Tuesday, March 2, 2010

பிரபல நடிகையுடன் படுக்கையில் சாமியார் நித்தியானந்தா: ஆவேசத்தில் பக்தர்கள்

[வீடியோ] பிரபல சாமியாரான நித்தியானந்தா பிரபல நடிகை ஒருவருடன் படுக்கையில் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது. இது பக்தர்களிடையே ஆவேசத்தை உண்டுபண்ணியுள்ளது.
















பிரபல சாமியார் நித்தியானந்தா "R" என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காணொளி தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.



இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.



இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

 


திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமியாரை கைது செய்யக்கோரி ஆர்.எஸ்,எஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து 10 பேர் கைதாகியுள்ளனர். அவரது ஆசிரமத்திலுள்ள அவரது படங்கள் ஆசிரம ஊழியர்களாலேயே கிழித்து எரியப்பட்டுள்ளது.