கமல் நடித்துள்ள உன்னைப் போல் ஒருவன் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் முதல்வர் கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளது.

அந்தக் காட்சியில் யாரையும் நடிக்க வைக்காமல் முதல்வர் கருணாநிதியின் குரலை மிமிக்கிரி செய்து பயன்படுத்தியுள்ளார் கமல். அத்துடன் கோபாலபுரம் வீடும் காட்டப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்றே கமல் இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
முதல்வரின் வீடு சினிமாவில் காட்டப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்நிலையில் முதல்வரை சந்தித்த கமல், முதல்வரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment