Friday, November 20, 2009

சினிமா சங்க நடவடிக்கை - கமல் பேட்டி

டெல்லியை தலைமையிடமாக கொண்ட ‘பிக்கி’ அமைப்பின் கருத்தரங்கு சென்னையில் கடந்த 2 நாட்களால நடந்தது. இந்த அமைப்பின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சி முடிவடைந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தார்.;
“இனிமேல் தயாராகும் சினிமா படங்களின் காப்புரிமையை முறைப்படுத்த வேண்டும்.
பழைய சினிமா படங்கள் காணாமல் போவதை தவிர்பதற்கு கலாசார கடமையாக நினைத்து சினிமா படங்களை பாதுகாக்க வேண்டும்.
சினிமா சம்பந்தப்பட்ட சங்கங்கள் சட்டவிரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது.
சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பரீதியில் சிக்கல்கள் ஏற்படவாய்ப்பிருக்கிறது. எனவே அதை வரைமுறைபடுத்த வேண்டும். சினிமாவுக்கு அது தேவையாக இருக்கிறது. எடிட்டிங் டப்பிங் போன்ற பணிகளுக்கு இந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது.
சினிமா படங்களுக்கு வழங்கப்படும் வங்கி வட்டியை குறைப்பதற்காக சினிமா தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தென்னிந்திய அளவில் ‘பிக்கி’ அமைப்பிற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக நான் (கமல்ஹாசன்) இருக்கிறேன். கமிட்டியின் உறுப்பினர்களாக இயக்குனர் கே.பாலசந்தர் பட அதிபட் ஏ.வி.எம்.சரவணன். இயக்குனர் மணிரத்னம். பாலசுப்பிரமணிய ஆதித்தன். மனோஜ் குமார் சந்தாலியா. டி.ஜி.தியாகராஜன். சாய்பிரசாத். கவிதா பிரசாத். ஆர்.சரத்குமார். எம்.எஸ்.குகன். ஜி.ராம்குமார். மம்முட்டி. மோகன்லால் உள் பட 31 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்.”

தமன்னா கைவசம் ஆறு படங்கள்

கண்டேன் காதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் தமன்னா அடுத்தடுத்து பையா, தில்லாலங்கடி, சுறா படங்கள் வெளிவர உள்ளன. இதில் பையா படம் பொங்கல் அன்று வெளிவரவிருக்கிறது. தமன்னாவுக்கு கமலுடன் நடிக்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருக்கிறதாம். இவருக்குப் பிடித்த ஹிரோயின் அசின் மற்றும் திரிஷாதானம். அவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல் தனக்கெனவும் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க தமன்னா ரொம்பத்தான் ஆசைப்படுகிறாராம். தான் ஒரு நடிகையாக இருப்பதை நினைத்து அடிக்கடிப் பெருமைப்படும் தமன்னாவை இந்தியில் நடிக்கக் கூப்பிட்டார்களாம். நல்ல கதை என்ற போதிலும் அதில் ஒரு காட்சியில் அதில் நிச்சல் உடை அணிந்து வரவேண்டிய காட்சி இருந்ததால் முடியாது என்று சொல்லிவிட்டாராம் தமன்னா. மேலும் இரண்டு தெலுங்கு படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தமன்னா. விஜயுடன் நடிப்பது தமன்னாவுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறதாம்.

MailPrint பிரான்ஸ் மொழி பேசும் சமீரா

‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சமீரா நடிப்பில் பாஸ் மார்க்கை அள்ளிப் போனார். ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் மூன்று ஹிரோயின் என்றாலும் சமீராவுக்கு இந்த படம் நல்ல பெயரை வங்கி கொடுத்தது. அதை அடுத்து இப்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் அசல். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார் சமீரா. இந்த படத்தை சரண் இயக்க, தயாரிப்பது சிவாஜி புரடக்க்ஷன்ஸ். இந்த படத்தில் பிரான்ஸ் கலாச்சார நிறுவனத்தில் வேலை செய்பவராக வருகிறார் சமீரா. சமீபத்தில் இந்த படத்தின் சில காட்சிகளை பிரான்ஸில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். படத்தில் சில காட்சிகளில் சமீரா பிரான்ஸ் மொழி பேசி நடிக்கிறாராம். பிரான்ஸ் மொழியை பள்ளியில் படிக்கும் போது இரண்டாவது மொழியாக தேர்ந்தெடுத்து படித்ததால் அம்மணி பிரான்ஸ் மொழி பேசும் இந்த படத்தில் காட்சிகளில் பின்னிப்பெடல் எடுத்துவிட்டாராம்.

சிங்கத்துக்காக உருவான காவல்நிலையம்

ஸ்டுடியொ க்ரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம்’ படத்தில் அரிவாள் இயக்குனர் ஹரி ரொம்பவே பிஸியாக இருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடி அருந்ததி புகழ் அனுஷ்கா.
படத்தில் காவல்நிலையம் நடக்கும் சம்பவம் தொடர்பான ஒரு காட்சி வர, இந்த காட்சியைப் படம் பிடிக்க ஒரு காவல் நிலையம் தேவைப்பட்டது. காவல் நிலையம் அமைக்க சென்னை நகரம் முழுவதும் இடத்தை தேடோ தேடு என்று தேடினார் ஹரி.
ஆனால் ஒரு இடம் கூட அவர் நினைத்தபடி அமையவில்லை. கடைசியாக சாலிகிராமத்தில் அமைக்கலாம் என்று முடிவுசெய்து ஒரு இரவுக்குள் அந்த காவல் நிலையத்தை அமைத்திருக்கிறார்கள்.
காலையில் அந்த காவல்நிலையத்தைப் பார்த்த மக்கள் ஏற்கனவே ஒரு காவல் நிலையம் இந்த ஏரியவில் இருக்க, இன்னொரு காவல் நிலையமா? என்று ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறார்கள்.
அதற்கு பின் தான் தெரிந்துது, இது சினிமாவுக்காக போடப்பட்ட செட் என்று. அந்த அளவுக்கு இயக்குனர் ஹரி அந்த செட்டை அமைத்திருந்தார்.

ஜெயம்ரவியை இயக்கும் பிரபுதேவா (பாரிஸில் வாழும் இரண்டு தமிழ் குடும்பங்களின் வாரிசுகள் காதலிக்கிறார்கள்)

ஜாலி மூடில் இருக்கிறார் பிரபுதேவா. நயன்தாரா பிரச்சனையை மீடியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டிவிட்டது ஒரு காரணம் என்றாலும், இன்னொரு காரணம் அவருடைய இந்திப்படம் ஹிட்டானதுதான்.
இதைத் தொடர்ந்து இந்திப்படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரபுதேவாவுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த இந்தி வாய்ப்புகளை தூரத்தள்ளிவிட்டு, தமிழ் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஜெயம் ரவி. இந்தப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
பாரிஸில் வாழும் இரண்டு தமிழ் குடும்பங்களின் வாரிசுகள் காதலிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் தோற்றுப் போக, அதற்குப் பிறகு இருவரும் என்னவாகிறார்கள் என்பதுதான் கதையாம்.

ஜெயம்ரவிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றுத் தெரிகிறது. ஜெயம்ரவி தில்லாலங்கடியை முடித்த கையோடு இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.

ரஜினி, கமலுக்கு சிறந்த நடிகர் விருது

MailPrint
ரஜினி, கமலுக்கு சிறந்த நடிகர் விருது

2007, 2008 ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அடுத்த மாதம் 8 ந் தேதி நடக்கிறது. சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைத்துறையில் செயற்கரிய சேவை புரிந்த கலைஞர்களை சிறப்பிக்கும் பொருட்டு மாநில அளவிலான "கலைமாமணி'' விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகின்றது. 2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் 71 சிறந்த கலைஞர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா, 28 11 2009 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், தமிழக கவர்னர் பர்னாலாவும், முதல் அமைச்சர் கருணாநிதியும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ஏற்கனவே கலைமாமணி விருது பெற்ற மூத்த கலைஞர்கள் மூன்று பேருக்கு தலா 15 ஆயிரம் வீதம் பொற்கிழி தொகையும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும் இந்த விழாவில் வழங்கப்படவுள்ளது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் செய்து வருகின்றது.

அது போலவே, 8 12 2009 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. முதல் அமைச்சர் கருணாநிதி, விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கவிருக்கிறார். விழா ஏற்பாடுகளை தமிழக அரசின் செய்தித் துறை செய்து வருகின்றது.

இந்த விழாவில் சிறந்த படங்களுக்கான விருதுகள், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன் நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த கதை ஆசிரியர், சிறந்த உரையாடல் ஆசிரியர், சிறந்த பாடல் ஆசிரியர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஒலிப்பதிவாளர், சிறந்த எடிட்டர், சிறந்த கலை இயக்குநர், சிறந்த சண்டை பயிற்சியாளர், சிறந்த நடன ஆசிரியர், சிறந்த ஒப்பனைக் கலைஞர், சிறந்த தையல் கலைஞர், சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் ஆகியோர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதே விழாவில் 2006 2007ஆம் ஆண்டுக்கும், 2007 2008ம் ஆண்டுக்குமான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இணையதளம் என்றாலே கோபத்தில் எகிறித்தான் குதிக்கிறார்கள் சினிமாக்காரர்கள். (கோபத்தின் உச்சியில் இசையமைப்பாளர்)

இணையதளம் என்றாலே கோபத்தில் எகிறித்தான் குதிக்கிறார்கள் சினிமாக்காரர்கள். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. பிரிண்ட் மீடியா என்றால் அச்சில் மட்டும்தான் கொண்டு வர முடியும். ஆனால் இணையதளக்காரர்களோ, படங்களின் வீடியோக்களையும் பாடல்களையும் இணையத்தில் ரகசியமாகப் போட்டுத் தாக்கிவிடுகிறார்கள்.
இப்போது டென்ஷனில் இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத். இவர் சிங்கம் படத்திற்கு இசை அமைத்து வருவது ஊரறிஞ்ச விஷயம். இந்தப் படத்தை, சூர்யா அனுஷ்கா நடிப்பில், ஹரி இயக்கிவருகிறார்.
இதில் ஒரு ரீமிக்ஸ் பாடல் வருகிறது. முரட்டுக்காளை படத்தில் ரஜினி பாட்டான, ‘பொதுவாக எம்மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...’ இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார் தேவிஸ்ரீபிரசாத்.
இந்த ரீமிக்ஸ் பாடலை மெல்ல இணையத்தில் யாரோ கசிய விட்டிருக்கிறார்கள்.
இதனால் கொதிப்படைந்து போயிருக்கிறார் இசையமைப்பாளர். ‘நாம எவ்வளவு கஷ்டப்பட்டு மியூசிக் போடறோம்... எப்படி இவங்க எடுத்து போட்டாங்கன்னு தெரியலையே...’ என்று கோபத்தில் உச்சியில் இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத்.

பிரகாஷ்ராஜின் இனிது இனிது


நடிகர் பிரகாஷ்ராஜ் தமது டூயட் மூவிஸ் சார்பாக தயாரித்து வரும் படம் இனிது இனிது. இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி சக்கைகோடு போட்ட ஹேப்பி டேஸ் படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தை குகன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கி வருகிறார்.
இயக்குநர்தான் புதுமுகம் என்றில்லை. நடிகர்களும் புதுமுகங்கள்தான். வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் என்பதால் இந்தப் படமும் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
இந்தப் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளார் அவர். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இன்று இப்போது ரீரிக்கார்டிங் மற்றும் எடிட்டிங் பணிகள் போய்க்கொண்டிருக்கின்றனவாம்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் பிரகாஷ்ராஜ்.

டூப் போட்டு எடுத்திட்டாங்க - கீர்த்திசாவ்லா


‘சுவேதா, வெலிங்டன் ரோடு’ படத்தில் ஏன்தான் நடித்தோமோ என்று நொந்து போயிருக்கிறார் கீர்த்தி சாவ்லா. ‘சிலந்தி’ படத்தை தயாரித்த நிறுவனம் இப்போது கீர்த்தி சாவ்லாவை வைத்து ‘சுவேதா, வெலிங்டன் ரோடு’ படத்தை எடுத்து வெளியிட்டது.
‘சிலந்தி’ படத்திலும் கிளு கிளு காட்சிகள் ஏராளமாக இருந்தன. ‘சுவேதா’ படத்திலும் கவர்ச்சி காட்சிகள் எக்கச்சக்கம். இவற்றில் புகுந்து விளையாடியிருக்கிறார் கீர்த்திசாவ்லா.
போதாக்குறைக்கு கற்பழிப்புக் காட்சிகள் வேறு ரசிகர்களைத் துவம்சம் செய்கின்றனவாம்.
இந்தக் காட்சிகளைப் பார்த்த தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் சிலர், இது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு கால்ஷீட் தந்தாக வேண்டும் என்று அன்புக் கட்டளை இட, ‘இந்தக் காட்சிகளில் எல்லாம் நான் நடிக்கவில்லை. டூப் போட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள்‘ என்று சொல்லி சமாளித்து வருகிறாராம் அம்மணி.
‘ம்... கலைஞர் கதை வசனத்தில் எல்லாம் நடிச்ச நம்மளை துகிலுரியும் காட்சிகளில் போட்டு இப்படி பதில் சொல்லும்படி வைத்துவிட்டார்களே’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கீர்த்திசாவ்லா.