Friday, September 11, 2009
விக்ரம் கே.குமார் படத்தில் இலியானா
அமெரிக்காவில் பிரபலமான 24 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதையை விக்ரம் கே.குமார் எழுதியுள்ளார் என்கிறார்கள் சிலர்.
வேறு சிலரோ, யாவரும் நலம் படத்தில் தொலைக்காட்சி தொடர் முக்கிய இடம் பிடித்ததால், 24 என்ற பெயருக்கும் அமெரிக்க தொலைக்காட்சி தொடருக்கும் தேவையில்லாமல் முடிச்சுப் போடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
எது எப்படியோ, படத்தின் கதை விக்ரமுக்கு பிடித்திருக்கிறது. அதேபோல் இலியானாவுக்கும் கதை பிடித்திருக்கிறதாம். முக்கியமாக இலியானாவின் தந்தை படத்தின் கதையை கேட்டு சொக்கிப் போய்விட்டாராம்.
ரஜினி படத்தில் நடிக்காமல் நழுவியவரை விக்ரம் கே.குமாரின் கதை வீழ்த்தியிருக்கிறது என்றால், நிச்சயமாக அது சாதனைதான்.
ரஜினிக்காக காத்திருக்கும் வாசு
பழசிராஜாவுக்கு ஒரு இணையதளம்
அப்பாவாக நடிக்கும் அரையடி நடிகர்
பக்ரூவின் புகழ் மகுடத்தில் மற்றொரு இறகும் இணையப் போகிறது. பிரபல ஹீரோ ஒருவருக்கு அப்பாவாக நடிக்கிறார் இவர்.
மலையாளத்தில் மை பிக் ஃபாதர் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். படத்தில் அவருக்கு அப்பாவாக நடிப்பவர், நமது அஜயன். படத்தின் பெயரில் வரும் பிக் ஃபாதர் இவர்தானாம்.
ஜெகதி ஸ்ரீகுமார், இன்னசென்ட் உள்ளிட்ட மலையாளத்தின் முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் கனிகா.
தமிழுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் அதிகமிருப்பதால், தமிழில் படம் டப் செய்யப்படும் சாத்தியம் அதிகமுள்ளது.
போலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!
இந்தப் போட்டியில் முதல் முறையாக இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு இப்போட்டியில் கலந்து கொள்கிறது.
இந்தியா கலந்து கொள்ளும் போட்டி வாஷி்ங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில் நடைபெறும்.
போட்டித் தொடக்க விழாவில் இசை ப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிரபல பாப் குழுவான புஸ்ஸிகேட் டால் குழுவினருடன் இணைந்து ரஹ்மான் நிகழ்ச்சியை வழங்குகிறார்.
சீன்களை உருவி படம் எடுக்காதீர்கள் - வி.சி.குகநாதன் விளாசல்
ஜெமினிகணேசன் பற்றிய ஆவணப்படம் ‘காதல் மன்னன்’
இரண்டு மணி நேரம் ஓடும் இப்படம் முதல் பாதி ஜெமினியின் சிறு வயது வாழ்க்கையைச் சொல்கிறது. இப்பகுதி நடிகர்களை நடிக்க வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் முழு நீள விறுவிறுப்பான திரை வடிவமாக உருவாகி உள்ளது. பல மாதங்கள் சிரமப்பட்டு ஆதாரங்களைத் திரட்டி படத்தை இயக்கி உள்ளார் வெங்கடேசன்.
திரையில் 70 வருடங்கள் கோலாச்சிய ஒரு நடிகரின் வாழ்க்கைப் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய திரைப்படமாக உருவாகியிருப்பது ரசிகர்களுக்குப் புது அனுபவமாக
பிரமிட் சாய்மிராதான் எனக்கு ரூ.40 கோடி தரணும்!-கமல்
'மர்மயோகி' படத்தை கமல்ஹாஸனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலும் பிரமிட் சாய்மிராவும் கூட்டாகத் தயாரிப்பதாக அறிவித்தன. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருந்த இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு கமல்ஹாஸனுக்கு ரூ.10.90 கோடி அட்வான்ஸும் தரப்பட்டது.
ஆனால் எதி்ர்பாராதவிதமாக 'மர்மயோகி' தயாரிப்பு தள்ளிப் போவதாக அறிவித்தது பிரமிட் சாய்மிரா. கமல்ஹாஸனும் அதை உறுதிப்படுத்துவதுபோல தனது சொந்தப்படமான 'உன்னைப்போல் ஒருவன்' பட வேலைகளில் மும்முரமானார்.
இன்னும் சில தினங்களில் அந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் கமல்ஹாஸன் தங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தரவேணடும் என பிரமிட் சாய்மிரா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம் என்றும் எச்சரித்திருந்தது. இந்த நோட்டீஸை பத்திரிகைகளுக்கும் அளித்திருந்தது சாய்மிரா நிறுவனம்.
படத்துக்குத் தடையா?:
மேலும் கமல்ஹாஸனின் படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியிருப்பதாகவும் சாய்மிரா கூறியதாக செய்திகள் வெளியாகி்ன.
இந்த நோட்டீஸுக்கும் தடை குறித்த செய்திக்கும் கமல் இன்று பதிலளித்துள்ளார். இது தொடர்பாக கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரமீட் சாய்மீரா நிறுவனம், 'உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இடைக்காலத் தடை வாங்கியுள்ளதாக சில இதழ்களில் (தட்ஸ்தமிழ் அல்ல) செய்தி வெளியாகியுள்ளது. அது உண்மையல்ல.
இதுகுறித்த உண்மைகளை வெளி்ப்படுத்த விழைகிறேன்.
'மர்மயோகி' படம் நின்று போனதும், அதற்கான காரணங்களும் அனைவரும் அறிந்ததே. 'மர்மயோகி' படத்துக்காக நான் மிகத் தீவிரமாக உழைத்தேன். ஒரு வருட காலமாக இதற்காக வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் செலவிட்டேன்.
மிக விரிவான் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டன, நடிக்கப்பட்டன, இயக்கப்பட்டன.
ஆனால் படப்பிடிப்பைத் தொடரத் தேவையான நிதியைத் திரட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனத்தால் முடியாமல் போனதால்தான் இந்தத் திட்டம் முடங்கிப் போனது.
எனது திரையுலக வாழ்க்கையின் ஒரு வருட காலத்தை நான் பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்காக இழந்துள்ளேன். அது மட்டுமல்லாமல் ரூ. 40 கோடி வருமானத்தையும் இழந்துள்ளேன். இதுதொடர்பாக எனக்கு ரூ. 40 கோடியைத் தர வேண்டும் என்று கோரி 2009, ஏப்ரல் 12ம் தேதி நான் பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் இதுவரை அந்த நோட்டீஸுக்கு சாய்மீரா பதில் தரவில்லை.
மேலும், சாய்மீரா நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் பல்வேறு கோர்ட்களில் கேவியட் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளோம். பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டு வந்தது.
படத்துக்குத் தடை இல்லை...:
இந் நிலையில், எனது சட்டப்பூர்வமான நடவடிக்கைளை தடுக்கும் வகையில், பத்திரிகைககள் மூலம் எனக்கு எதிரான விஷமப் பிரசாரத்தில் சாய்மீரா நிறுவனம் இறங்கியுள்ளது. தவறான குற்றச்சாட்டுக்களையும், கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கான இடைக்கால பதிலறிக்கையையும் நாங்கள் அனுப்பி விட்டோம்.
உண்மை என்னவென்றால் நாங்கள் அவர்களுக்கு எதிராக கேவியட் பெற்றுள்ளோம். நானோ அல்லது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமோ 'உன்னைப் போல் ஒருவன்' பட ரிலீஸுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவை எந்த கோர்ட்டிலிருந்தும் பெறவில்லை என்று கமல் கூறியுள்ளார்.
பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஏற்கனே பங்கு வர்த்தக மோசடி தொடர்பான ஒரு சிக்கலிலும் மாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வதந்தீ.... அலறுகிறார் ப்ரியாமணி
Wednesday, September 9, 2009
மீண்டும் போலீஸ் அதிகாரியாக அர்ஜூன்
போலீஸ் அதிகாரி வேடம் கனகச்சிதமாக அர்ஜூனுக்கு ரொம்பவே பொருந்தும்தான். அதற்காக இப்படியா... இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலானவற்றில் இவரை போலீஸ் அதிகாரியாகப் பார்க்கலாம்.
வெற்றி மாறனின் புதிய முடிவு
படத்தின் கதாநாயகி கதைப்படி ஆங்கிலோ இந்தியன். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் த்ரிஷா. அவர் கொடுத்த கால்ஷீட்டை வீணடித்ததால் படத்திலிருந்து அவர் விலக, வேறு கதாநாயகி தேடி வருகிறார்கள்.
“இப்போதைக்கு தனுஷ் நடிக்கும் ஆக்சன் காட்சிகளை எடுத்து வருகிறோம். கதைப்படி ஹீரோயின் ஆங்கிலோ இந்தியன். புதுமுகமாக தேடி வருகிறோம். புதுமுகம் என்றால் கால்ஷீட் பிரச்சனையும் இருக்காது” என்று பிராக்டிகலாக பேசுகிறார் வெற்றிமாறன்.
வெற்றிமாறனின் இந்த புதிய முடிவுக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆடுகளம் படத்தை இயக்குவது என்று முடிவானதும் ஸ்ரோயாவிடம் கால்ஷீட் வாங்கினார்கள். படத்தின் ஒன் லைனை முடிவு செய்வதற்குள் ஸ்ரேயா தந்த கால்ஷீட் காலாவதியானது. அவரும் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து, படத்திலிருந்து விலகினார்.
இரண்டாவதாக த்ரிஷாவிடம் கால்ஷீட் வாங்கப்பட்டது. கதை விவாதம் முடிந்து ஆஃபிஸ் போடுவதற்குள் அவர் தந்த கால்ஷீட்டும் காலாவதியானது. மூன்றாவது ஒரு விஷப் பரீட்சை எதற்கு என்றுதான் புதுமுகத்தை தேடுகிறார் வெற்றிமாறன். புதுமுகம் என்றால் அக்ரிமெண்ட் என்று வருஷக் கணக்கில் கால்ஷீட் கறக்கலாம் அல்லவா?
எப்படியோ, படம் பார்க்கிற மாதிரி இருக்கும் என்பதுதான் ஒரே ஆறுதல்.
நான் படிக்கப் போறேன் - ஷாமிலி
நல்ல தெளிவாகத்தான் இருக்காங்க...
பொம்மாயி பில்டிங்... அலறும் கோலிவுட்!
நெட்டையும் போல்டையும் நெருக்கமாக முடுக்கின மாதிரிதான் சினிமாவும் சென்ட்டிமென்ட்டும்! பூஜை போடுவதில் துவங்கி புரஜக்ஷன் வரைக்கும் சில இடங்களை தேர்வு செஞ்சு வைச்சிருப்பாங்க. மீறி வேறு சில இடங்களில் நடத்தினால் அவ்வளவுதான். கதை கந்தல் என்பது இவர்களது மாறாத பயம். இப்படி இவர்களை மிரட்டும் லிஸ்டில் சேர்ந்து விட்டது ஒரு முக்கியமான பில்டிங்.
சென்னையின் பிரதான இடமான ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில் இருக்கிறது அந்த இடம். அதில் பல வருடங்களாக பாதி முடிந்த நிலையிலேயே நிற்கும் பிரமாண்ட கட்டிடம்தான் அது. இங்கு ஷ§ட்டிங் எடுக்கப்படும் போது எவ்வளவு கவனமாக இருந்தாலும் விபத்துகள் ஏற்படுவதாக முன்பே கிசுகிசுத்து வந்தார்கள். அதற்கு உதாரணமாக சில சம்பவங்களை அடுக்கும் அவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் ஒன்றையும் உதாரணம் காட்டுகிறார்கள். லிப்டில் ஏறும் போது அறுந்து விழுந்து ஸ்பாட்டிலேயே இருவர் மரணம். இதற்கு பிறகு பெரும்பாலான படப்பிடிப்புகள் அங்கு நடைபெறுவது தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் மிருகம் ஆதி நடித்து வரும் அய்யனார் படப்பிடிப்பு இங்கு நடந்தது. சூப்பர் சுப்பராயன் சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். பாயும்போது திடீரென்று டைமிங் மிஸ்சாகி கீழே விழுந்தார் ஆதி. இதில் காலில் பலத்த அடிபட்டது அவருக்கு. உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறார்களாம் மருத்துவர்கள்.
இந்த விபத்திற்கு பிறகு அந்த பில்டிங்கை பொம்மாயி ஏரியாவாகவே நினைத்து மிரள்கிறதாம் கோலிவுட்.
விஜய் காங்.கில் சேர்ந்தால் வரவேற்போம்-ராகுல்
தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: விஜய் உங்களை சந்தித்து பேசினாரே. அவர் காங்கிரஸில் இணைகிறாரா?
ராகுல்: அது ஒரு சம்பிரதாயமான, நட்புரீதியான சந்திப்புதான். காங்கிரஸ் கட்சியில் அவர் சேருவது பற்றி நாங்கள் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியில் அயோக்கியர்கள், மோசடி பேர்வழிகள், கடத்தல்காரர்கள் போன்றவர்களை தவிர யார் வேண்டுமானாலும் சேரலாம். நடிகர் விஜய்யும் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்போம். ஆனால், 35 வயதை தாண்டியவர் என்பதால், இளைஞர் காங்கிரசில் அவருக்கு வாய்ப்பு இல்லை.
இளைஞர் காங்கிரசில் தலைவராக இதுவரை இளைஞர்கள் இருந்தது இல்லை. 39 வயதை தாண்டிய நானும் இளைஞர் அல்ல. நான் இளைஞர் காங்கிரசில் உறுப்பினர் அல்ல என்றாலும் அதை வலுப்படுத்தும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.
கேள்வி: நாட்டின் இளம் பிரதமராக நீங்கள் வருவீர்களா?
ராகுல்: நமக்கு ஒரு பிரதமர் (மன்மோகன் சிங்) இருக்கிறார். அவர் சிந்தனையில் இளையவர்தான்.
கேள்வி: உங்கள் காதல், காதலி, திருமணம் பற்றி?
ராகுல்: நீங்கள்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒவ்வொரு காதலியை உருவாக்குகிறீர்கள் (சிரிக்கிறார்). திருமணத்தைப் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இனிமேல்தான் அதுபற்றி சிந்திக்க வேண்டும்.
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரசும் சோனியாவும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
ராகுல்: இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை
இலங்கை பிரச்சினையில் மற்ற நாடுகள் தலையிட்ட அளவுக்கு இந்தியா தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இந்தியா முதலில் தலையிட்ட பிறகுதான், மற்ற நாடுகள் இந்த பிரச்சனையில் தலையிட்டன. காங்கிரஸ் கட்சியும், எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி, தாய் சோனியா காந்தி ஆகியோரும் இலங்கை தமிழர்களுக்காக அதிக அக்கறை செலுத்தி உள்ளனர்.
நானும் இந்த பிரச்சனையில் அக்கறை காட்டாமல் இருந்தது இல்லை. அப்படி இருந்திருந்தால் மதுரையில் எனக்கு இந்த அளவுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்க மாட்டார்கள். வயதான பெண்கள் கூட நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். எனவே இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் மீது தமிழ்நாட்டில் தவறான கருத்து இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
கேள்வி: திமுக-காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது?
ராகுல்: திமுகவுடன் காங்கிரசுக்கு கருத்து ஒற்றுமை உள்ளது. அனுபவமிக்க மூத்த தலைவரான டாக்டர் கலைஞர் கருணாநிதியை நான் பெரிதும் மதிக்கிறேன்.
பேட்டியின்போது விடுதலைப் புலிகள் தொடர்பான கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. எடுத்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
விஜய் தொண்டராக இருந்தாலே போதும்-இளங்கோவன்
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர்கள் 10 சதவீதம் பேர் தான் உள்ளனர். 90 சதவீதம் இளைஞர்கள், அரசியலே வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர்.
ராகுல் காந்தி வருகைக்கு பின், தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் .
நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். அவர் காங்கிரசில் இணைய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர் அடிமட்ட தொண்டராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொண்டராக இருந்தால் போதும்.
என் மகன் மேஜர், அவரும் காங்கிரசில் தான் உள்ளார். தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்வார். ராகுல் சுற்றுப் பயணத்துக்கு பின் என் மாமூல் அரசியல் தொடரும் என்றார்.
யு.எஸ்-25 இடங்களில் உன்னைப் போல் ஒருவன்!
கலைஞானி கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து மிரட்டவுள்ள உன்னைப் போல் ஒருவன், அமெரிக்காவில் 40 பிரிண்டுகளுடன் 25 இடங்களில் திரையிடப்படவுள்ளது.
அமெரிக்காவில் உன்னைப் போல் ஒருவன் படத்தை விநியோகிக்கும் பொறுப்பை நர்மதா மீடியா பெற்றுள்ளது.
தென்னிந்தியாவின் இரு பெரும் சிறந்த நடிகர்களான கமல்ஹாசனும், மோகன்லாலும் இணைந்து நடித்துள்ள தமிழின் முதல் படமான இப்படம் அமெரிக்கா வாழ் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மலையாள ரசிகர்கள், கமல்ஹாசன் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். இப்போது 'லாலட்டனும்' உடன் இணைந்து நடித்திருப்பதால், உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு மலையாளிகள் மத்தியிலும் ஏக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொது ஜனங்களில் ஒருவராக கமல்ஹாசனும், திறமையான போலீஸ்
செப்டம்பர் 18ம் தேதி உலகம் முழுவதும் உன்னைப் போல் ஒருவன் ரிலீஸாகிறது. அதே தினத்தில் அமெரிக்கா விலும் இப்படம் திரைக்கு வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு ப் பதிப்பில் மொத்தம் 40 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன. 25 இடங்களில் படம் திரையிடப்படவுள்ளது.
கமிஷனராக மோகன்லாலும் இப்படத்தில் நடித்துள்ளனர். தெலுங்குப் பதிப்பில் கமிஷனராக வருபவர் வெங்கடேஷ்.
'கண்டேன் காதலை' வாங்கிய சன் பிக்சர்ஸ்!
பரத் - தமன்னா நடிப்பில் மோசர் பேர் தயாரித்த கண்டேன் காதலை படத்தின் வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இத்தகவலை மோசர் பேர் நிறுவன திரைப்படப் பிரிவின் தலைமை செயல் அலுவலர் ஜி தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் சன் பிக்ஸர்ஸ் குழுவினர் பார்த்ததாகவும், படம் அவர்களுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டதால் தாங்களே வாங்கிக் கொள்வதாகவும் கூறிவிட்டார்களாம்.
படத்தை தங்கள் வசதிக் கேற்ப சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்றும், இனி தங்களின் அடுத்த படமான 'அவள் பெயர் தமிழரசி'யில் கவனம் செலுத்தப்போவதாகவும் தனஞ்செயன் தனது பத்திரிகைக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான் படம் மூலம் அறிமுகமான ஆர் கண்ணன் இயக்கியுள்ளார். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை
ஜப் வி மெட் எனும் இந்திப் படத்தின் தழுவல்தான் இந்த 'கண்டேன் காதலை' படம் .
வித்யாசாகர்.
த்ரிஷா-சிம்பு...தொடரும் நெருக்கம்!
"என்னடா... மார்ல சந்தனம்...?" "ஊர்ல கல்யாணம்ணே...!"
-ஒரு படத்தில் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது.
யாருக்குப் பொருந்துகிறதே இல்லையோ... சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் இது கிட்டத்தட்டப் பொருந்தும்.
நகரில் எந்த நிகழ்ச்சியென்றாலும் முதலில் வந்து நிற்பவர்கள் இந்த இருவரும்தான்... அதுவும் ஜோடியாக. விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் இருவரும் ஜோடி என்றாலும், அதையும் தாண்டிய 'நட்பு' இருவரையும் இப்படி ஒன்றாகப் பிணைத்துவிட்டதாம்.
சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் ஒரு ஆங்கிலப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியீட்டுக்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்தக் காட்சி இரவு பத்து மணிக்குத்தான் துவங்கியது. முதலில் யார்-யார் வந்தார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இடைவேளையின்போது பார்த்தால் சிம்புவும் - த்ரிஷாவும் நெருக்கமாக அமர்ந்து படத்தைப் பற்றி தீவிர டிஸ்கஷனில் இருந்தார்கள் (வேற என்னன்னு சொல்றது!).
இந்த படம் மட்டுமல்ல... கிட்டத்தட்ட எல்லா நிகழ்ச்சிகளுக்குமே இருவரும் இணைந்தே வருகிறார்கள். இருவரும் லவ்வுவதாக தொடர்ந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஆனால் எங்களுக்குள் காதல் இல்லை, நல்ல புரிதலுடன் கூடிய நெருக்கமான நட்புதான் என்று த்ரிஷா சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீரோவாகும் இயக்குனர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா!
தனது இரண்டு படங்களின் மூலம் இலியானா, தமன்னா, ஸ்ரேயா என இன்றைய முன்னணி நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் ஜோதிகிருஷ்ணா.
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இளமை துள்ளும் ஜாலிப் படத்தோடு ரசிகர்களைச் சந்திக்க வருகிறார்.
இந்த முறை ஒரு இயக்குநராக மட்டுமல்ல... நாயகனாகவும்.
'ஏன் இந்த இடைவெளி?' -
"ரெண்டு படம் முடிச்ச பிறகு, புதிய ஸ்கிரிப்ட் ரெடி பண்ண உட்கார்ந்தேன். எதுவுமே சரியா அமையல. வெறுத்துப் போய், 'இனி சினிமாவே வேணாம்பா... இருக்கிற பிஸினஸ் பார்க்கலாம்!' என ஒதுங்கியிருந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் கலைச் செல்வம் வந்தார். அப்பாவின் நெருங்கிய நண்பர்.
எனக்கு 20 உனக்கு 18 மாதிரி ஒரு ஜாலியான, இளமை பொங்கும் படம் பண்ணலாம் என்றார். சின்ன தயக்கத்துக்குப் பிறகு ஒரு ஸ்கிரிப்ட் சொன்னேன். அவருக்குப்பிடித்துப் போனது. டைட்டிலைச் சொன்னேன், இன்னும் பிடித்துவிட்டது.
சரி, நாயகனாக யாரை போடலாம் என இரண்டு மாதங்களாகத் தேடினோம். இந்தக் கதைக்கு ஒரு புதுமுகம் இருந்தால் பெட்டராக இருக்கும் என்று தோன்றியது. யாரும் சரியாக அமையவில்லை. ஒரு நாள் கலைச்செல்வம் என்னிடம், நீங்களே நாயகனாக நடியுங்கள் என்றார். எனக்கு அதில் உடன்பாடில்லை. ஒரு கட்டத்தில் நான் நடித்தால்தான் இந்தப் படத்தையே தயாரிப்பேன் என்று கூறினார்.
எனது நண்பரும் பிஆர்ஓவுமான ஜான் மற்றும் சில நண்பர்களை கலந்து ஆலோசித்துவிட்டு பின்னர் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
நான் ஹீரோவான கதை இதுதான்..."
உங்கள் தம்பி ரவி கிருஷ்ணாவை கேட்கவில்லையா?
"சில காரணங்களுக்காக நானும் தம்பியும் இப்போதைக்கு சேர்ந்து படம் பண்ணுவதில்லை என முடிவு செய்துள்ளோம். சொல்லப் போனால் இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமானவர் ரவி கிருஷ்ணாதான். நேரம் வரும்போது இருவரும் சேர்ந்து படம் செய்வோம்..."
அதென்ன தலைப்பு... ஊலலலா?
"கேட்கும்போதே ஒரு ஜாலியான பீல் வருதில்லையா... அதான் இந்தத் தலைப்பு. அதே நேரம், படத்தின் நாயகன் கேர்ள் பிரண்ட்ஸ் வேண்டும் என்று பத்து பெண்களின் பின்னாலேயே சுற்றுவான். அந்தப் பெண்களில் சிலரது பெயரின் முதல் எழுத்தைத்தான் இப்படி தலைப்பில் சேர்த்துள்ளோம். ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா போன்ற பெயர்களின் முதலெழுத்து இந்தப் படத்தின் தலைப்பு!"
படத்தின் நாயகி பற்றிச் சொல்லுங்க...
"ப்ரீத்தி பண்டாரி... பஞ்சாப் பொண்ணு... மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். தமன்னா, இலியானா, ஸ்ரேயா போல இவரும் அழகான திறமையான நடிகையாக வருவார்...
இலியானா, தமன்னா, ஸ்ரேயா போன்றவர்களை அறிமுகப்படுத்தியதே நீங்கள்தானே... அவர்களை இந்தப் படத்துக்குக் கேட்கவில்லையா?
"அவர்களை நான் அறிமுகப்படுத்தியது உண்மைதான். ஆனால் அவர்கள் தங்களது திறமையால், நல்ல இயக்குநர்களிடம் பணியாற்றி சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர். இன்றைக்கும் என்மீது மரியாதை வைத்துள்ளார்கள். ஆனால் திரையுலகில் அத்தனை சீக்கிரம் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்களிடம் போய் கால்ஷீட் கேட்டு சங்கடப்படுத்த விரும்பவில்லை.
இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஓ போடு' ராணி, அம்மா ராஜா என தேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர், என்றார் ஜோதி கிருஷ்ணா.
ஊலலலா படத்தின் இசையமைப்பாளர்களாக சேகர் சந்திரா - வி குமார் அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவை ஆர் ஜி சேகரும், படத்தொகுப்பை ரங்கீஸ் சந்திரசேகரும், வசனத்தை சேகர் பிரசாத்தும் கவனிக்கிறார்கள். ஏக்நாத், தமிழ் வேடத்தில் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, சிட்டிபாபு, மதன்பாபு, பட்டிமன்றப் புகழ் அமுதன் மற்றும் சேகர் பிரசாத் பாடல்களை எழுதுகிறார்கள். நடனம் ரேவதி தினேஷ், கிரிஷ். சண்டைப் பயிற்சி பில்லா ஜெகன். கலை இயக்கத்துக்கு ஆறுமுகம், ஜெய் வர்மா பொறுப்பேற்றுள்ளனர்.
இலியானாவே வா... பரபரக்கும் இரண்டு ஹீரோக்கள்
காவிரியே வா...ன்னு கரையோரமா நின்னு கூப்பாடு போட்டாலாவது புண்ணியம் கிடைக்கும். இலியானாவே வா...ன்னு ஒவ்வொரு படத்திற்கும் அழைப்பு விடுக்கிறாங்களே, அதைபோயி என்னன்னு சொல்றது? கோலிவுட் கோவிந்துவே புலம்புகிற அளவுக்கு இலியானாவை வா வா ங்குது கோடம்பாக்கம். அவரும் இதோ, அதோன்னு போக்கு காட்டிக்கிட்டே இருக்காரு.
இப்போ லேட்டஸ்ட்டா ரெண்டு ஹீரோக்கள் இலியானாவுக்காக போட்டி போடுறாங்களாம். ஒருவர் விக்ரம். மற்றவர் சிம்பு. வல்லவன் படத்திற்கு யாரை ஹீரோயினாக்குவது என்று கிளி ஜோசியம் பார்க்காத குறையாக மண்டையை பிய்ச்சுக்கிறார் சிம்பு. யார் யாரையோ யோசித்த சிம்பு, கடைசியாக லேண்ட் ஆனது இலியானாவின் இடுப்பில்தான். இந்த முறை விடுவதில்லை என்று இலியானாவுக்கே போன் போட்டு பேசினாராம். “கால்ஷீட் டைட்டா இருக்கு. மேனேஜரை கேட்டு சொல்றேன்”னு பதில் சொல்லியிருக்காராம் இலியானா.
இதற்கிடையில் விக்ரம், தான் நடிக்கப் போகும் 24 என்ற படத்திற்காக இலியானாவை ஒப்பந்தம் செய்யப் போறாராம். ஆச்சர்யம் என்னன்னா இவரோட அப்ரோச்சுக்கு சரின்னு சொல்லிருச்சாம் கிளி! விக்ரம் குமார் இயக்கப் போகும் இந்த படத்தின் மூலம் தமிழ் பேச வருகிறார் இலியானா. கேடி படத்தின் மூலம் ஏற்கனவே தமிழில் அறிமுகம் ஆகியிருந்தாலும், இந்த முறை பெரும் எதிர்பார்ப்போடு தமிழுக்கு வரப்போகிறார் இந்த ஆந்திரத்து பெசரட்டு!
இதனால நயன்தாரா, த்ரிஷாவுக்கு ஒன்றும் நட்டமில்லே. ஏன்னா அவங்க மேல இப்போதெல்லாம் தமிழனுக்கும் நாட்டமில்லே!
Tuesday, September 8, 2009
ஜக்குபாய் ஆடியோ ரெடி
சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு பிரகாஷ் ராஜ் தேர்வு
'குலோபி டாக்கீஸ்' என்ற கன்னட படத்தில் நடித்தற்காக உமாஸ்ரீ, சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பொழுதுபோக்கு படமாக ஷாருக்கானின் 'சக்தே இந்தியா' படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த குடும்ப படமாக அமீர்கானின் 'தாரே ஜமீன் பர்' என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனராக 4 பெண்களை இயக்கிய அடூர் கோபால கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகராக சங்கர் மகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதுரை சம்பவம்
இதற்கு நடுவில் அந்த ஊர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராய் வரும் கரோலினுக்கும், குட்டிக்கும் காதல். அந்த காதலுக்கு பின் ஒரு அருமையான காதலும் துரோகமும் சேர்ந்த கதை அமைத்திருக்கிறார் திரைக்கதையாசிரியர். ஆலமரத்தானுக்கு அல்லக்கை போல செயல் படும் கரோலின் அவரை என்கவுண்டர் செய்ய, ப்ரச்சனை இன்னும் உச்சத்துக்கு வர. க்ளைமாக்ஸ் வெடிக்கிறது.
மிக, மிக இயல்பான காட்சிகளுடன், பின்னால் மிசைல் துரத்தும் வேகத்தில், பரபரப்பான திரைக்கதையில் பறந்திருக்கிறார் இயக்குனர் யுரேகா. படம் முழுவதும், திருப்பங்களும், முடிச்சுகளுமாகவே போகிறது. கரோலினுக்கு பின் இருக்கும் ஒரு அண்டர்கரண்ட் விஷயம் படத்துக்கு மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட் என்றே சொல்ல வேண்டும்.
ஹரிகுமார் நன்றாக ஆடுகிறார். ஒரு பாட்டு வேறு பாடியிருக்கிறார். அழுத்தமாய் அனயாவுக்கு முத்தம் கொடுக்கிறார். அவ்வப்போது ந்டிக்கவும் செய்ய முயற்சி செய்திருக்கிறார். படத்தில் பெரிய மைனஸே இவரது பாடி லேங்குவேஜும், மதுரை ஸ்லாங்கும், பஞ்ச் டைலாக் பேசுவதும் இவர் அடித்தால் குறைந்தது இருபது பேர் கீழே விழுவதும்தான். இதை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் ஆங்காங்கே விழுவது தவிர்க்க பட்டிருக்கும்.
தூத்துக்குடி கார்திகா ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு, ஆங்காங்கே தென்படுகிறார். இன்ஸ்பெக்டர் கரோலினாக வரும் அனயாவுக்கு அருமையான கேரக்டர். வழக்கமாய் சீரியஸாகவே இருக்கும் அந்த முகத்துக்கு இந்த கேரக்டர் சரியாக பொருந்துகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஆலமரத்தானாக ராதாரவி. மிகவும் பண்பட்ட நடிப்பு. என்ன இவர் எனன் தான் ரவுடியாக இருந்தாலும் நல்லவராய் காட்ட நாயகன் ரேஞ்சுக்குகான காட்சிகள் கொஞ்சம் ஓவர்.
ஒளிப்பதிவு ஓகே ரகம் ஆலமரத்தானின் மாப்பிள்ளையை துரத்தி கொல்லும் காட்சியில் ஒளிப்பதிவாளருடன், எடிட்டரும் கை கோர்த்து பின்னியிருக்கிறார்கள்.
ஜான்பீட்ட்ரின் இசையில் பற்றி பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. பிண்ணனி இசையும் அஃதே.பாடல்கள் படத்துக்கு ஸ்பீட் ப்ரேக்கர்கள்தான்.
க்ளைமாக்ஸ் காட்சி வழக்கமான மசாலா தமிழ் சினிமாவுக்கு புதுசு.
மதுரை சம்பவம் என்கிற பெயருக்கு பதிலாய் எந்த ஊர் பற்றி காட்டியிருந்தாலும் இந்த கதைக்கு பொருந்தும். மதுரையை சுற்றி கதை இருந்தால் ஹிட் என்கிற செண்டிமெண்டோ..?