Friday, October 23, 2009

Naanayam Trailer

அடுத்தது என்ன? நயன்தாரா

பிரபுதேவாவுடன் காதல், கல்யாணம், கத்தரிக்காய் என்று ஏகத்துக்கும் சமீபகாலமாக மீடியாக்களுக்கு தீனி போட்டு வந்த நயன்தாரா... அந்த பிரச்சனையினால் ஏகப்பட்ட டென்ஷனுடன் இருந்தார். இப்போது அந்த டென்ஷன் போய் இன்னொரு டென்ஷன் வந்துவிட்டது. இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘ஆதவன்’ படம் மிகப்பெரிய அளவுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் இந்தப் படத்தின் டாக்... புஷ் என்று... புஸ்வானமாகிவிட, ‘சே... காலைவாரிடுச்சே... இந்தப் படம்...’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். சரி, அடுத்தது என்ன? என்று பார்த்தால் இங்கே மார்க்கெட்டில் தமன்னா உச்சத்திற்கு போய் தமன்னா பீவர் வந்துவிட, அடுத்து என்ன பண்ணலாம் என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம்.

பிரபுதேவாகிட்ட வாய்ப்பு கேட்கிறது...!!!!!!!

கூவி அழைக்கும் ரம்யா நம்பீசன்

நான் கிளாமராக நடிக்க ரெடி... நான் கிளாமராக நடிக்க ரெடி... என்று கோடம்பாக்கம் முழுவதும் கேட்கிற அளவுக்குக் கூவித்தான் பார்க்கிறார் ரம்யா நம்பீசன் ஆனால் வாய்ப்புகள் தான் யாரும் கொடுத்தபாடில்லை.
‘ராமன் தேடிய சீதை’ படத்தில் ஐந்து கதாநாயகிகளில் ஓருவராக நடித்தவர் ரம்யா நம்பீசன். அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. முதலில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்... என்று கறாராகப் பேசியவர் வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழியின்றி கவர்ச்சியாக நடிக்க நான் தயார் என்று போஸ்டர் அடிக்காத குறையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
 
‘ஆட்ட நாயகன்’ படத்தில் ஷக்திக்கு ஜோடியா இப்போது நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். தெலுங்கில் அஜெய் ஜோடியாக ‘சாரி வீரராஜி’ என்கிற படத்திலும் நடித்துள்ள ரம்யா நம்பீசன், ‘விக்ரம், சூர்யா மட்டும் தான் படத்துக்கு படம் வித்தியாசமா உடம்பை சேஞ்ச் பண்ணுவாங்களா... எங்களாலும்... முடியும்... அதற்கு சரியான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் போதும்...’ என்கிறார்.

நியூயார்க்கில் சிம்பு, த்‌ரிஷா

நியூயார்க்கில் இந்த தீபாவளியை சிம்பு, த்‌ரிஷா ஒன்றாக கொண்டாடியிருக்கிறார்கள். உடனே கற்பனையை எக்குதப்பாக எகிற விடாதீர்கள். அவர்கள் நியூயார்க் சென்றது படப்பிடிப்புக்காக. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உதவி இயக்குனராக நடிக்கிறார் சிம்பு. அவரது காதலியாக த்‌ரிஷா. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நியூயார்க்கில் எடுப்பதற்காக தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா டீம் அமெ‌ரிக்காவில் முகாமிட்டுள்ளது.

தனது கே‌ரிய‌ரில் முக்கியமான படமாக இதனை சிம்பு கருதுகிறார். கவுதம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என 25 வருட திரை வாழ்க்கையில் இது சிம்புவுக்கு முற்றிலும் புதிய அனுபவம். ரஹ்மான் ரசிகையான த்‌ரிஷா அவரது இசையில் நடிப்பது இதுவே முதல் முறை.

முற்றிலும் வித்தியாசமான காதல் கதையாக உருவாகிவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து இயக்கயிருக்கிறார் கவுதம்.

சிந்து துலானி காதல் திருமணம்

சுள்ளான் படத்தில் அறிமுகமான சிந்து துலானி விரைவில் தனது காதலரை கை பிடிக்கிறார். இவர்களது காதல் கதைதான் இப்போது ஹைதராபாத்தின் ஹாட் டாபிக். சுள்ளான் படத்தில் அறிமுகமான துலானி, பிறகு சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்தார். அவர் நடித்த ஹீரோயின் ஓ‌ரியண்ட் படம் அலையடிக்குது. துரதிர்ஷ்டவசமாக துலானியின் நடிப்பு கடலில் எந்த அலையும் எழவில்லை. இறுதியில் மஜா படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். அப்படியும் வாய்ப்புகள் வரவில்லை.

தமிழைவிட தெலுங்கில் சிந்து துலானிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. இந்நிலையில் கிக் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டிக்கும் துலானிக்கும் காதல் ஏற்பட்டதாக தெ‌ரிகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஆக்கர் ஸ்டுடியோ பற்றி சௌந்தர்யா

சினிமா தயாரிப்பிலும் இறங்கிவிட்டோம் ஆக்கர் ஸ்டுடியோஸ் சார்பில் படங்கள் தயாரிக்கிறோம். முதல் படமாக ‘கோவா’வைத் தயாரிக்கிறோம். வெங்கட்பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து, ஏராளமான கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து எங்களது அடுத்த படத்தின் தயாரிப்புப் பணியைத் துவக்குவோம். பல புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பளிக்க ஆசைப்படுகிறேன். அதற்கான திட்டங்களுடன் செயல்படவிருக்கிறோம். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கான நல்லதொரு ப்ளாட் பார்மாக எங்கள் ஆக்கர் ஸ்டுயோ இருக்கும்...’ என்கிறார்.

Tuesday, October 20, 2009

நயனுடன் பிணக்கு: பிரபுதேவாவின் புதுக்காதலி ஆயிஷா?

இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுடன் பிரபுதேவா நெருக்கமாகிவிட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

வில்லு படத்தில் நடித்ததிலிருந்து பிரபு தேவா - நயன்தாராவுக்கிடையே காதல் பற்றிக் கொள்ள, அது தாலி கட்டாமலேயே குடித்தனம் நடத்தும் அளவுக்கு 'டெவலப்' ஆகிவிட்டதாக செய்திகள் [^] வந்தன.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் உள்ள பிரபுதேவா குடும்பத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இன்னொரு முறை என் கணவருடன் பார்த்தால் நயன்தாராவை உதைப்பேன் என்று பிரபுதேவா மனைவி [^] ரம்லத் பத்திரிகைகளுக்கு ஆவேசப் பேட்டி கொடுக்க, பயந்துபோன நயன்தாரா, சென்னைக்கு வருவதையே குறைத்துக் கொண்டார்.

இதை இயக்குநர் [^] ரவிக்குமார் போன்றவர்களே கவலையுடன் சொல்லத் தொடங்கிவிட்டனர். இன்னொரு பக்கம் பெரிய நடிகர் [^] ஒருவரும் நயனுக்கு புத்திமதி சொன்னாராம். முதலில் இதைப் புறக்கணித்த நயன், இப்போது 'தலைவர் சொன்னா கேட்டுக்கறேன்' என்று சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பிரபுதேவாவுக்கும் பிரபல இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுக்கும் இடையே புது நட்பு மலர்ந்திருப்பதாகவும், இருவரும் மிக நெருங்கிப் பழகுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நெருக்கம் பற்றி கேள்விப்பட்ட நயன்தாரா, பிரபுதேவாவுடன் பேசுவதைக் கூட நிறுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.

சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி, இந்தியில் இப்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் வாண்டட் பட நாயகிதான் இந்த ஆயிஷா தாகியா என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிஷாவுக்கு சமீபத்தில் தான் திருமணமானது.

திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நிதியுதவி...

கையில பணம் இருந்தாலும் கொடுக்கிறதுக்கு மனசு வேணும்ல... அந்த மனசு இருக்கிறதுனாலதானோ என்னவோ... திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான திரிசக்தி சுந்தர்ராமன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். ‘வல்லமை தாராயோ’ என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது ‘கொலை கொலையா முந்திரிக்கா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் இவர். அடிப்படையில் எழுத்தாளரான ‘திரிசக்தி’ சுந்தர்ராமன் எழுத்தாளர்களின் கஷ்டத்தை ரொம்பவே புரிந்திருக்கிறார். ‘சினிமாவில் நடிகர் நடிகைகள் படங்கள் ஹிட் ஆகும் போது உச்சத்திற்குப் போய்விடுகிறார்கள். ஆனால் எழுத்தாளர்கள் மட்டும் தான் பாவம். படம் ஹிட் ஆனாலும் அப்படியே இருப்பார்கள். இதற்கு உதாரணமாக ‘டைட்டானிக்’ படத்தின் கதைஆசிரியரையே சொல்லலாம். உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படம் 300 கோடி வசூலை அள்ளியது. ஆனால் அந்த படத்தின் கதையாசிரியருக்கு 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. உலகம் முழுக்க சினிமா கதை ஆசிரியர்கள் நிலை இதேதான்... இந்நிலை மாற வேண்டும்.’ என்கிறார் திரிசக்தி சுந்தர்ராமன்.

உதயநிதி நடிக்கப் போகிறாரா...?

‘குருவி’, ‘ஆதவன்’ படங்களைத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கப் போகிறார். இந்த செய்தி ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் கசிய ஆரம்பித்துக் கொண்டிருந்ததுதான். இருந்தாலும் உதயநிதியை கே.எஸ். ரவிக்குமார் ‘ஆதவன்’ படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைத்திருந்தார். இதற்கே தயங்கி தயங்கி தான் நடித்திருக்கிறார் உதயநிதி. இது தெரியவர இயக்குநர் தரணி, லிங்குசாமி, மிஸ்கின் ஒரு பெரும் படையே உதயநியை நடிகராக்கிப் பார்க்க ஆசைப்பட ஒரு வழியாக உதயநிதியும் தலையை ஆட்டியிருக்கிறாராம். ஆனால் நடிப்பதென்னவோ ரஜினி மகள் சௌவுந்தர்யா இயக்கித் தயாரிக்கும் படத்திலாம். இப்போது கோடம்பாக்கம் பரபரப்பது இந்த செய்தியைத்தான்.

மீண்டும் காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி?

இதுதான் இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு. விஜய்க்கு தொலைபேசியிலேயே கதை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் பாசில். இந்த காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பலமாகவே கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். விஜய் தனது ஐம்பதாவது படமான சுறாவில் தற்போது பிஸியாக இருக்கிறார். இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த புராஜெக்ட் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சின்ன கேப்பில் சிக்சர் அடிக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.

லிங்குசாமி விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். விஜய் ஓகே சொன்னால் படப்பிடிப்பை தொடங்க - பையாவுக்கு பிறகுதான் - அவர் தயார். ஏற்கனவே பாடிகாட் படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.

இந்நிலையில் பாசிலும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்யின் சினிமா கே‌ரிய‌ரில் திருப்புமுனையாக அமைந்த படம், பாசிலின் காதலுக்கு ம‌ரியாதை. அதனால் கதையை கேட்ட விஜய் சீ‌ரியஸாக அதுபற்றி யோசனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

நயன்தாராவின் ரொமாண்டிக் காமெடி

நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த ஒரே தமிழ்ப் படம், ஆதவன். அதுவும் தீபாவளிக்கு வெளியாகிவிட்டது. அடுத்து என்ன? தவித்துப் போன நயன்தாரா ரசிகர்களுக்கு தண்ணீர் லா‌ரியாக வந்திருக்கிறது ஒரு செய்தி. புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் நயன்தாரா.

சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாராவுடன் ஜோடி போடப் போகிறவர் ஆர்யா. இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.

வாசன் விஷுவல் வெஞ்சர் தயா‌ரிக்கும் இந்தப் பெய‌ரிடப்படாத படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சக்தி சரவணன். படத்தைப் பற்றி கேட்டபோது இயக்குனர் அளித்த கூடுதல் தகவல், இதுவொரு ரொமாண்டிக் காமெடியாம்.

சேலை கட்டினால் படுகிளாமராக இருப்பேன் - நமீதா

‘ஜெகன்மோகினி’ படம் வெளிவந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதைத் தொடர்ந்து நமீதா தமிழக மச்சான்களுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார். ‘நான் தமிழ்த் தவிர்த்து வேறு மொழிகளில் நடிக்கப் போக மாட்டேன்... இந்தியில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் போக மாட்டேன்... காரணம் என்னுடைய தமிழ் மச்சான்கள்தான். எனக்கு சேலை கட்டத் தெரியும் ஆனால் சேலை கட்டிவிட்டால் அவ்வளவுதான் இன்னும் படு கவர்ச்சியாக அல்லவா இருப்பேன்... அதைப் பார்த்து மச்சான்கள் எல்லாரும் கெட்டுப் போவார்கள்.... அதனால் தான் சேலை கட்டுவதில்லை... தமிழ் நாட்டு ரசிகர்கள் எல்லாருமே எனது மச்சான்கள்தான். ஆனால் என் மேனேஜர் ஜான் என்னோட பெஸ்ட் மச்சான்’ என்று பேசி கலக்கினார்.

ஆதவன்- திரை விமர்சனம்

நடிப்பு: சூர்யா, வடிவேலு, நயன்தாரா, முரளி, சரோஜாதேவி

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம்: கே எஸ் ரவிக்குமார்

தயாரிப்பு: ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் தொடர்பு: நிகில்

மின்சாரக் கண்ணா என்ற தனது தோல்விப் பட பார்முலா இந்த முறையாவது வெற்றியைத் தருமா என (விஷ) பரீட்சையில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். ரிசல்ட்? கடைசி பாராவைப் பாருங்க!

குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதி முரளியிடம் வருகிறது. உடனே அதில் சம்பந்தப்பட்ட ஒரு பிராடு டாக்டர், நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டு, கூலிக்கு கொலை செய்யும் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்.

முதல்முறை நீதிபதியைக் கொல்ல சூர்யா முயலும்போது இலக்கு தப்பி விடுகிறது. பின்னர் வடிவேலுவின் துணையோடு நீதிபதியின் குடும்பத்துக்குள் நுழைகிறார். அங்கே, சரோஜாதேவி, நயன்தாரா என ஒரு பெரும் பட்டாளத்தைச் சமாளித்து, அவர்களின் அன்பைப் பெறுகிறார்.

அங்கு போன பிறகுதான் தான் யார் என்பதைப் புரிந்து கொள்கிறார் சூர்யா. சூர்யாவின் பிளாஷ்பேக் என்ன? நீதிபதியை அவர் கொன்றாரா இல்லையா என்பது மீதிக் கதை.

ரமேஷ் கண்ணாவின் இந்தக் கதையில் லாஜிக் என்ற வார்த்தைக்கே இடமில்லை.

சூர்யா நினைத்தால் ஆகாயத்தையே வில்லாய் வளைப்பார்... அவரால் ஆகாத காரியமே இல்லை என்பதுதான் அவரது பாத்திரத்துக்கான சுருக்கமான விளக்கம்.

வடிவேல்தான் படத்தின் நிஜமான நாயகன்... அது கூட இடைவேளை வரைதான். அதற்கப்புறம் வடிவேலுவை ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரிதான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நயன்தாரா...அவருக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று புரியவில்லை. சரோஜாதேவி அண்ட் கோ கூட்டத்தோடு அவ்வப்போது வருகிறார், சூர்யாவுக்காக உருகிறார், கனவில் பாட்டுப் பாடுகிறார், க்ளைமாக்ஸில் காரில் தொங்குகிறார். அவ்வளவுதான்.

சரோஜா தேவி என்ற பழம்பெரும் நடிகை மீது ரசிகர்களுக்கிருக்கிற மரியாதையை முடிந்தவரை கெடுக்க முயற்சித்திருக்கிறார்கள் இந்தப் படத்தில்.

மறைந்த மலையாள நடிகர் முரளியின் நடிப்பு நிறைவு. ரமேஷ் கண்ணா எதற்காக வருகிறார் இந்தக் கதையில்... அது சரி, கதாசிரியராச்சே!

பின்னணி இசை கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை, 'அசிலி பிசிலி ரசாமளி...' என்றெல்லாம் மொழிக் கொலை செய்து வரும் பாடல்கள். ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஏன் இந்த கொலை வெறி?

கணேஷின் காமிரா இதம்.

ஆதவன் - இருபது வருடத்திற்கு முன்பு வர வேண்டிய படம் - ஏமாற்றமே

Monday, October 19, 2009

விஜய் கட்டப்போகும் பள்ளிக்கூடம்

 நடிகர் விஜய் ஓசையுடனும் ஓசை இல்லாமலும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். கட்சி ஆரம்பிக்கப் போகிறார்... அப்படி இப்படி என்று இவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறாராம். இப்போது இவர் ஏழைகளும் பயன்பெறும் விதத்தில் சென்னையை அடுத்த வேளச்சேரியில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டும் எண்ணத்தில் இருக்கிறாராம். இந்தப் பள்ளிக்கூடம் கம்ப்யூட்டர் வசதிகளைக் கொண்டு முன்னணி பள்ளிக்கூடங்களுக்கு இணையானதாக இருக்குமாம். இந்தப் பள்ளிக்கு மக்கள் நல்ல ஆதரவைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் விஜய்.

நல்ல விஷயங்களுக்கு எப்பவுமே நம்ம மக்கள் ஆதரவு தருவார்கள்.

சூர்யாவுக்கு பொருத்தமில்லாத கதை

சமீபகாலமாக தொடர்ந்து வித்தியாசமான படங்களையும் சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்து வந்த சூர்யாவுக்கு ‘ஆதவன்’ முந்தைய படங்களுக்கு ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் போது சற்றே உதறல் அடிக்கிறது.
‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களைத் தொர்ந்து வித்தியாசமான கதை களங்களை சூர்யாவிடம் எதிர்பார்த்த போது ‘அயன்’ வந்தது. பழைய கதைதான் என்றாலும் வேகமான திரைக்கதையால் படம் ஹிட்டானது. ஆனால் ‘ஆதவன்’ முற்றிலும் எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருக்கிறது. ஏற்கனவே பல தடவைகள் தாறுமாறாக அரைக்கப்பட்ட கதை இப்போது ‘ஆதவன்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. படம் பார்க்க வந்த ரசிகர்களில் பலரும் ‘வெத்துப் படம் இது’ என்று சொல்கிற அளவுக்கு புலம்ப வைத்த இந்த படம் முழுக்க முழுக்க சூர்யாவுக்கு சம்பந்தமில்லாத கதையைக் கொண்டு உள்ளது. ஒருவேளை சூர்யா அறிமுகமான புதிதில் இந்தப் படம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

உற்சாகத்தில் ஐங்கரன்

தொடர்ந்து பல அட்டர் பிளாப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ஐங்கரனுக்கு அத்திப் பூத்தார் போல் ‘பேராண்மை’ அமைந்திருக்கிறது.
ஐங்கரன் நிறுவனம் தமிழில் படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து தோல்வி மேல் தோல்வி தான் தொடர்ந்தது. பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘குசேலன்’ வாரிக் கொண்டு போய்விட... அடுத்து தயாரித்து வந்த ‘எந்திரன்’ செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அந்த நிறுவனம் சன் பிக்சர்ஸிடம் அந்தப் படத்தை கை மாற்றியது. இது இப்படி இருக்க, ஐங்கரன் தயாரித்து தீபாவளியில் வெளிவந்த ‘பேராண்மை’க்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இனிமே தப்பிச்சிக்கலாம்... என்கிற புது நம்பிக்கை இப்போது ஐங்கரனுக்கு கிடைத்துள்ளது. அடுத்து அவர்கள் தயாரிப்பில் இருக்கும் ‘அங்காடித் தெரு’ படத்தை இயக்குவது வசந்தபாலன் என்பதால் இந்தப் படமும் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் புது தெம்புடன் இருக்கிறது ஐங்கரன்.