Sunday, October 25, 2009

அஜீத்திற்கு தடையா? அதிர வைக்கும் சங்கம்!

நகுல் இடத்தை பிடிப்பார்கள் போல் தெரிகிறது அஜீத்தும், ஜெயம் ரவியும்! ஹையோடா என்று அவசரப்படாதீர்கள். இது தண்டனை சட்டம் பெப்சி விதிகளுக்கு உட்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நகுல் நடிக்கும் கந்தக்கோட்டை படத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தீர்மானித்தது பெப்சி என்று சொல்லப்படுகிற திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம். காரணம், இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் நகுல் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். இதில் எல்லா நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக வலியுறுத்தப்பட்டது. இவர்கள் கலந்து கொள்ள வசதியாக வெளிநாட்டில் படப்பிடிப்பு இருந்தாலும் ரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
 
சென்னையில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டும் நயன்தாராவே பிரச்சனைக்கு பயந்து மாநாட்டில் கலந்து கொண்டார். நிலைமை அப்படியிருக்க, அஜீத்தும், ஜெயம் ரவியும் கலந்து கொள்ளவில்லையே? அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் என்ன என்று யோசித்து வருகிறார்களாம் பெப்சியில்.

இருவருமே வெளிநாட்டில் நடைபெற்ற அசல் மற்றும் தில்லாலங்கடி படப்பிடிப்பில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெப்சியா, படைப்பாளியா என்ற மோதல் வந்தபோது இக்கட்டான நேரத்தில் தொழிலாளர்கள் பக்கம் நின்றவர் அஜீத். இதன் காரணமாக அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையெல்லாம் மனதில் வைத்து இந்த முறை அவர் மீது நடவடிக்கை பாயாது என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் 'சுல்தான்' வெளிவர தாமதம் ஏன்?

ரஜினி நடிக்கும் அனிமேஷன் படமான 'சுல்தான்- தி வாரியர்' 2010ம் ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்தப் படம், 70 சதவீத அளவுதான் முடிந்திருக்கிறது.

ரஜினி- விஜயலட்சுமி ஜோடியாக நடிக்க, ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று ரஜினி ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. காரணம் வரும் 2010ம் ஆண்டு எந்திரன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் படத்துக்கு முன்பு சுல்தான் வருமா அல்லது பின்னர் வருமா என்று கேட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து சமீபத்தில் சௌந்தர்யா அளித்துள்ள பேட்டியில்,

ரஜினியை வைத்து நான் கார்ட்டூன் படம் எடுக்கவில்லை. இது முற்றிலும் வித்தியாசமான அனிமேஷன் படம். சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த 3 டி படத்தை சீக்கிரத்தில் எடுத்துவிட முடியாது. வெளி நாடுகளில் கூட இது போன்ற படத்தை எடுக்க ஏழு வருடங்கள் வரைகூட ஆகும்.

பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து, மிகப் பிரமாண்டமாக அதே நேரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான விதத்தில் எடுத்து வருகிறோம். என்னைப் பொருத்தவரை இது ஒரு தமாமதமே அல்ல… மிக சராசரியான கால அளவுதான். சில தினங்களுக்கு முன் சொன்னதைப் போல, இப்போதைக்கு 70 சதவீகித பணிகள் முடிந்துள்ளன.

இந்தத் தேதியில்தான் ரிலீசாகிறது என என்னால் இப்போது சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் 2010 மத்தியில் வெளியாகிவிடும். இது உறுதி...என்று கூறியுள்ளார்.

படத்தை எடுத்துக்கிட்டு அலைஞ்சேன் - அமீர்

‘மத்திய சென்னை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அமீர், லோ பட்ஜெட் படங்களை வாங்க மறுக்கின்ற விநியோகஸ்தர்கள் பற்றி ஒரு பிடி பிடித்தார். ‘ராம், பருத்திவீரன் ஆகிய எனது இரு படங்களும் லோ பட்ஜெட் படங்கள் தான். அந்தப் படங்களை எடுத்து வைத்துக் கொண்டு விற்பனை செய்வதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். விநியோகஸ்தர்களை அணுகிய போது பெரிய படங்கள் வருகின்றன. இது மாதிரி சின்னப் படங்களை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லி அந்தப் படங்களை வாங்குவதற்கு மறுத்து விட்டார்கள். இது போன்ற பிரச்சனைகளால்தான் பெரிய தொகையில் படம் தயாரிக்க வேண்டியுள்ளது. சின்ன பட்ஜெட் படங்களை நீங்கள் வாங்குவதற்கு தயார் என்றால் நாங்கள் எடுப்பதற்கும் தயார்...’ என்று பேசினார். அவர் பேசிய போது விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரனும் மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி இதுவரை நடித்த படங்கள் எல்லாம் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில்தான். அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கு படங்களின் ரீமேக். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ‘பேராண்மை’ ஹிட் வரிசையில் சேர்ந்திருப்பதாலும் நடிப்பில் ஜெயம் ரவி ஒரு முத்திரை பதித்ததற்கு காரணமாக அமைந்தாலும் அமைந்தது சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் இருக்கிறார் ஜெயம் ரவி. ‘ஜனநாதன் சாரைப் பற்றி சொல்லணும்னா... அவர் ஒரு யுனிவர்சல் லைபிரரிங்க... நான் அவர் படத்தில நடிச்சேன் என்று சொல்வதைவிட அவர்கிட்ட படிச்சிட்டு வந்தேன்னுதான் சொல்லணும்...’ என்று ஜனநாதனைப் பற்றி வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து பேசுகிறார் ஜெயம் ரவி.

செல்வராகவன் அறிமுகம் செய்யும் இசையமைப்பாளர்

பாலிவுட்டில் பெரும் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார். இவர் ‘தேவதாஸ்’ உள்ளிட்ட மிகப்பெரும் வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இவரை தமது அடுத்த படத்தின் மூலம் அறிமுகம் செய்யவிருக்கிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுவாதி நடிக்கிறார். இந்தப் படத்தை எஸ்.ரமேஷ்பாபு பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். வித்தியாசமான படங்களை இயக்குவதில் வல்லவரான செல்வராகவனும், வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரமும் இந்தப் படத்தில் இணைவதால் இந்தப் படம் இப்போதே எதிர்பார்பை நோக்கியிருக்கிறது. ஆனால்... படத்திற்கு இன்னும் பெயர்தான் வைக்கப்படவில்லை.

பாலா கேட்டார் சூர்யா மறுத்தார்

பாலாவின் புதிய படம் குறித்த சில சுவாரஸிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. நான் கடவுள் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் அடுத்து பாலா என்ன மாதி‌ரி படம் செய்வார் என்பது குறித்து திரையுலகிலும், திரையுலகுக்கு வெளியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிய படத்தில் விஷால், ஆர்யா இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுக்குப் பதில் பாலா முதலில் தனது சாய்ஸாக வைத்திருந்தது அண்ணன் தம்பிகளான ரமேஷையும், ‌‌ஜீவாவையும். சில காரணங்களால் அவர்களை தவிர்த்துவிட்டு விஷால், ஆர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

உண்மையில் இவர்களுக்கெல்லாம் முன்பு பாலா கால்ஷீட் கேட்டது சூர்யாவிடமும், கார்த்தியிடமும். ஆதவன், சிங்கம், ராம்கோபால் வர்மாவின் ரக்த ச‌ரித்ரா என பிஸியாக இருந்ததால் சூர்யாவால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல் பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன் என டைட் ஷெட்யூ‌லில் சிக்கிக் கொண்டதால் கார்த்தியாலும் பாலாவுக்கு பாஸிடிவ் பதில் தர முடியவில்லையாம்.

இந்தமுறை காமெடி சப்ஜெக்டை பாலா கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வசனம் எழுத பல எழுத்தாளர்களை முயன்று பார்த்து யாரும் ச‌ரி‌ப்படாமல் இறுதியில் இயக்குனர் வி‌ஜியிடம் பேசியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. மொழி படத்தில் வி‌ஜி எழுதிய வசனங்கள் பெ‌ரிய அளவில் பேசப்பட்டதே இதற்கு காரணம்.

பொதுவாக தனது படத்தின் கதையை ஹீரோவிடமும் சொல்லும் பழக்கம் பாலாவுக்கு கிடையாது. ஆனால் இந்த முறை தனது கதையை விஷால், ஆர்யாவிடம் மட்டுமின்றி படத்தை தயா‌ரிக்கும் விக்ரம் கிருஷ்ணாவிடமும் கூறியிருக்கிறார். அப்புறம், படத்தின் ஹீரோயின்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கேட்டு சொல்லிடறோம்.

ரஷ்யாவில் ர‌ஜினி, கமல் படங்கள்

ர‌ஜினி, கமல் படங்களை ரஷ்ய சப் டைட்டிலுடன் ரஷ்யாவில் வெளியிட‌ப் போகிறார்கள் என்று பல மாதங்கள் முன்பு சேதி சொல்லியிருந்தோம். அதற்கான வேலைகள் தற்போது ஜரூராக நடந்து வருகின்றன.
வருகிற டிசம்பர் மாதம் சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா நடக்கிறது. பதில் விருந்து மாதி‌ரி அடுத்த ஜனவ‌ரியில் மாஸ்கோவில் தமிழ்‌த் திரைப்பட விழாவை நடத்துகிறார்கள்.

இதில் சரஸ்வதி சபதம், வசந்த மாளிகை, புதிய பறவை, முத்து, புன்னகை மன்னன் உள்ளிட்ட திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாக‌த் தெ‌ரிகிறது. இந்த‌ப் படங்கள் சம்பந்தப்பட்ட தயா‌ரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கும் பணி இப்போது நடந்து வருகிடிறது.

வேட்டையாடு விளையாடு படத்தை தி ஸ்மார்ட் ஹண்ட் என்ற பெய‌ரில் இந்தியில் டப் செய்து, ரஷ்ய சப் டைட்டிலுடன் திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர். அப்படியே படத்தை பாலிவுட்டில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

சில மாதங்கள் கழித்து மாஸ்கோ சென்றால் ரஷ்யர்கள் தில்லானா தில்லானா என்று பாடிக் கொண்டிருப்பதை கேட்கலாம்.

தயா‌ரிப்பாளரை அதிர வைத்த சோனியா

செல்வாவிடமிருந்து திருமண பந்தத்தை துண்டித்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை சோனியா அகர்வாலிடம் துளிர் விட்டிருக்கிறது.
திருமணம் ஆன பிறகு தொலைக்காட்சி தொட‌ரில் சோனியா நடித்தார் என்ற தகவலை இப்போது நினைவுப்படுத்திக் கொள்வது இந்த மேட்டருக்கு ரொம்பவும் அவசியமானது.

திருமணமான நடிகைகளை தமிழ் சினிமா தீண்டுவதில்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெ‌ரியும். ஆனானப்பட்ட சிம்ரனாலேயே அந்த விதியை மாற்ற முடியவில்லை.

இந்நிலையில் சோனியா அகர்வாலை ஒப்பந்தம் செய்ய போயிருக்கிறார் ஒரு விசால மனசு தயா‌ரிப்பாளர். அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சோனியா சம்பளமாக கேட்டது... மகா ஜனங்களே அதிர்ச்சி அடையாதீர்கள், ஜஸ்ட் அறுபது லட்சங்கள்.

திருமணமாகிவிட்டது, தொலைக்காட்சியில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். ஆறு லட்சமே அதிகம் என்ற நினைப்பில் வந்தவருக்கு பே‌ரிடி.

பீக்கில் இருக்கும் நயன், த்‌ரிஷாவே அரை கோடிக்கு ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவுட் ஆஃப் போகஸில் இருப்பவருக்கு அறுபது லட்சமா? துண்டை உதறி தோளில் போட்டவர் அப்படியே எஸ்ஸாகியிருக்கிறார்.