Friday, September 18, 2009

டோரன்டோவில் ஷ்ரியா!

Shriya Saran

நம்ம ஊரு ஷ்ரியா சரண் நடித்த படம் டோரன்டோ பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினருடன் டோரன்டோ போயுள்ளார் ஷ்ரியா.

தமிழில் பிசியாக உள்ள ஷ்ரியா 'சைட் பை சைடாக' இந்தியிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த படம் குக்கிங் வித் ஸ்டெல்லா. இப்படத்தில் ஷ்ரியாவுடன் சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள லிசா ரேவும் இப்படத்தில் நடித்துள்ளார். திலீப் மேத்தா படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் டோரன்டோ பட விழாவில் பங்கேற்றுள்ளது. பட திரையீட்டில் கலந்து கொள்வதற்காக ஷ்ரியாவும், சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோரும் டோரன்டோ சென்றுள்ளனர்.

பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் [^], நடிகையரை சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார வைத்து அழைத்துச் சென்றனர். அதேபோல, ஷ்ரியாவும், சீமாவும் ரிக்ஷாவில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருவரும் அழகிய புடவையில் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி ஒய்யாரமாக அமர்ந்து வந்த காட்சியை பட விழாவுக்கு வந்தவர்கள் கண்டு ரசித்தனராம். மஞ்சள் நிற சேலை மற்றும் தங்க நிற பிளவுசில் படு கிளாமராக காட்சி அளித்தார் ஷ்ரியா.

நடிகர் நடிகையரின் வருகையைப் பார்ப்பதற்காக திரண்டிருந்த கூட்டத்தினர் கண்கள் எல்லாம் ஷ்ரியாவின் கவர்ச்சி [^] மீதே நிலை குத்தி நின்றிருந்ததாம்.

சைக்ளிங் வித் ஷ்ரியா..!

அருண் விஜய் நடிக்கும் ‘மாஞ்சா வேலு’

ருண் விஜய் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘மலை மலை’. இந்தப் படம் ஓரளவு வெற்றியும் பெற்றது.
‘மலை மலை’ பட டீம் இப்போது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டது. இந்தப் படத்திற்கு ‘மாஞ்சா வேலு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கதாநாயகன் அருண் விஜய். இந்தப் படத்தையும் வெங்கடேஷ்தான் இயக்குகிறார். ஒளிப்பதிவில் இருந்து பப்ளிசிட்டி டிசைன்ஸ் வரைக்கும் ‘மலை மலை’ படத்தில் பணியாற்றியவர்களே இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.
 
‘மாஞ்சாவேலு’ படத்தின் கதையும் ‘மலை மலை’ படத்தின் கதையும் வேறு வேறு என்பது ஒரு ஆறுதல்.

ஒரே நேரத்தில் இரண்டு படம்

தமிழில் ஒரு படம் தயாரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிற நிலையில் தமிழில் இரண்டு படங்களை எடுத்து வருகிறார் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம். இவர் ‘திருட்டுப் பயலே’ என்ற படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட, அதைத் தொடர்ந்து ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தைத் தயாரித்தார். இந்தப் படமும் ஹிட்டானது. சமீபத்தில் வந்து அரைகுறையாக ஓடிய ‘மாசிலாமணி’யும் இவர் தயாரிப்பில் வெளிவந்த படம்தான். ‘தில்லாலங்கடி’, ‘கந்தக்கோட்டை’ ஆகியவை இப்போது இவரது தயாரிப்பில் இருக்கும் இரண்டு படங்கள். ‘தில்லாலங்கடி’யில் ஜெயம்ரவி நடிக்கிறார். இவருக்கு ஜோடி தமன்னா. ‘கந்தக்கோட்டை’யில் நகுல் நடிக்க அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இரண்டு படங்களுமே நிச்சயம் வெற்றிப் படங்களாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அகோரம்.

நம்பிக்கை நிஜமாகட்டும்.

சிபிஐ நீதிமன்றத்தில் கெளதமி-அர்ஜுன்

சினிமா தயாரிக்க கடன் வாங்கிவிட்டு, மீண்டும் திருப்பி செலுத்தாத வழக்கில் நடிகை கெளதமி மற்றும் நடிகர் அர்ஜுன் ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில்விசாரணை்கு ஆஜராகினர். வடிவாம்பிகை என்பவர் 'அக்னி வளையம்' என்ற பெயரில் நடிகர் அர்ஜூன், நடிகை கௌதமி ஆகியோரை வைத்து படம் தயாரிப்பதாகக் கூறி இந்தியன் வங்கியில் முன்பு கடன் பெற்றார்.

ஆனால் அறிவித்தபடி படம் தயாரிக்கப்படவில்லை. வங்கியில் பெற்ற பணத்தையும் திரும்பச் செலுத்தவில்லை.

பலமுறை கேட்டும் உகிய பதில் இல்லாததால், இந்தியன் வங்கியினர் சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட்டுவழக்குதொடர்ந்தனர். இது தொடர்பாக சிபிஐவிசாரணைமேற்கொண்டது.

படத்தின் நாயகன்-நாயகியான அர்ஜுன்-கெளதமி ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இருவரையும் இன்றுவிசாரணை்கு வருமாரு நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார்.

சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை்கு வந்த போது கெளதமி, அர்ஜுன் இருவருமே ஆஜராகினர்.

அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அவர்கள் நீதிபதியிடம் 'தாங்கள் இந்த படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தரவில்லை, எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை, பணமும் பெறவில்லை என்று கூறினர்.

விசாரணை தொடர்கிறது.

அபர்ணாவை அழ வைத்த கதை

புதுக்கோட்டையில் சரவணன்’ படத்தில் அறிமுகம் ஆன அபர்ணா அதைத் தொடர்ந்து ‘ஏபிசிடி’ படத்தில் நடித்தார். அதற்கு பின்பு எந்த வாய்ப்புகளுமே இல்லாததால் சும்மா வீட்டிலேயே இருந்தவருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு ‘கண்ணுக்குள்ளே’ படத்தில் கிடைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே குறும் படம் ஒன்றில் நடிக்கிறார் அபர்ணா. இந்தக் குறும்படத்தில் இவருக்கு இலங்கை அகதி வேடமாம். ‘ஈழக்கனவுகள்’ என்ற தலைப்பு கொண்ட இந்த குறும் படத்தை கலைவேந்தன் இயக்கி வருகிறார். இலங்கை அகதிப் பெண்ணுக்கு ஏற்படும் காதல்தான் இந்த படத்தில் கதை. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே அழுது விட்டாராம் அபர்ணா.

ரசிகர்களையும் அழ வைக்குமா...?

விக்ராந்துக்கு கல்யாணம்

‘கற்க கசடற‘, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்க்கு உறவினர் ஆவார். இவருக்கும் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகை மனஸாவுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்க உள்ளது. மனஸா மலையாள ஒளிப்பதிவாளர் ஹேமச்சந்திரனின் மகளாவார். இவர் ‘மகளுடை அம்மா’ என்னும் மலையாள டிவித் தொடரில் சேதுலட்சுமி என்ற கேரட்டரில் நடித்ததன் மூலம் விரைவில் பிரபலமடைந்தவர். தற்போது மனஸாவின் கைவசம் சில தொடர்கள் இருக்கின்றன. திருமணத்திற்குப் பிறகு விக்ராந்த் சம்மதித்தால் அந்தத் தொடர்களில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் மானஸா.

ம்... சம்மதிக்காமலா போயிடுவாரு...

அசின்-டோணி 'லவ்'?

Asin 
இதுவரை லட்சுமிராய் பக்கம் வீசிக் கொண்டிருந்த டோணி காற்று இப்போது அசின் பக்கம் வீச ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பாலிவுட்டில் பரபரப்பாய்.

லட்சுமிராய்க்கும் தனக்கும் இனம்புரியாத நெருக்கம் என்றும் அது காதலா இல்லையா தெரியாது என்றெல்லாம் தத்துவஞானிகளுக்கு மட்டுமே புரியும் வகையில் பேசி வந்தார் டோணி. டோணி சென்னை [^] வந்தால் லட்சுமிராயுடன்தான் விருந்து சாப்பிடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அசினுடன் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தாராம் டோணி. அவ்வளவுதான்... அன்றுமுதல் பிஸின் மாதிரி டோணியுடன் ஒட்டிக் கொண்டாராம் அஸின்.

இருவரும் செல்லில் மணிக்கணக்கில் பேசுவது என்று தொடங்கிய பழக்கம், பிறந்த நாளுக்கு அசினை தனியாக அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. அத்துடன் நிற்கவில்லையாம் இப்போது.

இந்த நெருக்கம் இருவரையும் காதலில் பிணைத்து விட்டதாக பரபரப்புடன் பேசுகிறார்கள் பாலிவுட்டில்!



என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்க! - மன்றாடும் சிம்ரன்

Simran

புதிய நாயகிகளுக்கே வாய்ப்பு கிடைப்பது படு திண்டாட்டமாகிவரும் இன்றைய நிலைமையில், இரண்டு மூன்று ரவுண்டடித்து கல்யாணமாகி அந்த வாழ்க்கை போரடித்துவிட்டதால் மீண்டும் நடிக்க வந்த நடிகைகள் நாளுக்கு நாள் களத்தில் அதிகரித்தபடி உள்ளனர்.

திரும்ப நடிக்கவே வரமாட்டேன்.. அதுவும் கோடம்பாக்கமே வேண்டாம் என்று இறுமாப்புடன் போய், ஒரு குழந்தை [^] பிறந்ததும் திரும்ப நடிக்க வந்தவர் சிம்ரன். அவரும் மீண்டும் கதாநாயகியாக என்னென்னவோ சொய்து பார்த்துவிட்டார். ஒன்றும் நடக்கிற வழியைக் காணோம். நிறைய சமையல் மசாலா விளம்பரங்களில் நடித்ததோடு சரி.

சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த காட்சிகள் சகிக்க முடியாத ரகமாகிவிட, வாய்ப்புக் கொடுக்கலாமா என்ற யோசனையிலிருந்தவர்கள் கூட பின்வாங்கிவிட்டார்கள்.

இப்போது 'தலைக்குமேல போயாச்சு... ரெண்டில் ஒண்ணு பார்த்துடலாம்?' என நினைத்துவிட்டாரோ என்னமோ... இப்போது நீச்சல் உடையிலும் நடிக்கத் தயாராகிவிட்டாராம் அம்மணி.

நீச்சல் உடை, முத்தக் காட்சி, கிளு கிளு ஐட்டம் நடனம் எதுவாக இருந்தாலும் நான் ரெடி... வாங்கோ என்று சொல்லியனுப்புகிற அளவுக்கு இறங்கி வந்துவிட்டாராம் சிம்ரன்.

இந்த காஸ்ட்யூமெல்லாம் நல்லாதான் இருக்கும்... ஆனா அதை இப்போ நீங்க போட்டா நல்லாருக்குமா? என்று நக்கலாகக் கேட்கிறார்களாம் சில குறும்புக்கார இயக்குநர்கள்.

ரிஷ்க் எடுப்பாரா விக்ரம்?

படங்களில் நடிப்பதற்கு உடம்பைக் கூட்ட குறைக்க, சண்டைக்காட்சிகளில் நடிக்க என பல ரிஸ்க்களை எடுக்கக் கூடியவர் விக்ரம்.
அதற்கு அவர் எப்போதுமே யோசித்ததில்லை. ஆனால் அவர் அடுத்து ரிஷ்க் எடுப்பாரா என்று கேள்விக்கணை எழுவது செல்வராகவன் படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்பது பற்றிதான்.
 
சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவனை எடுத்து முடித்த செல்வராகவன் சுமார் இரண்டு வருடங்களாக அந்தப் படத்தை தரதரவென்று இழு இழுவென்று இழுத்து முடித்தார். அடுத்து செல்வராகவன் குறி வைத்திருப்பது விக்ரமைத்தான். ஆனால் செல்வராகவனைப் பற்றித் தெரிந்தவர்கள் எல்லாம் ‘கந்தசாமியே பல மாதங்களுக்குப் பிறகுதான் ரிலீசாகி இருக்கிறது... இனிமேலும் செல்வராகவன் படம்னா... அதுக்கு ரெண்டு வருஷம் போயிடும்... இப்படியே நடிச்சிட்டிருந்தா ஆயுசு பூராவுக்கும் நாலு படம் தான் நடிக்க முடியும்’ என்றும்... இப்படியே போனா மக்கள் மறந்தே போயிடுவாங்கன்னும் காதில் போட்டிருக்கிறார்கள். இதனால் தீவிரமாக யோசித்து வருகிறார் விக்ரம்... செல்வராகவன் படத்தில் நடித்து ரிஷ்க் எடுக்கலாமா வேண்டாமான்னு...

தொடக்கத்திலேயே தடங்கல்

தியேட்டருக்கு வந்த வேகத்தில் திரும்புவதுதான் விஷால் படங்களின் வழக்கம். அதை முடியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஷால் இப்போது தீராத ‘விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் நிச்சயமாக வெற்றிப் படம் தான் என்கிற நம்பிக்கை அவருக்கு மட்டுமில்லை... இயக்குநர் எல்லோருக்கும்தான். இந்தப் படத்தின் போட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் விஷால், நீது சந்திரா பங்கேற்றனர். புகழ்பெற்ற புகைப்படகலைஞர் வெங்கடராமன் ஸ்டில்களைச் க்ளிக்கிக் கொண்டிருந்தார். அப்போது போட்டோகிராபர் அசோசியேசன் உறுப்பினர்கள் நுழைந்து வெங்கடராமனுக்கு தடங்கல் ஏற்படுத்தினர். இதனால் போட்டோ ஷூட் நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் வெங்கடராமன் போட்டோகிராபர் அசோசியேசனில் உறுப்பினராக இல்லாததுதானம்...

ம்... படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே தடங்கலா...? என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம் விஷால்.

இடத்தை தக்கவெச்சிக்கணும் - பரணி

‘கல்லூரி’யில் அறிமுகம் ஆன பரணிக்கு அதற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த படமும் கேரக்டரும் அமையவில்லை.
நாடோடிகளில் சசிகுமாரின் நண்பர்களின் ஒருவராக நடித்தாலும் நல்ல அழுத்தமான கேரக்டர். படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து விட்டு ஏராளமானோர் பாராட்டியிருக்கிறார்கள். ‘நாடோடிகள்’ படத்திற்குப் பிறகு அது போன்ற வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.
 
இப்போது கதை கேட்டுக் கொண்டிருக்கும் பரணி, ‘நாடோடிகள் எனக்கு ஒரு நல்ல இடத்தைத் தேடித்தந்துள்ளது.... அதை தக்க வெச்சிக்கிறமாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கணும்...’ என்கிறார்.

லண்டனில் இளையராஜா -ஈழத்தமிழர்களுக்காக ஒரு பாட்டு

கடந்த சில மாதங்களுக்கு முன் லண்டனில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டிருந்தார் யுவன் சங்கர் ராஜா. ஆனால், இலங்கையில் நடந்த பெரும் போரினாலும், அப்பாவி தமிழர்களின் அழிவினாலும், இந்த நிகழ்ச்சியைப்போய் இப்போது நடத்துவதா என்ற வருத்தத்தில் கேன்சல் செய்துவிட்டார்.
ஆறாத ரணம் மனசில் இருந்தாலும், ஆறுதலாக இருக்கட்டுமே என்று முடிவு செய்திருக்கிறாராம் இப்போது. கூடுதல் போனசாக இந்த நிகழ்ச்சியே இசைஞானி இளையராஜாவின் தலைமையில் நடைபெறுகிறதாம். நவம்பர் மாதம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது இந்த விழா. இதில் தனது குழுவினரோடு கலந்து கொள்கிறார் இசைஞானி இளையராஜா.
முதன் முதலாக துபாயில்தான் அவர் இசை நிகழ்ச்சி நடத்தினார். அங்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக சென்னையிலும் அதே போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பிறகு கலைநிகழ்ச்சி நடத்துவதில் ஆர்வம் காட்டாத இளையராஜா, இந்த முறை லண்டன் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக் கொண்டதே இலங்கை தமிழர்களின் மனசுக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்றுதானாம். இதில் பாடுவதற்காக தனியாக ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறாராம். இது உலக தமிழர்களின் மனசை உருக்குவதாக அமையும் என்கிறார்கள் இப்போதே.
யுவன், கார்த்திக்ராஜா, சின்மயி, ஸ்ரேயா கோஷல் என்று ராஜாவின் ட்ருப்பில் நட்சத்திர விவிஐபிகளும் உண்டு!

சீச்சி... தமிழ்நாடு புளிக்கும் -கேரளாவில் ஒதுங்கிய நடிகை

குதிரைக்கு சுடிதார் போட்ட மாதிரி குலுக்கி தளுக்கி வந்த லட்சுமிராய், 'போட்டோவ ரசிக்கிறாய்ங்க, நடிக்கிற படத்துக்கு மட்டும் உள்ளே வராம தலை தெறிச்சு ஓடுறாய்ங்களே'ன்னு தமிழ் ரசிகப்படை மேல செம கோவத்திலே இருந்தார். ஆணானப்பட்ட ஜெயம் ரவியோடு கூட நடிச்சாச்சு. அப்படியும் ஸ்டார் அந்தஸ்து கொடுக்கறதுக்கு ரேஷன் கார்டு, பிளட் குரூப்பெல்லாம் கேக்கிறாய்ங்களேன்னு வருத்தத்திலே இருந்த லட்சுமிராய், இப்போ லேண்ட் ஆகியிருக்கிற இடம் கேரளா.
வந்தாரை வரவேற்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தாலும், வளமான சந்தனக்கட்டைகளுக்கு வரவேற்பு வளைவு வைக்கறதில் என்றைக்கும் முன்னாடி நிற்பது கேரளாவாச்சே? போன வேகத்திலேயே மம்முட்டி படம் இரண்டும், மோகன்லால் படம் ஒன்றும் கிடைச்சிருக்காம். படம்னா ஏதோ பாஸ்போர்ட் சைஸ் படமில்லே. நிஜமாகவே சினிமா படம்.
தன் கண்ணை தன்னாலேயே நம்ம முடியாத அதிர்ச்சியிலே இருக்காரு லட்சுமிராய். வேணும்னா பாருங்க. இங்கே கொடுக்கிற ஹிட்டு சத்தம் தமிழ்நாட்டுல கேட்டுட்டு ஓடி வரணும் எல்லாரும் என்கிறாராம்.
டிரஸ் சின்னதா இருந்தாலும் லட்சியம் பெருசு லட்சுமிராய்க்கு. நினைச்சது நிறைவேறட்டும்...

உன்னைப்போல் ஒருவன் ப்ரிவியூ -நட்சத்திரங்கள் பங்கேற்பு

இன்று காலை வரை ரசிகர்களை திணறடித்த படபடப்புக்கு விடை கிடைத்துவிட்டது. உன்னை போல் ஒருவன் படத்தை வெளியிட தடையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது நீதிமன்றம். தங்களுக்கு கமல் தரவேண்டிய சுமார் 7 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை தர வேண்டும். இல்லையென்றால் அவர் நடித்து வெளிவரவிருக்கும் உன்னை போல் ஒருவன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த பிரச்சனை ஒருபுறம் குடைந்து கொண்டேயிருந்தாலும், கொஞ்சமும் பதறாமல் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் கமல். நேற்று இரவு தமிழ் திரைப்பட பிரமுகர்களுக்கும் சக நடிகர், நடிகைகளுக்கும் உன்னை போல் ஒருவன் படத்தின் பிரிமியர் காட்சியை திரையிட்டார் கமல். ஏராளமான நடிகர்கள் பேரார்வத்துடன் இந்த பிரிமியர் ஷோவில் கலந்து கொண்டார்கள்.
மறுநாள் பொழுது கமல் நினைத்தபடியே பாஸிட்டிவாக துவங்கியது. உன்னை போல் ஒருவன் படத்தை வெளியிட தடையில்லை என்று கூறிவிட்டது உயர்நீதிமன்றம்.
'உன்னைப்போல் ஒருவன்' படத்தை வெளியிட தடை விதித்தால் எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். இந்த படத்துக்காக ரூ.40 கோடி செலவு செய்துள்ளோம். படத்தை வெளியிடுவதில் காலதாமதம் செய்தால் படத்துக்கு முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எங்களுக்கு இடையூறு செய்து, நிர்ப்பந்தப்படுத்தி பணம் பெறுவதுதான் மனுதாரரின் நோக்கம். ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், என்று கமல் தரப்பில் கூறப்பட்டது.
இருதரப்பு மனுவையும் விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, வருகிற செப்டம்பருக்குள் கமல் தரப்பிலிருந்து ரூ.4 கோடியை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், படத்தை நாளை வெளியிட எந்த தடையுமில்லை என்றும் தீர்ப்பு வழங்கினார்.

Thursday, September 17, 2009

Sunaina’s popularity and glamorous roles


Sunaina 
Sunaina’s star status moves up every time her films hit the marquee. The actress has several prestigious projects in her kitty including Thiruthani, Yadhumagi and Kathirvel. Stressing that she wishes not to end up stereotypical, the actress says that she selects her film that offers
variety. In Thiruttani the lady even ends up doing hairsplitting comedy, we hear.

On her yet another forthcoming release, Madhan with Jai Akash in the lead, the actress says that she participated in the film’s shooting for just a couple of days in which a songs and a few scenes were canned. However, the Madhan team planned to retain and cash in on those because of her newfound star status, Sunaina claims. The actress rues that she had indeed acted glamorous in Madhan but she would not do so in future.

Asin resurfaces


Asin 
Asin’s forthcoming Bollywood release London Dreams is creating huge expectations among her fans and critics who are curios to know how the actress will fare in the film after her blockbuster Ghajini.

There were also reports that the lady has been sidelined by the two powerful heroes – Ajay Devgan and Salman Khan – when it came to the film promos. Apparently, things seem to have changed now with Vipul Shah deciding to begin the promos with Asin. Sources also say that the actress is keen on participating in the promos and have made herself available for it.

செக்ஸ் ஹீலர்'-1,500 ஆண்களுடன் உறங்கிய பெண்!

Mare Simone 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
லண்டன்: இங்கிலாந்து [^] பெண் ஒருவர் தான் இதுவரை சுமார் 1500 பேருடன் செக்ஸ் உறவை பகிர்ந்து கொண்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற பெண்களின் கணவர்கள் அல்லது பாய்பிரண்ட்டுகளாம்.

மேற்கு லண்டனின் செல்சியா பகுதியில் வாழும் அந்த பெண்ணின் பெயல் மேர் சிமோன். அவர் ஆண்கள்,பெண்கள்மற்றும் தம்பதியினரின் தாம்பத்திய வாழ்க்கையை மெருக்கேற்ற உதவும் செக்ஸ் மருத்துவராக வேலை பார்த்து வருவதாகக் கூறிக் கொள்கிறார். அதே நேரத்தி்ல் நான் விபச்சாரப் பெண் அல்ல என்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக கூறும் அவருக்கு தற்போது வயது 54.

இது குறித்து அவர் கூறுகையில்,

அடுத்த பெண்மணிகள் கணவர் அல்லது பாய்பிரண்டுடன் உறங்கி சம்பாதித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு விலைமாது அல்ல. ஒருவருடைய செக்ஸ் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், அதற்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்திலும் தான் இந்த சேவையை செய்து வருகிறேன்.

இதற்காக அவர்கள் தரும் பணத்தில் தான் என் வாழ்க்கை நடக்கிறது. சேவைக்காக செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி தவறில்லை.

பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்கும், நான் வழங்கும் அறிவுரைகளுக்காகவும் என்னிடம் வரும் 'நோயாளிகள்' காசு கொடுக்கிறார்கள். செக்ஸ் சுகத்துக்காக அல்ல.

நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை முன்னேற்றம் காண, மாறுதல் பெற உழைத்திருக்கிறேன். இதன்மூலம் அவர்களது மனைவிகள் அல்லது கேர்ள்பிரண்டுகளும் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

குழந்தை வேண்டும் சில பெண்களுக்கு வேறு சில பெண்கள் [^] வாடகை தாயாக குழந்தை பெற்று தருகிறார்கள். அதேபோல் தான் செக்ஸ் விஷயத்தில் உதவ ஆளில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி வருகிறேன்.

எனது வாடிக்கையாளர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது நம்பிக்கை உண்டாக்கி வருகிறேன். அவர்கள் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்களுடன் உற்சாகமாக செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன்.

சில சமயங்களில் மனைவிக்கு முன்னால் அவர்களது கணவருடன் செக்ஸ் கொண்ட அனுபவமும் உள்ளது. அதன்மூலம் அவர்கள் இல்லற வாழ்க்கையை எப்படியிருக்க வேண்டும் என்பதை அந்த தம்பதிகள் புரிந்து கொள்வார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எனது வாடிக்கையாளர்களை சந்தித்து வருகிறேன். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆலோசனை வழங்குவேன்.

எனது வேலை முழு திருப்தி அளிக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். எந்தவொரு சமயத்திலும் இந்த வேலைக்கு ஏன் வந்தோம் என எண்ணியது கிடையாது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த சேவையை தொடரவிருக்கிறேன்.

செக்ஸ் பிரச்சனைகளை தீர்ப்பவர் என்ற முறையில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

ஆன்லைன் விபச்சாரம்: போலீஸ் வளையத்தில் நடிகைகள்!

ஆன்லைன் விபச்சாரம் எனப்படும் நூதனமான தொழில் பல நடிகைகள் ஈடுபட்டிருப்பதை சென்னை புறநகர் போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். இந்த விபச்சாரத்தில் கொடிகட்டிப் பறந்த அப்பு என்ற நபரையும் அவனுக்குத் துணையாக இருந்த பாரதி கண்ணன் என்ற நபர் உள்ளிட்ட பலரையும் கைது செய்துள்ளனர்.

சிபிசிஐடி, விபச்சாரத் தடுப்புப் பிரிவு என பலருக்கும் டிமிக்கி கொடுத்து வந்த கன்னட பிரசாத் கைதாகி ஜெயிலுக்குச் சென்றதும், அவனது கூட்டாளிகள் புதிய ரூட்டில் விபச்சாரத்தைத் தொடர்ந்து செய்துள்ளனர்.

இதில் ஒன்றுதான் ஆன்லைன் விபச்சாரம்.

இதில் விவிஐபிக்கள் வெளியூர்/ வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் போகும்போது அவர்களுக்கு துணையாகச் செல்வது போல பெண்களை அனுப்பி உல்லாசமாக இருக்க வைப்பார்கள். நாளொன்றுக்கு ரூ.30,000 முதல் பல லட்சங்கள் வரை இதற்கு சார்ஜ்.

இதில் போலீஸ் தொல்லையும் இருக்காது. மேலும் வருகிற விஐபியைப் பொறுத்து, போலீஸ் காவலுக்குள்ளேயே பாதுகாப்பாக தொழிலை நடத்தும் வசதி வேறு.

பல ஆண்டுகளாக கமுக்கமாக, ஆனால் படு ஜோராக இந்தத் தொழில் நடந்து வருகிறது.

இந்தத் தொழிலில் பல நடிகைகள் ஈடுபட்டிருந்ததையும், கைது செய்யப்பட்ட அப்பு, பாரதி கண்ணன் போன்றோர் ஆதாரங்களுடன் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் தெரிவித்துள்ளார்களாம்.

பல வருடங்கள் கொடிகட்டிப் பறந்த இரண்டெழுத்து நடிகை ஒருவர், அரசியல் பின்னணி கொண்ட நடிகை ஒருவர், அடிக்கடி வெளிநாடு செல்வதை பொழுதுபோக்காகக் கருதும் நடிகை ஒருவர் என பட்டியலை வாசிக்கிறார்கள் போலீசார்.

இநத நடிகைகளை போலீசாரே விசாரித்ததில் ஆடிப்போய், எல்லா உண்மைகளையும் ஒப்புக் கொண்டு, தங்கள் பெயரை வெளியிட்டுவிட வேண்டாம் என கதறி அழுதார்களாம்.

அப்புவை கைது செய்த புறநகர் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் கூறுகையில், "சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் கொடுத்த தகவல்கள் மற்றும் அவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து அப்புவை வளைத்தோம்.

'எஸ்கார்ட்ஸ்' என்ற பெயரில் நடிகைகள், மாணவிகள் என பல பெண்களை விபசாரத்தில் வீழ்த்தியதை விசாரணையில் ஒப்புக் கொண்டிருக்கிறான் அப்பு. இன்னும் மிச்சமுள்ள அவனுடைய கூட்டாளிகளையும் கைது செய்துவிடுவோம் விரைவில்," என்றார்.

உன்னைப்போல் ஒருவன் ப்ரிவியூ -நட்சத்திரங்கள் பங்கேற்பு


இன்று காலை வரை ரசிகர்களை திணறடித்த படபடப்புக்கு விடை கிடைத்துவிட்டது. உன்னை போல் ஒருவன் படத்தை வெளியிட தடையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது நீதிமன்றம். தங்களுக்கு கமல் தரவேண்டிய சுமார் 7 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை தர வேண்டும். இல்லையென்றால் அவர் நடித்து வெளிவரவிருக்கும் உன்னை போல் ஒருவன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.


இந்த பிரச்சனை ஒருபுறம் குடைந்து கொண்டேயிருந்தாலும், கொஞ்சமும் பதறாமல் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் கமல். நேற்று இரவு தமிழ் திரைப்பட பிரமுகர்களுக்கும் சக நடிகர், நடிகைகளுக்கும் உன்னை போல் ஒருவன் படத்தின் பிரிமியர் காட்சியை திரையிட்டார் கமல். ஏராளமான நடிகர்கள் பேரார்வத்துடன் இந்த பிரிமியர் ஷோவில் கலந்து கொண்டார்கள்.


மறுநாள் பொழுது கமல் நினைத்தபடியே பாஸிட்டிவாக துவங்கியது. உன்னை போல் ஒருவன் படத்தை வெளியிட தடையில்லை என்று கூறிவிட்டது உயர்நீதிமன்றம்.


'உன்னைப்போல் ஒருவன்' படத்தை வெளியிட தடை விதித்தால் எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். இந்த படத்துக்காக ரூ.40 கோடி செலவு செய்துள்ளோம். படத்தை வெளியிடுவதில் காலதாமதம் செய்தால் படத்துக்கு முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எங்களுக்கு இடையூறு செய்து, நிர்ப்பந்தப்படுத்தி பணம் பெறுவதுதான் மனுதாரரின் நோக்கம். ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், என்று கமல் தரப்பில் கூறப்பட்டது.


இருதரப்பு மனுவையும் விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, வருகிற செப்டம்பருக்குள் கமல் தரப்பிலிருந்து ரூ.4 கோடியை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், படத்தை நாளை வெளியிட எந்த தடையுமில்லை என்றும் தீர்ப்பு வழங்கினார்.

Wednesday, September 16, 2009

'காக்கா பிடித்து ராகுலை சந்தித்த விஜய்!'- எஸ்வி.சேகர்

கோவை: ராகுல் அழைப்பின்பேரில்தான் அவரைப் போய் பார்த்தேன் என்று விஜய் பேசியிருப்பது அப்பட்டமான பொய் என்று நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டுக்குராகுல் காந்திவந்ததெல்லாம் ஓகே. ஆனால் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாவது சந்தித்திருக்கலாம்.

விஜய்யின்அரசியல்புதிராக உள்ளது. பேட்டியில் விஜய் என்ன சொல்லியிருக்கிறார் என்பதே புரியவில்லை. யாருமே தன் மீது கோபப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர் சமாளிப்பாக பேசியிருப்பது தெரிகிறது. ராகுல் அழைத்ததால்தான் போனேன் என்று அவர் கூறுவது நம்பும்படியாக இல்லை. அது ஒரு சுத்த பொய்.

பாருங்க... நான் அழகிரி [^]யை சந்தித்து பேசுகிறேன் என்றால் எனக்கு காரியம் ஆக வேண்டும் என்பதற்காகதான். அழகிரி என்னை கூப்பிட்டு பேச போவதில்லை. அவருக்கு அதற்கான அவசியமும் இல்லை.

அதைப்போலவே, விஜய் யார் யாரையோ காக்கா பிடித்து ராகுல் காந்தி [^]யை சந்தித்திருக்கிறார். விஜய்யை சந்திக்க ராகுலுக்கு என்ன அவசியம் வேண்டியிருக்கிறது. விஜய் மற்றும் சந்திரசேகரும் அவர்களுடைய சுயநலத்துக்காகவே ராகுலை சந்தித்துள்ளனர்.

விஜயகாந்த், 50 வயதுக்கு மேல் தான்அரசியல்கட்சி [^] ஆரம்பித்தார்; அதற்கு முன், கடந்த 10 ஆண்டுகளாக அவர் அரசியலை விமர்சனம் செய்து கொண்டு இருந்தார். அவர் யாரையும் போய் பார்க்கவில்லை. அவரே நினைத்து, புதிய கட்சியை ஆரம்பித்தார்; கஷ்டப்பட்டாலும் கட்சியை நடத்துகிறார்.

விஜய் தன்னுடைய அரசியல் [^] பிரவேசம் பற்றி இன்னும் தெளிவாகப் பேசவில்லை. இப்போது, அவர் கூறியிருக்கும் விஷயங்கள், நிச்சயமாக அவருடைய சினிமா [^] வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றார் சேகர்.

சுறா... மீனவர் விஜய்!

தனது 50-வது படத்தில் மீனவர் வேடம் போடுகிறார்விஜய் இந்தப் படத்துக்கு சுறா என்று பெயர் வைக்க யோசித்து வருகிறாராம். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு உரிமைக்குரல் என்ற தலைப்பைப் பதிவு செய்து வைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.

ஆனால் கதைப்படி, நாயகன் பெயரான சுறா என்பதையே இந்தப் படத்துக்கு சூட்ட முடிவு செய்துள்ளார்களாம்.

விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மணிசர்மா இசையமைக்கிறார். வரும் 18-ம் தேதி முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது.

எஸ்பி ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலாக முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் விஜய் . ஏப்ரல் 14 அன்று சித்திரை ஸ்பெஷலாக வருகிறது சுறா.

விஜய்யின் அடுத்த படமான வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகிறது.

யோகி படத்தின் வெளியீட்டு உரிமையை சன் டிவிக்குத் தந்துள்ளார் அமீர்

அமீர் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ள படம் யோகி. இந்தப் படத்தை வாங்கி ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டியது சன். ஆனால் ஒரு நிபந்தனை விதித்திருந்தார் அமீர்.
அமீரின் யோகி என்றுதான் அனைத்து டிசைன்களிலும் வரவேண்டும் என்பதே அது.

ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது சன் பிக்சர்ஸ். இந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்த சன் பிக்சர்ஸ் சக்ஸேனா, தனது பேச்சின்போதே, இந்தப் படத்தை சன்பிக்ஸர்ஸ் வெளியிட விரும்புவதாகத் தெரிவித்தார்.

உடனே, எழுந்த அமீர், 'அதுக்கென்ன, தாராளமா உங்களுக்குத் தர சம்மதம்" என்று கூற, டீல் ஓகேயாகிவிட்டது.

இப்போது சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் அமீரின் யோகி என வெளியாகப்போகிறது இந்தப்படம்.

ஈரம் படத்தை இதே முறையில் கேட்டுப் பார்த்தார் சக்ஸேனா. ஆனால் ஷங்கர் மறுமொழி ஏதும் சொல்லாமல் அமைதி காத்து, தாமே வெளியிட்டுவிட்டார். படம் செம பிக்கப்!

விஷால்-வெங்கட்பிரபு சந்திப்பு... -அமையுமா வெற்றிக் கூட்டணி?

அஜீத்தின் ஐம்பதாவது படம் யாருக்கு? தொடரும் சஸ்பென்ஸ் லிஸ்ட்டிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. பில்லா படத்தையே வெங்கட் பிரபு இயக்கியிருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவரை காத்திருக்க சொன்னார் தல.

இப்போது காத்திருப்போர் பட்டியலிலும் இல்லையாம் வெங்கட் பிரபு. தற்போது கோவா படத்தில் பிசியாக இருக்கும் வெங்கட்டும் விஷாலும் ஒரு ஓய்வு நேரத்தில் சந்தித்து கதை பேசினார்களாம். ஆக்ஷன் மசாலாக்களுக்கு மக்கள் கொடுக்கிற மரியாதை ரொம்ப ஆபத்தாக இருப்பதை புரிந்து கொண்ட விஷால், வெங்கட்பிரபு மாதிரி நகைச்சுவை கலந்து கதை சொன்னால்தான் எடுபடும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் இந்த சந்திப்பு, தித்திப்பு என்கிற அளவிலேயே நிறைவுற்றதாம்.

தீராத விளையாட்டு பிள்ளைக்கு பிறகு கால்ஷீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் அட்வான்சை வாங்கி ஒரு புது வீட்டையும் வாங்கி போட்டிருக்கும் வெங்கட், விஷால் கால்ஷீட்டை இந்த நிறுவனத்திற்கே பயன்படுத்துவார் போலவும் தெரிகிறது.

ஆனாலும் மதில் மேல் பூனையாக அஜீத்தின் அழைப்புக்காகவும் காத்திருக்கிறாராம் வெங்கட்.

பி.வாசுவுக்கு ரஜினி சொன்ன ஐடியா... -சந்திரமுகி இரண்டாம் பாகம்?

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் எப்படியாவது ரஜினியை நடிக்க வைத்துவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார் பி.வாசு. அடிக்கடி ரஜினியை சந்திப்பதும், இது பற்றி விவாதிப்பதுமாக இருந்தாராம். இதற்கெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்போடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சூப்பர் ஸ்டார். எப்படி?

ஒருநாள் திடீரென்று பி.வாசுவுக்கே போன் அடித்த ரஜினி, சந்திரமுகி இரண்டாம் பாகத்திலே நடிப்பதில் எனக்கு சம்மதமில்லை என்று கூறிவிட்டாராம். எனக்காக காத்திருக்காமல் வேறு கதையை எடுக்கலாமே என்றும் ஐடியா கொடுத்திருப்பதாக தகவல். கூடவே இன்னும் ஒரு யோசனையும் கூறினாராம் சூப்பர் ஸ்டார்.

வளர்ந்து வருகிற ஒரு இளம் ஹீரோவையும், மம்முட்டி மாதிரி ஒரு பெரிய ஹீரோவையும் வைத்து படம் எடுக்கலாமே? என்பதுதான் அந்த யோசனை. எந்திரனுக்கு பிறகு தலைவர் வேறு ரூட்டில் பயணிப்பார் என்று கிசுகிசுக்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். அதனால்தான் தனக்காக காத்திருக்கும் பி.வாசுவுக்கு ஒரு புது பாதையை காட்டியிருக்கிறார் அவர் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

புத்துல கைய விட்டு புரளிய கிளப்புறதே பொழப்பா போச்சு சிலருக்கு...

ராஜேஷ்குமாரின் ‘அகராதி’

எழுத்தாளர்கள் எல்லாரும் சினிமாவுக்கு வருகிற காலம் இது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரையும் விரட்டிச் சென்று சினிமாவிற்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவர் ‘இரவில் ஒரு வானவில்’ என்ற நாவலை எழுதியிருந்தார். இப்போது அந்த நாவலை படமாக்குகிறார் நாகா வெங்கடேஷ். படத்திற்கு ‘அகராதி’ என்று தலைப்பும் வெச்சு படப்பிடிப்பையும் முடிக்கும் அளவுக்கு நெருங்கிவிட்டார்கள். இந்தப் படத்தில் ‘பழனியப்பா கல்லூரி’ படத்தில் நடித்த பிரதீப் கதாநாயகநாக நடிக்கிறார். அவருடன் மோனிகா, அர்ச்சனா, கீர்த்திசாவ்லா, சௌந்தர்யா என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

ஒரு கொலையும் அதன் பின்னே நடக்கிற புலனாய்வும் தான் படத்தின் கதையாம். இடையே கொஞ்சம் சென்டிமென்டையும் புகுத்தியிருக்கிறார்களாம். இந்தப் படத்தை வர்ணிகா மூவி மேக்கர்ஸ் மற்றும் கே.எஸ். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

சுநேனாவிடம் கேட்க கூடாத கேள்வி...?

ஒரே ஒரு கேள்வியை மட்டும் சுநேனாவிடம் கேட்டீர்களானால் உங்கள் மார்பில் அறைந்து சத்தியம் செய்வார்...
விவரம் தெரியத சமயத்தில் (அதாங்க... சினிமாவில் அறிமுகமான புதிதில்) சுனேநா ஜெய் ஆகாஷூடன் இணைந்து நடித்த படம் மதன். அதன் பிறகு சுநேனாவும் திபுதிபுவென நான்கைந்து படங்களில் நடித்து விட்டாலும் இப்போதுதான் ‘மதன்’ படத்தின் எல்லாப் பணிகளையும் முடித்து வெளியிடுவதற்கு தயாராக்கிக் கொண்டிருக்கிறார் ஜெய் ஆகாஷ். இவருடன் சுனேனா இந்தப் படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறாராம். படு கவர்ச்சியாக அம்மணி நடித்திருப்பது பற்றி இப்போது யாராவது அவரிடம் ‘நீங்கள் ஜெய் ஆகாஷூடன் படுக்கையறை காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறீர்களே...?’ என்று கேட்டால்... ‘அந்தக் காட்சிகளில் நான் நடிக்கவில்லை... டூப் போட்டு எடுத்துவிட்டார்கள்... நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை...’ என்று கேட்பவர்களின் மார்பிலேயே ஓங்கி அறைந்து சத்தியம் செய்கிறாராம்.

உண்மையோ பொய்யோ... சுநேனாவிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்டுடாதீங்க...

படங்கள் இல்லாமல் தவிக்கும் த்ரிஷா

‘அசின் மட்டும் தான் இந்திக்குப் போவாரா... நாங்களும் போவம்ல...’ என்று அசினுக்குப் பின்னாலேயே பாலிவுட் வாய்ப்புகளைப் பிடிக்கும் எண்ணத்தில் படையெடுத்துப் போனார் த்ரிஷா.
ஆனால் அசினுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு கூட இவருக்குக் கிடைக்கவில்லை. தமிழிலும் இப்போது இவர் கைவசம் படங்கள் இல்லை. இவர் தமிழில் பிடித்து வைத்திருந்த இடத்தில் இப்போது தமன்னா உட்கார்ந்து கல்லா கட்டுவதால் மீண்டும் தமிழில் தலையெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. ஆனாலும் கொஞ்சம் கூட... கூச்சமே இல்லாமல் எனக்கு நான் இந்தி, தெலுங்குப் படங்களில் பிஸி. அதனால் தமிழில் கேட்டு வருபவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்று சொல்லிக் கொள்கிறார்.

ஊருக்கே தெரிஞ்ச பிறகும் ஏன் தான் மூடி மறைக்கணுமோ...?