைப்போல!. அப்படியென்றால் மற்றவர்களைப் பற்றி நீ வேறுபடுத்தி புகழ்கிறாயா என்று யாரும் எண்ணிக் கொள்ளக் கூடாது.

என்ன இருந்தாலும் அவர்கள் என்னுடைய உணர்வோடு, என்னுடைய உறவாக, தமிழகத்திலே, திரையுலகத்திலே, அந்த நட்பின் சின்னங்களாக அவர்கள் விளங்குகிறார்கள். கமல்ஹாசன் ஆனாலும், ரஜினிகாந்த் [^] ஆனாலும் அவர்கள் எல்லாம் இன்றைக்கும் கலை உலகத்திலே இரு கண்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

மற்றவர்கள் யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. உடல் என்றால் கண்கள் மாத்திரமல்ல, வேறு பல முக்கிய அவயங்களும் இருக்கின்றன. அந்த அவயங்களை நான் சொன்னதாக நீங்கள் கருதிக் கொள்ள வேண்டும். இப்படி எல்லோரும் ஒருமித்த கருத்தோடு, அந்த உணர்வோடு இங்கே கூடி இந்த விழாவினை நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

சிம்பு வீட்டு முன் கார் நிறுத்தியதால் தகராறு!

சிம்பு வீட்டு முன் வெளியூர்க்காரர் ஒருவர் காரை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டு போலீஸ் [^] பிரச்சினையாகி உள்ளது.

சென்னை தியாகராய நகரில் இந்தி பிரசார சபா சாலையில் நடிகர் [^] சிம்புவின் வீடு உள்ளது. இந்த வீட்டை ஒட்டியுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிம்புவின் வீட்டு முன்பு ரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் சிம்பு வீட்டாருக்கும் வாகனம் நிறுத்துபவர்களுக்கும் இடையே பெரும் பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று அந்த மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு வந்த ஒருவர் தனது காரை சிம்பு வீட்டு முன்பு நிறுத்தினார். இதற்கு சிம்புவின் வீட்டு வாட்ச்மேன் எதிர்ப்பு [^] தெரிவித்தார்.

இதனால் அந்த நபருக்கும், வாட்ச்மேனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் வாட்ச்மேன் முரளிக்கு ஆதரவாக சிம்பு வீட்டில் இருந்து பலர் திரண்டு விட்டனராம். கிட்டத்தட்ட அடிப்பது போல பாய்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து காரை நிறுத்திய நபருக்கு ஆதரவாக திருமணத்துக்கு வந்தவர்களும் கூட்டமாக சிம்பு வீட்டு முன் திரண்டு பெரும் ரகளையில் இறங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சிம்பு வீட்டிலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தி.நகர் ஆய்வாளர் சரவணன் அங்கு விரைந்து வந்து வாட்ச்மேன் முரளியிடம் விசாரணை [^] நடத்தினார்.

பின்னர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

மனித உரிமை சிக்கலில் ஆட்டநாயகன்!

ஆட்ட நாயகன் என்றொரு படம் [^]. பகீரதப் பிராயத்தனம் செய்தும் எடுபடாத பி வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு [^] சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது.

ஒரு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விடுவது போல ஒரு காட்சியை எடுக்க வேண்டும். இதற்கு நிஜ குழந்தையையே பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் விரும்பினாராம்.

இவ்வளவு விபரீதமாக நமது கிரியேட்டிவிட்டி இருக்கலாமா என்று யாரும் கேட்கவில்லை. மாறாக, இயக்குநர் [^] சொன்னதைக் கேட்டு குழந்தை ஒன்றை காட்சிக்குப் பயன்படுத்த வாடகைக்குப் பிடித்திருக்கிறார்கள்.

அந்தக் குழந்தையை கயிற்றில் கட்டி சின்ன துளைக்குள் இறக்குவதும் ஏற்றுவதுமாக காட்சி. கிட்டத்தட்ட பத்துமுறை இப்படி ஏற்றி இறக்கியதும் குழந்தை வீறிட்டு அழுததை பார்த்த சிலர், காட்சியை செல்போனில் வீடியோவாக எடுத்து மத்திய குழந்தைகள் நல அமைப்புக்கும் மனித உரிமை ஆணையத்துக்கும் புகாராக அனுப்பி விட்டார்களாம்.

விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட இந்த அமைப்புகள் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட, இந்த விஷயம் எப்படி வெளியில் போனது என்று மேட்டரை கசிய விட்டவர்கள் மீதெல்லாம் கடுப்பிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

தத்ரூபம் இருக்க வேண்டியதுதான், அதற்காக குழந்தையின் உயிருடன் இப்படியா விளையாடுவது?

சூர்யா படத்துக்கு சி‌க்கல்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடியாக இருந்து பின் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ. ஆன பிரபல ரவுடி ப‌ரி‌ட்டால ரவியை பற்றியது. இதில் ப‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். ரவியின் வலதுகரமாக இருந்து, பிறகு அவனது சாவுக்கு காரணமாக அமைந்த அவரது கூட்டாளி சூ‌ரியாக சூர்யா நடிக்கிறார்.

ரக்த ச‌ரித்திராவின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூ‌ரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரவியின் மனைவியும் அவரது ஆதரவாளர்களும் வர்மா படப்பிடிப்பை நடத்தக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனந்தபூ‌ரிலிருந்துதான் ப‌ரி‌ட்டால ரவி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டா‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப‌ரி‌ட்டால ரவி ஒரு ஹீரோ, அவரை ரவுடியாக வர்மா சித்த‌ரிக்கிறார் என்பது ரவி மனைவியின் குற்றச்சாட்டு. வர்மா இதற்கு விளக்கமளித்தப் பிறகும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதன் காரணமாக படப்பிடிப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வர்மாவின் பூர்வீகம் ஆந்திரா. அவரது முதல் படம் சிவா. தமிழில் உதயம் என்ற பெய‌ரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் அவருக்கு ச‌ரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் கோபித்துக் கொண்டு இந்திக்கு சென்றார்.

அதன் பிறகு பல வருடங்கள் அவர் தெலுங்கில் படம் இயக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்குக்கு திரும்பி வந்திருக்கிறார். இப்போதும் பிரச்சனை. என்ன செய்யப் போகிறார் வர்மா?

ஆவி, பேயில் நம்பிக்கையில்லை – சிந்து மேனன்

சிந்து மேனன்... தமிழுக்கு கிடைத்திருக்கும் திறமையான கதாநாயகி. கடல்பூக்கள், யூத், சமுத்திரம் என முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும், ஈரம் படமே அவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது. கேரளாவில் பிறந்து, தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டு, பெங்களூருவில் வசித்துவரும் அவருடனான சந்திப்பிலிருந்து...

ஈரத்திலிருந்து தொடங்கலாமா?

எல்லா நடிகைகளுக்கும் நல்ல ஹீரோ, திறமையான இயக்குனர், பெ‌ரிய தயா‌ரிப்பு நிறுவனம் அமைய வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது. அந்த நேரத்தில் வந்த வாய்ப்புதான் ஈரம்.

எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது?

தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஈரத்துக்கு முன்னால் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்களில் என்னுடைய கேரக்டர்கள் பேசப்படவில்லை. அதே நேரம் மலையாளம், தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்து‌க் கொண்டிருந்தன.

நல்ல கேரக்டர் வந்தால் தமிழில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். அந்த நேரத்தில் பத்தி‌ரி‌க்கையில் வந்த என்னுடைய புகைப்படங்களைப் பார்த்த இயக்குனர் அறிவழகன் ஈரம் கதையுடன் என்னைப் பார்க்க வந்தார். பெ‌ரிய பேனர், திறமையான இயக்குனர், நல்ல கேரக்டர், உடனே ஒப்புக் கொண்டேன்.

மேக்கப் இல்லாமல் நடித்திருந்தீர்கள்...?

இதற்கு முன்பும் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறேன். ஒரு சாதாரண ஹவுஸ் ஒ‌ய்ஃப் எப்படி இருப்பாரோ அதே மாதி‌ரி திரையில் தெ‌ரிய வேண்டும் என்பதால் மேக்கப் போடவில்லை.

ஈரம் படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என ஒப்பந்தம் போட்டிருந்ததால்தான் உங்களை வேறு தமிழப் படங்களில் பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார்களே?

அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லை. நானாகதான் ஈரம் முடியும் வரை வேறு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஈரம் வெளிவந்தால் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்.

தற்போது என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் கேரக்டர் நன்றாக இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறேன். தெலுங்கில் சுபத்ரா, பிரேமே பில்லுஸ்துந்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.

உங்களைத் தொடர்ந்து உங்கள் அண்ணனும் சினிமாவுக்கு வரப்போவதாக செய்திகள் வருகிறதே?

என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அதில் அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அண்ணன் மனோ‌ஜ் கார்த்தி. அவருக்கு நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. விரைவில் அவர் நடிக்கும் படம் தொடங்கப்பட உள்ளது.

ஈரத்தில் ஆவியாக நடித்திருக்கிறீர்கள். ஆவி நம்பிக்கை உங்களுக்கு உண்டா?

ஆவி, பேயில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே இருந்ததில்லை. அதெல்லாம் சுவாரஸியமான கதை அவ்வளவுதான்.

ஆன்மீகமா, அரசியலா... கோடிட்டு காட்டும் ரஜினி!

தனது எதிர்காலப் பாதை என்னவென்பதை ரசிகர்களே புரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான் ரஜினிகாந்த் தனது ஆன்மீகப் பயணம் குறித்த வீடியோவை விஜய் டிவிக்குக் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் 'நடந்தது என்ன?' என்ற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரஜினியின் பாபா குகைப் பயண அனுபவங்கள் பெருமளவு மக்களால் பார்க்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது ரஜினி இந்தப் பயணத்தை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட, இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதி நாளன்று பாபா ஆஸ்ரமத்தில் அவர் யோகா தீட்சை பெறும் வீடியோவையும் காட்டினர்.

இந்த வீடியோ இதுவரை யாரும் பார்க்காதது. ரஜினியே விஜய் டிவிக்கு கொடுத்தது இது என்றும் கூறப்பட்டது (இந்த வீடியோ மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை மறு ஒளிபரப்பாகியுள்ளது.)

இதுகுறித்து இப்படிக் கூறுகிறார்கள்:

"ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த நிலையை தெளிவுப்படுத்ததான் இந்த நிகழ்ச்சி என்கிறது ரஜினி தரப்பு. ஆன்மிகமா? அரசியலா? என்பதற்கு ரசிகர்களே விடை தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகதான், ரஜினியே தனது இமயமலை பயணக் காட்சிகளை விஜய் டி.வி. நிர்வாகத்துக்கு கொடுத்து உதவியிருக்கிறார் என்கிறது ரஜினி வட்டாரம்...".

தமிழர்களுக்கான பாரதிராஜா விரதம்; கருணாநிதிக்காக கலைப்பு!

கடந்த மக்களவைத் தேர்தலில் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தவர் பாரதிராஜா. திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக தேர்தலின் போது தீவிர பிரச்சாரமும் செய்தார். இவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குநர்கள் பிரச்சாரக் களத்தில் இறங்கினர்.

ஆனால் திமுக அணியே பெரும்பாலான இடங்களை வென்றது. அதன் பிறகுதான் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது.

அதைக் கண்டித்துப் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்ததும், அந்த வழக்கில் அவர் ஆஜராகி வருவதும் அனைவரும் அறிந்ததே.

இதனால் எந்த மேடையிலும் பேசுவதில்லை, மவுன விரதம் அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்திருந்தார் பாரதிராஜா.

தற்போது திடீரென தனது உண்ணாவிரதத்தைக் கலைத்து விட்டார் பாரதிராஜா.

இதுகுறித்து சென்னையில் நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர் மாநாட்டில் அவர் பேசுகையில்,

"ஈழத் தமிழருக்காக மவுனம் காத்தேன். கலைஞருக்காக இப்போது மவுனம் கலைக்கிறேன். இதற்கு காரணம் அவர் மீது கொண்ட அன்புதான். இது அவருக்குப் புரியும்.

அவருக்கும் எனக்கும் தந்தை, மகன் உறவு. மகன் மீது அவருக்கு கோபம் இருக்கலாம். அது பற்றி அவரிடம் நான் தனியாக பேசி தீர்த்து கொள்வேன். உலக தமிழர்கள் நீங்கள் நிறைய செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

ஆவேச நடிகர்கள்... சினிமா பிரஸ் கிளப் கண்டனம்

பத்திரிகையாளர்கள் மீது நடிகர்கள் நடத்திய வார்த்தை தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர் சங்கங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போராட்டங்களையும் கண்டனங்களையும் எழுப்பி வருகிறது.
சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் விவேக்கின் கொடும்பாவியை எரிக்கிற முடிவு, போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சினிமா பிரஸ் கிளப் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-

சமீபத்தில் ஒரு நடிகை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியை விமர்சிக்கவும் கண்டனக் கூட்டம் நடத்தவும் அந்த செய்தி தவறு என்று வாதிடவும் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதும் அவர், அவர்களின் ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயக உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.

அதற்காக இதையே ஒரு காரணமாக கொண்டு ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களையும் பொது மேடையில் கேவலமாக பேசுவதும் இழிவுபடுத்தி பேசியதையும் சினிமா பிரஸ் கிளப் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக 07/10/2009 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய கண்டன கூட்டத்தில் நடிகர் விவேக், சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட பலர் பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தி பேசியது கடும் கண்டனத்திற்குரியது.

செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர்வதும், அந்த வழக்கின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதும் காலம் காலமாக நடந்து வருகிற ஒன்றுதான். ஆனால் முதன் முறையாக ஒரு செய்தி வெளியிட்டதற்காக பெண் கொடுமை சட்டத்தில் செய்தி ஆசிரியர் ஒருவரை கைது செய்திருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக சினிமா பிரஸ் கிளப் கருதுகிறது.
எனவே கைது செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சினிமா பிரஸ் கிளப் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனக்கு மார்க் போடும் வாத்தியார்? ஃபெப்ஸி மாநாட்டில் கமல்

அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இதில், முதல்வர் கலைஞருக்கு உலக கலை படைப்பாளி விருது வழங்கப்பட்டது.
விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்களும், நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டார்கள். முதல்வரை பாராட்டி கமல்ஹாசன் பேசியதாவது-

கலைஞரின் வசனம் பேசி காட்டிதான் நடிகன் ஆனேன். நடிகர் திலகம் மடியில் இடம் பிடித்தேன். என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர் பாராட்டி இருக்கிறார். பத்மஸ்ரீ என்றார். ஏற்றுக் கொண்டேன். கலைஞானி என்றார். ஏற்றுக் கொண்டேன். அவர்தான் என் நடிப்புக்கு மார்க் போடும் வாத்தியார் என்றார்.

இறுதியாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது-

திரைப்பட தொழிலாளர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டி தருவதற்காக பணம் ஒதுக்க சொல்லிவிட்டுதான் இங்கே வந்திருக்கிறேன். தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் வேண்டுமென்று இங்கே கேட்டார்கள். சின்ன திரையுலகினரையும் சேர்த்து திரைப்பட நல வாரியம் புதிதாக உருவாக்கப்படும். இங்கு பேசிய வி.சி.குகநாதன் விருது ஒரு கேடா என்று யார் யாரோ கேட்பதாக குறைபட்டுக் கொண்டார். எனக்கு எப்போதும் இதுபோன்ற விமர்சனங்களை விமர்சிப்பது பிடிக்காது. பெரியார், காமராஜர், அண்ணா படாதபாடா? நாம் பட வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது என்று எண்ணிக் கொள்வேன். வருத்தப்பட மாட்டேன். அப்படியே வருத்தப்பட்டால் அந்த வருத்தம் போக்கும் மருந்துதான் நீங்கள் தரும் மகிழ்ச்சி. என் பயணத்தை களைப்பின்றி நடத்த துணை நிற்கும் உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.