சென்னையில் இன்று மீடியாக்களுக்கான ‘ஆதவன்’ தீனியை வழங்க வந்திருந்தார் சூர்யா. கூடவே இயக்குனர் K.S.R. மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி. நாயகி நயன்தாரா ஆப்செண்ட். “ அவங்களேட பர்சனல் மேட்டர் எழுதினதுல, அந்த பொண்ணு பொம்பவே அப்செட் ஆகிட்டாங்க. அதுனாலதான் இங்க அவங்க வரல” என காரணம் தெரிவித்த ரவிக்குமார், “ஒரு படம் நல்லா இருக்கு நல்லா இல்லைன்னு எழுத உங்களுக்கு (பத்திரிகைகள்) உரிமைஇருக்கு ஆனா அந்த படத்தை பார்க்கக்கூடாதுன்னு எழுத உங்களுக்கு உரிமை இல்லை” என அறிவுறுத்தினார்.
சூர்யாவுக்கும் சேர்த்து ஒரு அறிவிரை சொன்னார் K.S.R. அது....
“இன்றைய இளம் நடிகர்களில் ரொம்ப டெடிகேஷனாக இருப்பதில், நடிப்பை நேசிப்பதில் சூர்யாதான் நம்பர் ஒன். நாளைக்கு என்ன சீன் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஹோம் ஒர்க் செய்து ஸ்பாட்டில் அசத்தும் ஒரு திறமைசாலி. வித்தியாசமான கதைகளில் நடிக்கவேண்டும், பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வெறி அவருக்குள் நிறையவே இருக்கிறது. அதற்காக நிறைய ரிஸ்க் எடுக்கிறார். அதை மட்டும் அவர் குறைத்து கொள்ளவேண்டும். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். உங்களை நம்பி தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் மட்டுமமின்றி குடும்பமும் இருக்கிறது” என்றார்.
“இந்த படத்துல பத்து வயசு பையனா நடிக்கிறேன். இருபது நிமிடங்கள் வரும் ப்ளாஷ்பேக்கில்தான் அப்படி வருகிறேன். இதன் கிராபிக்ஸ் வேலைக்கு மட்டும் நாலரை கோடி ரூபாய் கேட்டார்கள். டைரக்டரோட கிரியேட்டிவிட்டினாலதான் இந்த சீனே உருவானது. அதற்காக அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். சரோஜாதேவி மேடத்துடன் நடித்த அனுபவம் என்னால் மறக்க முடியாது. நிறைய விஷயங்களை அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன்” என்றார் சூர்யா.