Saturday, December 12, 2009

டைட்டானிக் இயக்குநரின் அடுத்த படம்

‘டைட்டானிக்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூன் இயக்கிய படம் ‘அவதார்’. இந்தப் படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 14 வருடங்களுக்கு முன்பே ஜேம்ஸ் காமரூன் உருவாக்கிய கதை இது.

ஒரு கிரகத்தில் மரம் செடி, கொடிகள் அனைத்தும் தான் நினைத்த உருவத்தை உடனே மாற்றும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன. அங்கு வாழும் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் போராடுகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக பூமியில் இருந்து கதாநாயகன் புறப்படுகிறான்.

இவர்கள் அனைவரும் யாரை எதிர்த்துப் போராடுகிறார்கள்? ஏன் போராடுகிறார்கள்? அவர்களுக்கு உதவப் போன ஹீரோவின் நிலை என்ன இப்படிப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் கற்பனைக்கும் எட்டாத விதத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது அவதார் படம். இந்தப் படத்தை டிவென்டியத் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

வேட்டைக்காரன்... ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.

சொன்னதை செய்த த்‌ரிஷா

மும்பையில் செட்டிலான பிறகு தென்னிந்தியா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை அசின். தமிழில், தெலுங்கில் கால்ஷீட் கேட்டதற்கும் நோ ரெஸ்பான்ஸ்.

ஆனால் இதெல்லாம் லண்டன் ட்‌‌ரீம்ஸ் வெளியாவதற்கு முன்பு. படம் பப்படம் ஆனதால் புதிய படம் எதிலும் அசினை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்கள். விளைவு?

கலைமாமணி விருது வாங்க சென்னை வந்தவர் அப்படியே சில முக்கிய புள்ளிகளிடம் தமிழில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். விஜய்யின் 51 வது படத்தில் அவர்தான் ஹீரோயின் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

அசினின் நிலை தனக்கு வரக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் த்‌ரிஷா. இந்தியில் நடிப்பதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என அவசர அவசரமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

தமிழில் ஆடுகளம், தெலுங்கில் பிருந்தாவனம் படங்களை மறுத்தவர் திடீரென்று தெலுங்கில் கோபி இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர் ரவி தேஜா. கிருஷ்ணா படத்தின் வெற்றிக்குப் பிறகு த்‌ரிஷா, ரவி தேஜா ஜோடி சேரும் படமிது.

பறப்பதை நம்பி இருப்பதை இழக்க‌க் கூடாதில்லையா... விரைவில் த்‌ரிஷாவின் தமிழ்ப்பட அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம்.

‌ரிஸ்க் எடுக்கும் ஜனநாதன்

பேராண்மை வெற்றிக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் மீதான எதிர்பார்ப்பு அதிக‌ரித்திருக்கிறது. ச‌ரித்திர‌க் காதல் கதையை இயக்குகிறாரா? இல்லை புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கிறாரா? முடிவு தெ‌ரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

காரணம், ச‌ரித்திர காதல் அல்லது புதுமுகங்களை வைத்து பிரமாண்டமாக ஒரு படம். இந்த இரண்டில் ஒன்றை இயக்குவதாக கூறியிருந்தார் ஜனநாதன்.

திடீர் திருப்பமாக தனது அடுத்தப் படத்தை தானே தயா‌ரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஜனநாதன். தயா‌ரிப்பாளர் தலையீடு இல்லையென்றால் நினைத்தபடி படத்தை இயக்கலாம் என்பதே இதற்கு காரணம்.

ஒரு படம் இயக்கியவர்களே தயா‌ரிப்பாளர் ஆகும்போது, ஜனநாதன் டூ லேட். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டான படம் தருவார் என்று உறுதியாக நம்பலாம்.

பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்டு!

“அட்வைஸ் சொல்றவங்க அப்பால போங்க...” நயன்தாராவின் இந்த துடுக் பேச்சால் நமக்கெதுக்கு என்று ஒதுங்கிக் கொண்டார்கள் அவருக்கு நெருக்கமான அட்வைசர்கள்.

அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டிக்கு தொட்டின்னு தெரியுமா? பட்டின்னு புரியுமா? துள்ளி ஓடி தொட்டியிலே விழுந்த மாதிரி தப்பு தப்பாக முடிவெடுப்பதாக புலம்புகிறார்கள் அந்த நெருக்கமானவர்கள்.

லேட்டஸ்ட் புலம்பல் இது. “யாரையும் கேட்காமலேயே கோவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதிச்சாரு. சரி போகட்டும் என்று விட்டால் இப்போது மீண்டும் ஒரு படம். எப்படிதான் புரியப் போவுதோ” என்கிறார்கள். மாப்பிள்ளை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா. “இப்படியே அவரு முக்கியம், இவரு முக்கியம்னு ஆட ஆரம்பிச்சா நயன்தாராவுக்கு போட்டியா ரகசியாதான் வந்து நிப்பாரு” என்று அழாத குறையாக சொல்கிறார்கள் அவர்கள். போகட்டும்... இன்னொரு சங்கதி.

முதல்வர் கையால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை வாங்க ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் நயன். அந்த விருது வழங்கப்பட்ட நாளில் இவர் வெளிநாட்டில் இருந்தாராம். படப்பிடிப்பை விட்டு விட்டு வர இயலாது என்பதால்தான் வராமல் இருந்துவிட்டாராம்.

பாலிவுட்டில் முருகதாஸ்

கஜினி மூலம் சூர்யாவுக்கு வாழ்வு கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ், அதன் பின்பு இவர் இயக்கப் போகும் தமிழ் படத்திலும் சூர்யாதான் ஹீரோ.

இன்னும் சில மாதங்களில் துவங்கப்படுவதாக இருந்த இந்த படத்திட்டத்தில் திடீர் ஸ்பீட் பிரேக்கர்! 2010 இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம் படப்பிடிப்பு.

அதுவரைக்கும் வெட்டி மேடைகளில் குட்டிக் கதையா பேசிக்கொண்டிருக்க முடியும்? எப்பவுமே தனக்கு ரத்தின கம்பளத்தை வைத்துக் கொண்டு காத்திருக்கும் இந்தி ஏரியாவுக்கு போய்விட்டார் முருகதாஸ். சல்மான்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் புதிய படத்தை இயக்க போகிறாராம். தெலுங்கில் வெளிவந்து வசூலை வாரிக்குவித்த கிக் படத்தின் ரீமேக்தான் இது.

அறிமுகப்படுத்திய இயக்குனரான தன்னை அம்போவென்று விட்டுவிட்டு பாலிவுட் ஹீரோக்களின் புகழ் பாடிக் கொண்டிருந்த அசின் மீது ஏக கடுப்பில் இருந்த முருகதாஸ், வாய்ப்பிருந்தும் வலியவே மறுத்துவிட்டாராம் அசினை. பேசி கெடுவது ஒரு டைப் என்றால், பேசாமல் கெடுவது இன்னொரு வகை போலிருக்கிறது.

தன்ஷிகாவுக்கு மளமளவென படங்கள்

‘பேராண்மை’யில் ஐந்து பெண்களில் ஒருவராக வந்து நடிப்பில் நின்று முத்திரை பதித்தவர் தன்ஷிகா. இவர் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

பேராண்மையின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு மளமளவென படங்கள் புக் ஆக ஆரம்பித்தன. இப்போதைக்கு இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தன்ஷிகா மேலும் கதைகளைக் கேட்டு வருகிறார்.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘மாஞ்சா வேலு’ படத்திலும் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு நடிக்கும் நில் கவனி செல்லாதே படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

‘படங்களில் ஒப்பந்தம் ஆவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல... நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதனால்தான் கதைகளை கேட்டு, அலசி ஆராய்ந்த பின்னரே ஓ.கே. சொல்கிறேன்...’ என்று சொல்லும் தன்ஷிகா மேலும் நான்கு படங்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் கால்ஷீட் கொடுத்து விடுவேன் என்கிறார்.

ரஜினிக்கு 60வது பிறந்த நாள்

நடிகர் ரஜினி யின் 60வது பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் கோலாகலமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் ரஜினிக்காக சிறப்புப் பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அன்னதானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தனது பிறந்த நாளின்போது வழக்கமாக வெளியூர் சென்றுவிடும் ரஜினி இம்முறை சென்னையில் தான் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், தனது பிறந்தநாளை வீட்டிலேயே மிக அமைதியாக தியானம், வழிபாடு என சிம்பிளாக முடித்துக் கொண்டார் ரஜினி. வெளி நபர்கள் யாரையும் இன்று அவர் சந்திக்கவில்லை.

நயன்-ஆர்யா நாகரிகம்

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. தன்னுடன் நடிக்கும் நடிகைகளை நெருக்கமான வட்டத்திற்குள் இழுத்துக் கொள்வது அவருக்கு கைவந்த கலை.

 பூஜாவை இறுக அணைத்தபடி போஸ் கொடுப்பார். நிலாவை உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு பேட்டியளிப்பார். கேட்டால் நட்பு என்பார். அந்த நட்பு பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை போலிருக்கிறது நயன்தாரா விஷயத்தில்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய ஆர்யா, கேக்கை நயன்தாரா வாயில்தானே ஊட்டியிருக்க வேண்டும்? ஆனால் வெட்டிய கேக்கை டீசண்ட்டாக அவர் முன் நீட்டினார். அவரும் அதை வாங்கி தானே சுவைத்துக் கொண்டார். பதிலுக்கு தானும் ஒரு கேக்கை எடுத்து ஆர்யா கையில் கொடுத்து அன்பை தெரிவித்தார் நயன். இப்படி பட்டும் படாமலும் பர்த் டே ஃபங்ஷன் நடந்தாலும், நெருக்கமான காதல் காட்சிகளில் நீந்தி விளையாடி இருக்கிறார்களாம் இருவரும்.

கொஞ்ச நாட்களாக சென்னை படப்பிடிப்பை தவிர்த்து வரும் நயன், மீண்டும் தனது கெடுபிடிகளை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை : ஸ்ரேயா

ரஜினியின் 60வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகை ஸ்ரேயா, மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயா தனது வாழ்த்துச் செய்தியில், ரஜினி யிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இளைய தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.

இப்போது இருப்பதுபோல் அவர் எப்போதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.

அதற்கான வாய்ப்பை அவர் தான் ஏற்படுத்தித் தர வேண்டும். அவருடன் மீண்டும் எத்தனை படங்களிலும் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Wednesday, December 9, 2009

Vettaikaran New Trailer - 4

Vettaikaran Trailer - 3

Vettaikaran Trailer-2

Vettaikaran Trailer

Monday, December 7, 2009

MailPrint தனுஷ் ஜோடியாக ஜெனிலியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புக்காக சுமார் பத்து லட்சம் செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் படப்பிடிப்பை டி.ஆர். வரதராஜன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்ய, ராம்குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ரெடி என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். ரெடி தெலுங்குப்படத்திலும் ஜெனிலியாதான் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
175 நாட்கள் ஓடிய யாரடி நீ மோகினி வெற்றிப்படத்தைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் நடிக்கும் குட்டி படத்தை இயக்கி வரும் மித்ரன் கே.ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் உடன் இணைகிறார் மித்ரன் கே.ஜவஹர். இதன் மூலம் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவராகிறார் இவர்.
தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பாலாஜி ஸ்டூடியோஸ் பிரைவேட் லிட் பேனரில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா தயாரிக்கிறார்கள்.
சந்திரமுகி, கில்லி, சிவாஜி போன்ற படங்களைப்போல் பல கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமானமுறையில் இப்படத்தைத் தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.

நமீதாவின் திடீர் முடிவு

வெயிட்டான கேரக்டர்கள் இல்லாவிட்டாலும் வெயிட்டான நமீதான சமீபகாலமாக பல படங்களில் வந்து போவது வழக்கம். ஜெகன்மோகினி படத்திற்குப் பிறகு நமீதா ஒரு முடிவெடுத்திருக்கிறாராம். அது, இனிமேல் உப்பு சப்பில்லாத கேரக்டர்களில் வெறுமனே கவர்ச்சியாக வந்து போகக் கூடாது என்பதுதான். இதனால் அவருக்கு சமீபகாலமாக வந்த பத்துக்கும் மேற்பட்ட வாய்ப்புகளை அவர், உதறித்தள்ளியிருக்கிறார். முன்பு கவர்ச்சியான வேடங்களை எதிர்பார்த்த நமீதா இப்போது கவர்ச்சியுடன் வெயிட்டான கேரக்டராக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மனதில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து விட்டாராம். எனவே, அதற்கு ஒரே வழி நல்ல கதை உள்ள படங்களில் நடிப்பது தான் என்பதைப் புரிந்து கொண்டாராம். கதை சொல்லப் போகும் இயக்குநர்களிடம் இப்போது கதையை முழுவதுமாக கேட்டு விட்டு தன்னுடைய கேரக்டர் பற்றி குறுக்குக் கேள்விகள் கேட்பதால் நமீதாவிடம் கதை சொல்லப் போகும் இயக்குநர்கள் கிலி பிடித்துக் கிடக்கிறார்கள்.

கருணாஸ் நடிக்கும் பௌர்ணமி நாகம்

யார், யுகா படங்களை எடுத்த இயக்குநர் யார் கண்ணன் இப்போது பொளர்ணமி நாகம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கருணாஷ் மற்றும் ஆதித்யா மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க அவர்களுடன் மயில்சாமி, நளினி, நிழல்கள் ரவி, நெல்லை சிவா என ஒரு பெரிய டீமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
இது இப்படி இருக்க இன்னொரு ஹைலைட்டான விஷயம் இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை முமைத்தான் இரட்டை வேடங்களில் நடித்து, கெட்ட ஆட்டமும் போட்டிருக்கிறாராம். அதுவும் கருணாசுடன் முமைத்கான் இணைந்து ஆடியிருக்கிறாராம். இதை ஒரு பக்கம், பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லியே பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார் கருணாஸ். இந்தப் படத்தின் கதை பற்றி யார் கண்ணனிடம் கேட்டால், ‘ஒரே மாதத்தில் ரெண்டு பௌர்ணமி வருகிறது, முதலில் வரும் பௌர்ணமியில் நடக்கும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை திகிலில் உறைய வைக்கும்...’ என்று பயமுறுத்துகிறார். இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார். இசையும் படும் மிரட்டலாக இருக்குமாம்.

மிரட்டுறதுக்குன்னே படம் எடுக்கிறாங்கப்பா...

ப்ளேபாய் விஷால்

சத்யம், தோரணை ப்ளாப் படங்களைக் கொடுத்த பிறகு விஷால் கவனமாக கதையைக் கேட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் போலும். இப்போது அடுத்து அவர் களம் இறங்கியிருப்பது தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில். இந்தப் படத்தில் இவர் ப்ளே பாய் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் செம ரொமான்ஸாக இருக்குமாம். இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் ''யாவரும் நலம்'' படத்துல நடிச்ச நீது சந்திரா, மிஸ் இண்டியா 2007 சாரா ஜெயின் தவிர மூன்று புதுமுகங்களும் அறிமுகம் ஆகிறார்களாம். தாமிரபரணி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் யுவன் ஷங்கர் ராஜாவும் விஷாலும் இணைகிறார்கள். ஐந்து பாடல்கள். அத்தனையும் அற்புதமாக வந்திருக்கிறதாம். இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் விஷாலின் அண்ணன்.

கம்யூட்டர் நிறுவன அதிபரை ரகசியமாய் மணந்த சுவாதி!

நடிகை சுவாதி, கம்யூட்டர் நிறுவன அதிபரை ரகசியமாக மணந்தார். கடந்த நவம்பர் 22ம் தேதி நடந்துள்ளது அவர்கள் திருமணம் . நேற்றுதான் தகவல் தெரிந்தது.
விஜய் ஜோடியாக 'தேவா' படத்தில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து விஜய்யுடன் 'வசந்த வாசல்', 'செல்வா' படங்களிலும், அஜீத் ஜோடியாக 'வான்மதி' படத்திலும் நடித்தார். சமீபத்தில் வெளியான 'யோகி' படத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 45 படங்களில் சுவாதி நடித்துள்ளார்.
வர்ஜீனியாவில் கம்ப்யூட்டர் நிறுவன இயக்குனராக இருக்கும் கிரண் என்பவரை ரகசிய திருமணம் செய்துள்ளார் சுவாதி.
இவர்களின் திருமணம், கடந்த நவம்பர் 22ம் தேதி, ஹைதராபாத்தில் ரெட்ஹில்ஸ் பகுதியிலுள்ள மாருதி கார்டனில் நடைபெற்றுள்ளது. இதில் இருவீட்டு உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இருவரும் நேற்று தம்பதி சமேதராக திருப்பதி கோயிலில் சாமி கும்பிட்டனர்.
அப்போது திருமணம் குறித்து சுவாதி கூறுகையில், "இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த திருமணம் இது. குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால், திரையுலகை சேர்ந்தவர்களை திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை.
யோகி என்னுடைய கடைசி படம். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். கணவர் கிரணுடன் இம்மாத இறுதியில் வர்ஜீனியாவில் குடியேற உள்ளேன்' என்றார்.

பத்மலட்சுமி மீண்டும் நி்ர்வாண போஸ்!

கர்ப்பமாக இருக்கும், சல்மான் ருஷ்டியின் மாஜி மனைவி பத்மா லட்சுமி ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொணட்வர் மாடல் பத்மா லட்சுமி. தற்போது இவர் 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். சல்மான் ருஷ்டியின் மனைவியான இவர் கடந்த 2007ம் ஆண்டோடு ருஷ்டியை விட்டுப் பிரிந்து விட்டார்.
இந்த நிலையில், பேஜ்சிக்ஸ் என்ற பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இந்த போஸ் உள்ளது.
இவர் மாடலிங்குக்காக நிர்வாண போஸ் தருவது இது முதல் முறையல்ல என்றாலும கர்ப்பமாக இருக்கும்போதும் மாடலிங் போஸ் தந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பத்திரிகையின் உள்பக்கம் இடம் பெற்றுள்ள இன்னொரு புகைப்படத்தில், மைலி சைரஸ் வானிட்டி பேர் பத்திரிகைக்கு கொடுத்த குஜால் போஸை காப்பி அடித்து அதேபோல போஸ் கொடுத்துள்ளார் பத்மா.
இதுகுறித்து பத்மா கூறுகையில், நிர்வாணத்தின் போது நான் அழகாக இருப்பதாக உணர்கிறேன். உடைகள் அணிந்திருக்கும் போது அதற்கு ஒரு பெயர் வந்து விடுகிறது. ஆனால் நிர்வாணம் அப்படியல்ல. நம்மை அப்படியே வெளிக்காட்டும் முக்கிய குறியீடாக நான் கருதுகிறேன். நிர்வாணத்தின் மூலம் மட்டுமே நம்மை அப்படியே வெளிக்காட்ட முடியும் என்கிறார்.
39 வயதாகும் பத்ம லட்சுமி, தனது தற்போதைய வாழ்க்கை குறித்து கூறுகையில், எனது வாழ்க்கையை மீண்டும் ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்திக் கொண்டு வருகிறேன். என்னைப பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.
சரி பத்ம லட்சுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை?. அந்தக் கேள்விக்கு பத்மா லட்சுமியே இன்னும் பதில் அளிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்று கூறிச் சிரிக்கிறார்!.

மம்முட்டி ஜோடி ஸ்ரேயா!

ரஜினி, விஜய், விக்ரம் என ஒரு பெரிய ரவுண்ட் முடித்த ஸ்ரேயா, இப்போது மலையாளத்தில் திறமை காட்டச் சென்றுள்ளார்.
தனது முதல் படத்திலேயே அவர் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியுடன் நடிக்கிறாராம். இதில் இன்னொரு ஹீரோவும் உண்டு. அவர் பிருத்வி ராஜ். படத்துக்கு தலைப்பு போக்கிரி ராஜா!

புதிய இயக்குநர் வைசாக் இயக்கும் இந்தப் படத்துக்கு 30 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்துள்ளார் ஸ்ரேயா. ஜனவரியில் படப்பிட்ப்பு துவங்குகிறதாம்.

தமிழில் ஸ்ரீகாந்துடன் அவர் நடிப்பதாக வந்த செய்திகள் வெறும் வதந்திதானாம். தமிழில் அடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். வேறு படங்கள் எதுவும் இப்போதாக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்.

சரத் குமாருடன் இவர் நடித்துள்ள ஜக்குபாய் பொங்கலுக்கு வெளியாகிறது.

விஜய்யை கிறுகிறுக்க வைத்த சன்!

வேட்டைக்காரனால் வருகிற டென்ஷனிலிருந்து மீள்வதற்குள் விஜய்க்கு தாவு தீர்ந்து போகிறதாம்.
இதை விட பேசாமல் காங்கிரஸில் சேர்ந்து அதன் பாரம்பரிய அடையாளமான கோஷ்டிப் பூசலையே சமாளித்திருக்கலாம் போலிருக்கு என்று புலம்பும் அளவுக்கு.

பொதுவாக தான் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் கடைசி நிமிடம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது விஜய் மற்றும் அவரது கைடு-காட்பாதர்- நிஜபாதர் எஸ்ஏசியின் பாணி.
முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும் ரசிகனிலிருந்தே இப்படி இருந்தே பழக்கப்பட்ட விஜய்க்கு வேட்டைக்காரன் ஒரு ஷாக் அனுபவம்.
படத்தை ஆரம்பித்த போது பிரச்சினை இல்லை என்றும் சன் பிக்சர்ஸுக்கு விற்றதிலிருந்து பெரும் பிரச்சனையாகிவிட்டது விஜய்க்கு.
முதலில் படத்தை அவர் சொன்ன தேதிக்கு வெளியிடாமல் படத்தை முடக்கியவர்கள், பின்னர், விஜய்யின் அரசியல் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளையும் ரீஷூட் செய்தால்தான் ரிலீஸ் பண்ண முடியும் என முரண்டுபிடிக்க வேறு வழியில்லாமல் அதையும் செய்து கொடுத்தார் விஜய்.
தீபாவளி, பொங்கல் என ஏதாவது ஒரு விசேஷ நாளில் படத்தை வெளியிட ஆசைப்பட்டார் விஜய். ஆனால் எதிலும் இல்லாமல் டிசம்பர் 18ம் தேதி என அவர்களே நாள் குறித்துவிட்டார்கள். அதற்கடுத்த வாரம் ரிலீஸ் பண்ணியிருந்தால் கூட அது கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாகியிருக்கும்.
இப்போது உச்சகட்டமாக, படத்தை ரிலீசுக்கு முன் ஒரு சிறப்புக்காட்சி பார்க்கலாம், பிரிண்டை கொண்டுவாங்க என, பழைய நினைப்பில் விஜய் அண்ட் கோ கேட்க, 'அதெல்லாம் முடியாது. ரிலீசன்னைக்கே பாருங்க' என்று முகத்திலடித்தமாதிரி சொல்லிவிட்டதாம் சன் தரப்பு.
என்ன கொடுமைப்பா இது? என தந்தையிடம் புலம்புகிறாராம் விஜய்!.

வாய்ப்பு வந்தால் தமிழில் நடிப்பேன் : அசின்

ஜாலி மூடில் இருக்கிறார் அசின். காரணம் இல்லாமல் இருக்குமா? எல்லாம் கலைமாமணி விருது வாங்கிய சந்தோஷம்தான்.
இப்போது இரண்டு இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் அசின். (நம்பிட்டோம்!) அதனால் தான் தமிழில் அவரால் நடிக்க முடியவில்லையாம். இருப்பினும் தமிழில் நல்ல கதையுடன் கூடிய படம் அமைந்தால் நான் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் அசின்.
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அசின் அவரது அம்மாவுடன் தான் இருக்கிறாராம். எந்த பார்ட்டிக்கும் பப்புக்கும் போவதில்லையாம். இந்தியில் நடிப்பதால் தமிழில் நடிக்க மாட்டார் அசின் என்று வருகின்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிப்பாராம் அசின். நல்ல கதையை வைத்திருக்ககும் இயக்குநர்கள் என்னை சந்தித்தால் கால்ஷீட் தர ரெடி என்கிறார் அசின்.
தமிழ் இயக்குநர்கள் யாராவது கதையைக் கொண்டு போனால் அவரிடம் கதையைக் கேட்பதற்கு கூட நேரமில்லாமல் அசின் காட்டிக் கொள்வது... வேறு விஷயம்.

விஜய்க்கு அஜீத்தின் அட்வைஸ்!

'விஜய் அரசியலில் இறங்கக் கூடாது என்பது ஒரு நண்பனாக என்னுடயை வேண்டுகோள். அவரை அரசியல் நிம்மதியாக இருக்க விடாது.
அதற்காக அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. அவருக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யட்டும்!' என்று கூறியுள்ளார் அஜீத்.
மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பளிச்சென்று பேசிவிடுவதில் ரஜினியின் நேர் சிஷ்யர் அஜீத். ஏன் இப்படி? என்று கேட்பவர்களிடம், 'பின் விளைவுகள் பற்றியெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இது என் கருத்து அவ்வளவுதான்' என்று பளிச்சென்று பதில் தருவார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அஜீத், இப்படிக் கூறியுள்ளார்:
"அரசியல் எனக்கு வேண்டாம். சரி வராது. விஜய்யின் அரசியல் பிரவேசம் அவர் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொருத்தவரை அவர் அரசியலுக்கு வர வேண்டாம்.
அப்படி வருவதால் அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். ஆனால் மற்றவர்களுக்கு அதில் எந்த அளவு சந்தோஷமிருக்கும் என்று தெரியவில்லை.
அவருடன் நிறைய பேசி பழகியிருக்கிறேன். அவரது நலம் விரும்பாகவே இதை நான் சொல்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடும் முடிவு அவரது சொந்த விருப்பமே.
என்னைப் பொருத்தவரை இனி படங்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன். எனக்கும் 40 வயது ஆகப் போகிறது. இந்த வயதில் வாழ்க்கையும் தரமாக இருக்க வேண்டும், படங்களும் தரமாகத் தர வேண்டும்" என்றார்.
நூத்துல ஒரு வார்த்தை!

விக்ரம் ஹீரோயின் மாற்றம்?

தனது புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் செல்வராகவன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ஹீரோ விக்ரம், ஹீரோயின் ஸ்வாதி என்பது அனைவரும் அறிந்தது.

இந்தப் படத்தில் ‌ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் கல்தா கொடுத்திருக்கிறார் செல்வா. இந்தி இசையமைப்பாளர்தான் இந்த புதிய படத்துக்கு இசை. அடுத்த கல்தா யாருக்கு என்பதுதான் இப்போது இன்டஸ்ட்‌ரியில் பரபரப்பாக பேசப்படும் விஷயம்.

அனேகமாக ஹீரோயின் ஸ்வாதி படத்திலிருந்து தூக்கப்படலாம் என்கிறார்கள். நடிப்பு ச‌ரியில்லை, கிளாமர் அதைவிட மோசம் என காரணங்கள் அடுக்குகிறது பட யூனிட். அதேபோல படத்தில் ஆண்ட்‌ரியா நடிப்பதாக வந்த செய்தியும் உண்மையில்லையாம்.

மொத்தத்தில் என்னமோ நடக்குது மர்மமா இருக்குது கதைதான்.

சூறாவளியானார் வைகைப்புயல் புயல்...

வைகைப்புயல் கொஞ்ச நாட்களாக சூறாவளியாகியிருக்கிறார். அதில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும். இவரது தினச் சம்பள கணக்கு திகில் மூட்டுகிறது.

மொத்தமாக பேசுகிற சம்பளமோ மூச்சு முட்ட வைக்கிறது. அப்படி கொடுக்க சம்மதித்தாலும் அவர் நடந்து கொள்கிற முறை? ஐயோடா...!

சமீபத்தில் தனது பேராண்ம பலத்தை காட்டிய ஹீரோவின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் சூறாவளி. சம்பளம் பெரிய்ய்ய்ய்ய ஒன்று! பத்து நாட்களுக்குள் முடிச்சிரணும் என்ற கண்டிஷனோடு ஒப்பந்தம் போட்டாராம். ஆனால் படப்பிடிப்புக்கு வருவதே பதினொரு மணிக்குதானாம். சரியாக நாலு மணிக்கெல்லாம் வர்ர்ர்றட்டுமா என்று கிளம்பிவிடுகிறாராம். இடையில் ‘லஞ்ச்’ ஒரு மணி நேரம்! எடுக்க நினைத்த காட்சிகளில் பாதி கூட முடியவில்லை. அதற்குள் கால்ஷீட்டே முடிந்துவிட்டதாக கூறினாராம் அவரது மேனேஜர். இதென்ன பெரிய தில்லாலங்கடியாக இருக்கே என்று பதறுகிறார்கள்.

இப்படியெல்லாம் நடக்குதா என்று யூனிட்டை சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் விசாரித்தால், ஆரம்பத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அப்படி நடந்திச்சு. ஆனால் அதுக்கு பிறகு சின்சியரா வந்து முடிச்சு கொடுத்திட்டாரு. படத்திலே அவருடைய பங்கு ரொம்ப பிரமாதமாக வொர்க் அவுட் ஆகியிருக்கு என்கிறார்கள். நல்ல குடும்பத்து படம். நாசுக்கா முடிச்சு கொடுங்கப்பு...

சந்தியாவின் கவர்ச்சி ஆல்பம்!

வாரிசு நடிகரை வளைத்துவிட்டார் என்ற சீரியஸான புகாரில் சிக்கியுள்ள சந்தியா, இப்போதல்லாம் கோடம்பாக்கம் பக்கம் அதிகம் தலைகாட்டுவதில்லையாம்.

பெரும்பாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு ப் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.

இப்போது தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்துவரும் சந்தியா, சமீபத்தில் ஒரு ஸ்பெஷல் போட்டோ செஷன் நடத்தினாராம்.

இதிலிருந்து கவர்ச்சி ததும்பும் (?) தனது ஸ்டில்களைத் தேர்ந்தெடுத்து, தனி ஆல்பமாக்கி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் பட உலக பிரமுகர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளாராம். இதற்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம்.

இனி இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வெளியாகி வெற்றி பெற்றால் தவிர, வேறு தமிழ்ப்படங்கள் ஒப்புக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம் சந்தியா.

அ‌ஜித்தின் 50வது படம்

அசல் அ‌ஜித்தின் 49வது படம். தல-யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குகிறார்கள்? தயா‌ரிப்பாளர் யார்? யாருக்கும் இதுவரை ச‌ரியான பதில் தெ‌ரியவில்லை.

முதல் முறையாக ஐம்பதாவது படம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. பில்லா படத்தை தயா‌ரித்த சுரேஷ் பாலா‌ஜி அ‌ஜித்தின் 50வது படத்தை தயா‌ரிக்கிறாராம். இது முதல் காப்பி அடிப்படையிலான தயா‌ரிப்பாக இருக்கும் என்கிறார்கள்.

விஜய்யின் வேட்டைக்காரனை ஏவிஎம் தயா‌ரித்திருந்தாலும், அதன் ஒட்டு மொத்த விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியிருக்கிறது.

அதுபோல் அ‌ஜித்தின் 50வது படத்தை சுரேஷ் பாலா‌ஜியிடமிருந்து முதல் காப்பி அடிப்படையில் வாங்கப் போவது சன் பிக்சர்ஸ்தான் என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் ஓ‌ரிரு தினங்களில் உண்மை நிலவரம் தெ‌ரிய வரலாம்.

பரத் கேட்கும் சம்பளம்

திடீர் பிரேக் விட்டுவிட்டார்கள் திருத்தணிக்கு. பேரரசு இயக்கி அவரே இசையமைத்திருக்கும் இப்படம் காரம் ஸ்வீட் கலந்த கரம் மசாலாவாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதல் ஷெட்யூலில் 25 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பேரரசு அடுத்த ஷெட்யூல் போவதற்கு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாராம். (ஒங்களுக்கேவா?)

இடையில் கதை கேட்பது, சம்பளம் பேசுவது என்று தனி டிராக் ஓட்டிக் கொண்டிருக்கிறார் பரத். ஆனால், என்ன காரணத்தாலோ மோசர்பேர் தயாரிக்கும் படத்திலிருந்து பரத் நீக்கப்பட்டுள்ளதாக கும்மியடிக்கிறது கோடம்பாக்கம். கண்டேன் காதலை படத்திற்கு பிறகு ஹைட் அண்டு சீக் என்ற படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்த இந்நிறுவனம் இதற்காக புது இயக்குனர் ஒருவரையும் நியமித்து டிஸ்கஷனில் அமர வைத்திருந்தது. ஆனால், தனது சம்பளத்தை திடீரென்று ஏற்றிவிட்டாராம் பரத். இதனால் தனது யோசனையில் சற்றே பின் வாங்கியிருக்கிறதாம் மோசர்பேர்.

அப்படியே இன்னொரு தயாரிப்பாளருக்கும் எனிமா கொடுத்திருக்கிறார் பரத். ஜெயம்கொண்டான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்து பின் கண்டேன் காதலையில் தன்னை நிரூபித்திருக்கும் கண்ணன் இயக்கத்தில் மற்றொரு படத்தை தயாரிக்கப் போகிறார் சத்யஜோதி தியாகராஜன். இந்த படத்தில் பரத் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கண்ணன் விரும்ப, சம்பளப் பேச்சு வார்த்தை நடக்கிறது. விடுவதும், பெறுவதும் பரத் கையில் என்கிறார்கள்.

பார்த்து சாரு...