Thursday, October 1, 2009

விஜய் ரசிகர்களுக்கு தித்திக்காத தீபாவளி

விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி தித்திக்காத தீபாவளியாக இருக்கப் போகிறது... ரசிகர்களுக்கு மட்டும் என்ன... விஜய்க்கும் தான். ‘வேட்டைக்காரன்’ படத்தை எப்படியாவது தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் விஜய். விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். ஆனால் போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகளே இன்னும் நாட்கள் பலவற்றை காலி பண்ணிவிடும் என்பதால் தீபாவளிக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலைதான் இப்போது வரைக்கும். இந்தப் படத்தைப் பற்றி ஏராளமான எதிர்பார்ப்பில் இருக்கும் விஜக்கு இந்தப் படம் தான் கை கொடுத்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலை. சன் பிக்சர் வாங்கியதால் இந்தப் படத்தின் மேலே இருந்த நம்பிக்கை விஜய்க்கு இன்னும் வலுவாகிவிட்டது. தீபாவளிக்கு இந்தப் படத்தை வெளியிட்டால், சன் பிக்சர்ஸ் செய்யும் விளம்பரங்களினால் எந்த படமும் வெளியில் தலை காட்டவே முடியாது... வேட்டைக்காரன் நிச்சயமாக ஹிட் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் இருந்த விஜய்க்கு இது மன வருத்தத்தை அளிக்கிறதாம்.

பிகினியா... வேணவே வேணாம்...

ரம்யா நம்பீசனை நினைவிருக்கிறதா...? பின்னே, ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு எஸ்கேப் ஆனவரை இப்படிக் கேட்டுத்தானே ஆரம்பிக்க முடியும். இவர் நடித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. சேரனை கதாநாயகனாகக் கொண்ட இந்தப் படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் இவரும் ஒருவர். பின்பு ஓரமாய் ஒதுங்கிக் கொண்டவர், இப்போது டி.எஸ். கண்ணன் இயக்கத்தில் ‘வெட்டாட்டம்’ படத்திலும் ஷக்தி நடிக்கும் ‘ஆட்டநாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஆறு படங்களில் நடித்து விட்ட ரம்யா நம்பீசன், இப்போது நல்ல பிரேக் தரும் படங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ‘வெட்டாட்டம்’ படத்தில் கிராமத்து பெண்ணாக வலம் வரும் இவர் மேக்கப் போடாமலே இந்தக் கேரக்டரில் நடித்திருக்கிறார். வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரம்யா நம்பீசனுக்கு பிகினி என்ற வார்த்தையைக் கேட்டாலே அலர்ஜியாம். ‘பிகினி மட்டும் நமக்கு ஆகவே ஆகாது... வேற எந்த டிரஸ்னாலும் ஓ.கே...’ என்கிறார் இந்த குயின்.

அடுத்தது இயக்கம்தான் - சூர்யா

இயக்குநர்கள் எல்லாம் மேக்கப் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் நடிகர்கள் இயக்குநராவது என்பது எப்போதாவது ஒருமுறை தான் நிகழ்கிறது.
காரணம் நடிப்பதை விட படம் இயக்குவது என்பது பல வேலைகளைத் தூக்கி தலையில் போட்டுக் கொண்டு அலைவதைப் போன்றது. இவ்வளவு சுமைகள் இருந்தாலும் தன்னை இயக்குநராக பார்ப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் சூர்யா. ‘இயக்குநராகவேண்டும்... புகழ் பெற்ற முன்னணி இயக்குநராக உருவாக வேண்டும்’ என்று ஆசைப்படுகிறார் நடிகர் சூர்யா. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாலு படங்களை இயக்கி இந்தியாவின் முன்னணி இயக்குநராகி விடவேண்டும் என்ற ஆசை சூர்யா மனதில். அவருக்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை? என்பது யாருக்கும் புரியாத கதை.
 

Tuesday, September 29, 2009

வருமா வேட்டைக்காரன்?

Vettaikaran
ரசிகர்கள் மட்டுமல்ல... விஜய்யே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேட்டைக்காரன் திரைப்படம் தீபாவளிக்கு வருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஏவிஎம் நிறுவனத்தின் பாலசுப்பிரமணியம், குருநாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி தனது பேனரில் வெளியிடுகிறது.

ஆரம்பத்தில் இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு சூர்யாவின் ஆதவன் மற்றும் ஜெயம் ரவியின் பேராண்மை படங்களுடன் மோதும் எனக் கூறப்பட்டது.

ஆனால் இன்னும் படத்தில் 10 சதவிகித படப்பிடிப்பும், ஒரு பாடல் காட்சியும் பாக்கியுள்ளதாம்.

அக்டோபர் முதல்வாரத்தில்தான் இந்தப் பாடல் காட்சி படமாகுமாம். காரணம் நாயகி அனுஷ்கா இப்போது சூர்யாவுடன் சிங்கம் படத்தில் பிஸியாகிவிட்டாராம்.

ஆனால் விஜய் [^]க்கு தன் படம் எப்படியாவது தீபாவளியன்று திரையைத் தொட வேண்டும் என்பதில் தீராத விருப்பமாம். ஆனால் வேட்டைக்காரன் விஷயத்தில் அவர் விருப்பம் இரண்டாம் பட்சம்தான். படத்தின் உரிமையாளர் சன் பிக்சர்ஸ் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் இப்போது முக்கியம்.

அவர்கள் கையில் ஏற்கெனவே 'கண்டேன் காதலை' தயாராக உள்ளது!

பிபாஷா பாசுவிடம் செக்ஸ் சில்மிஷம்

Bipasha Basu
துர்கா பூஜைக்கு வந்த நடிகை [^] பிபாஷா பாசுவின் மார்பில் கை வைத்து ஒரு ரசிகர் விஷமம் செய்ததால் பெரும் அப்செட்டுக்குள்ளானார் பிபாஷா.

துர்கா பூஜை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள பிபாஷா பாசு ஆர்வமாக இருந்தார்.

வடக்கு மும்பையில் சான்டாகுரூஸில் நடந்த துர்கா பூஜையில் தனது காதலர் ஜான் ஆப்ரகாமுடன் கலந்து கொண்டார் பிபாஷா.

மேடைக்கு அருகில் அவர் நின்று கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு ரசிகர், பிபாஷாவை நெருங்கி அவரது மார்பைப் பிடித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த பிபாஷா, அதிலிருந்து மீளுவதற்குள்ளாகவே அந்த நபர் கூட்டத்தைப் பயன்படுத்தி தப்பி ஓடி விட்டார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிபாஷா, கொதிப்படைந்தார். போலீஸில் புகார் [^] கொடுக்கப் போவதாக ஆவேசமாக கூறினார். ஆனால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பிரச்சினை வேண்டாம் என்று கருதிய ஜான் ஆப்ரகாம், பிபாஷாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டார்.

விஜய், தமன்னாவை சூழ்ந்த ரசிகர்கள்

வேட்டைக்காரன் படப்பிடிப்பு [^] வேலைகளை முற்றிலுமாக முடித்து கொடுத்துவிட்ட விஜய் தற்போது 50வது படமான சுறாவுக்காக கேரளாவில் பிசியாகி இருக்கிறார்.

இதில் விஜய்க்கு தமன்னா ஜோடி போட்டுள்ளார். காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

அழகர் மலை படத்தை இயக்கிய எஸ்பி ராஜ்குமார் விஜய்யின் 50வது படத்தை பிரமாண்டமான வெற்றி [^] படமாக மாற்ற முயற்சித்து வருகிறார். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவே பெரும் சிரமப்பட்டு உழைத்து வருகிறது.

படப்பிடிப்பு குழுவினர் கடந்த ஒரு வார காலமாக கேரளா, ஆலப்புழையில் ரொமான்ஸ் சீன்களை எடுத்து வருகின்றனர். முதலில் ரொமான்ஸ், மத்ததெல்லாம் அடுத்து என்பதில் இயக்குனர் [^] உறுதியாக இருக்கிறாராம். இதில் பல சீன்கள் நன்றாகவே வந்துள்ளதாம்.

இந்நிலையில் மீனவ இளைஞரான விஜய், தண்ணீரில் தத்தளிக்கும் தமன்னாவை காப்பாற்றுவது போன்ற காட்சிகள் கடற்கரை பகுதிகளில் எடுக்கப்பட்டதாம்.

அப்போது விஜய், தமன்னா வந்திருப்பதை தெரிந்து கொண்ட கேரள ரசிகர்கள் [^] சுமார் ஆயிரம் பேர் மொத்தமாக வந்து ஷூட்டிங் ஸ்பாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனராம்.

விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய அவர்கள் அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என அடம் பிடித்துள்ளனர். அப்போது ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல மணி நேரம் ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படக்குழுவினர் வேறு வழி தெரியாமல் போலீஸாரை கூப்பிட்டு, கூட்டத்தை அப்புறப்படுத்தினார்களாம்.

இயக்குநருக்கு விஜய் அன்புக்கட்டளை

‘வேட்டைக்காரன்‘ படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகள் ஆரம்பித்துவிட்டதால் விஜய் தனது அடுத்த படமான ‘சுரா’ படத்திற்கான முயற்சிகளில் இறங்குகவதற்குத் தயாராகி வருகிறார்.
இது இவரது 50 வது படம். விஜய்யை வைத்து ‘காதலுக்கு மரியாதை’ படத்தை எடுத்த சங்கிலி முருகன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘காதலுக்கு மரியாதை’ விஜய் படங்களில் முதன் முதலில் மிகப்பெரிய ஹிட் அடைந்த படம் என்பதால் இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் விஜய்.

இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ்.பி. ராஜ்குமார். இவர் சென்டிமென்டான படங்களை எடுத்துக் கொண்டிருந்தவர். முதன்முறையாக விஜய்யுடன் இணைகிறார். விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ‘ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்தப் படத்தைப் பற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும்... அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிற மாதிரியாக படம் இருக்கவேண்டும்’ என்று இயக்குநருக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் விஜய்.

Monday, September 28, 2009

Vettaikaran Audio Launch - Source [Youtube]

Sunday, September 27, 2009

ரஜினி வழியை விஜய் பின்பற்ற வேண்டும்! -சக்ஸேனா

ரஜினி வழியைப் பின்பற்றினால் விஜய்யும் உச்சநிலைக்கு வரமுடியும் என்றார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படம்தான் சன் பிக்சர்ஸின் நேரடி முதல் தயாரிப்பு. எந்திரன் படத்தை கலாநிதி மாறன் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அதற்கு ஏற்ப ஷங்கரும் அவரது குழுவினரும் தங்கள் படம் போல் உழைக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரும்.

இந்தப் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் கடினமாக உழைத்து வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.

ரஜினியின் உழைப்பு ஒரு பிரமிப்பு. இன்னும் பல காலத்துக்கு அதைப் பற்றி இந்த திரையுலகம் பிரமிப்புடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ரஜினி சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நடிகர்கள், இளைஞர்களை அனைவருமே அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

ரஜினியின் வழியை விஜய் பயன்படுத்திக்கொண்டால் உச்சத்துக்கு வர முடியும்…, என்றார் சக்ஸேனா.]

இந்த மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், எந்திரன் படம் 85 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “எப்போது விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியூர் சென்றாலும் ரசிகர்கள் கேட்கிறார்கள். ‘முதல்வன்’ படத்தில் முதலில் நடிக்க வைக்க எண்ணியது ரஜினியை. அவர் கிடைக்காவிட்டால் விஜய்யை வைத்து இயக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.

விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கிறது. நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 7 வருடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். விரைவில் விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் உள்ளது. என் குருநாதர் மகன் அவர் என்பதால் மட்டுமல்ல… அவர் திறமையான நடிகர்… அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது…,” என்றார்.

பின்னர் பேசிய விஜய், அடுத்த வரவிருக்கும் தன்னுடைய ஒரு படத்திலிருந்து பாடல் வரிகளைப் பாடிக் காட்டினார்.

“நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் தூங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே…”

-இப்படிப் போகின்றன அந்தப் பாடல் வரிகள்…!!

நயனதாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்!

ரமலத் - பிரபுதேவா - நயனதாரா விவகாரம் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. என் தமிழ் தாய்மார்கள், சகோதரிகள், மாதர் சங்கங்கள் நயனதாராவைக் கவனித்துக் கொள்வார்கள் என்று ரமலத் கூறியதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக மாதர் சங்கங்கள் களம் இறங்கியுள்ளன. பிரபு தேவா - நயனதாரா கள்ளக்காதலால் பிரபுதேவாவின் மனைவி ரமலத் கொதிப்படைந்துள்ளார். பகிரங்கமாக நயனதாராவை விமர்சித்து வருகிறார். என்னிடமே நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள பெர்மிஷன் கேட்கிறார் பிரபுதேவா என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்பு அவர் அளித்த பேட்டியின்போது நயனதாராவை எங்காவது பிரபுதேவாவுடன் பார்த்தால் அடிப்பேன் என்று கோபமாக கூறியிருந்தார். இதற்கு நயனதாரா அளித்த பதிலில், என்னை விமர்சிக்க ரமலத் யார் என்று கேட்டிருந்தார்.

அதற்கு ரமலத் அளித்த சூடான பதிலில், பிரபுதேவாவுடன் 15 ஆண்டுகள் குடித்தனம் நடத்தி 3 குழந்தைகளைப் பெற்றவள் நான். எனக்கும் என் குழந்தைகளுக்கும் எல்லாமே என் கணவர்தான். எங்களுக்கு மட்டுமே அவர் சொந்தம்.

இந்தக் காதல் விவகாரம் குறித்த செய்திகளால் நான் என மனக்குறையை வெளியிட்டேன். அதை சொல்ல எனக்குத் தகுதியில்லை என்கிறார் நயனதாரா.

நயன்தாரா சொல்லியிருப்பதற்கு என் தமிழகத் தாய்மார்களும் சகோதரிகளும் பதில் அளிப்பார்கள். தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் என் கண்ணீரைத் துடைப்பார்கள் என நம்புகிறேன் என்று கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.

இதையடுத்து மாதர் சங்கங்கள் சில களத்தில் குதித்துள்ளன. நயனதாராவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவை நயனதாராவின் திரைப்படங்களை தமிழிகத்தில் திரையிட விடாமல் தடுக்கப் போவதாக அறிவித்துள்ளன.

மேலும் மீறி எங்காவது அவரது படம் திரையிடப்பட்டால், தியேட்டர்கள் முன்பு பெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவை எச்சரித்துள்ளன.

இதனால் பிரபு தேவா - நயனதாரா விவகாரம் நடுத் தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஜினிக்கு அடுத்து அஜயன் பாலா

இமயமலை என்றாலோ நம்ம மக்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருகிறதோ இல்லையோ கண்டிப்பாக ரஜினிகாந்த் நினைவுக்கு வருவார்.
காரணம் அடிக்கடி இவர் இமயமலை போவதால்.... அதுவும் ரஜினிகாந்த் சொல்லும் ‘பாபா’ மட்டும் தான் இமயமலையில் இருக்கிறார் என்பது போன்ற எண்ணம் நிறையபேருக்கு... தமிழ் சினிமாக்காரர்களில் ரஜினிக்கு அடுத்தபடியாக இமயமலை சென்றுவந்த லிஸ்ட்டில் இடம் பிடிக்கிறார் அஜயன் பாலா.
 
உலக சினிமா பற்றிய செய்திகளை தெருக்கோடியில் இருக்கிறவனிடம் கூட கொண்டு சேர்த்த அஜயன் பாலா ‘சித்திரம் பேசுதடி’யில் அறிமுகம் ஆகி... ‘வால்மீகி’யில் வெயிட்டான கேரக்டரில் நடித்திருந்தார். குரு ஜக்கி வாசுதேவ் தியானக் குழுவின் சிறப்பு விருந்தினராக அவர்களுடன் இமயமலை சென்று வந்த ஜிலீர் அனுபவங்களை சொல்கிறார்... ‘இமயமலை... இயற்கை சூழல் நிரம்பிய கடுமையான குளிர் கொண்ட இடம்... போகிற வழியெங்கும் அதால பாதாளம் அதனால உயிருக்கும் உத்தரவாதம் இல்லை... அங்கே இருக்கிற சாதுக்கள்... சன்னியாசிகள்... மக்கள் எல்லோருமே... இயற்கையோடு போராடி வாழ்கிறார்கள்... கேதர்நாத் என்கிற இடத்திற்கு சுமார் 14 கி.மீ. மலைகளில் நடந்தே போனோம்..’ என்று தமது அனுபவங்களைச் சொல்லும் அஜயன் பாலாவின் முகத்தில் ஏகப்பட்ட இமயமலை பரவசங்கள்...

கல்லா பெட்டியை நிறைக்கும் பூர்ணா

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தில் அறிமும் ஆன பூர்ணா பரத்தோடு குத்தாட்டமும் போட்டார். அதன் பிறகு அவருக்கு படிப்படியாக ஏகப்பட்ட வாய்ப்புகள். வந்த வாய்ப்பை எப்படி விடுறது...? எல்லா வாய்ப்புகளையும் வளைத்துப் பிடித்துப் போட்டுக் கொண்டார் பூர்ணா. ஜெய்யுடன் ‘அர்ஜூனன் காதலி’, விஷ்ணுவுடன் ‘துரோகி’, நகுலனுடன் ‘கந்தக் கோட்டை’ என இளம் ஹீரோக்களுடன் நடித்து வரும் பூர்ணா, பார்த்திபனுடன் ‘வித்தகன்’ படத்திலும் ஜோடி போடுகிறார். ‘பிப்ரவரி 14’ படத்தை இயக்கிய எஸ்.பி. ஹோசிமின் இயக்கும் ‘ஆயிரம் விளக்கு’ படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சாந்தனு, சத்யராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூர்ணா.

சூடுபிடிக்கும் படுக்கையறை விவகாரம்

படங்களில் வருகின்ற படுக்கையறை காட்சிகள் ரசிகர்களைத்தான் பொதுவாகச் சூடேற்றும். ஆனால் ‘மதன்’ படத்தின் கதை வேறு விதமாக போகிறது. படத்தில் நடித்தவர்களையே இந்த விவகாரம் சூடேற்றிக் கொண்டிருக்கிறது. ‘மதன் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்து சுனேனா’ தான் என்று ஜெய் ஆகாஷ் அடித்துச் சொல்ல... ‘அது நான் இல்லை... டூப்...’ என்று சுனேனா சொல்ல விவகாரம் பரபரப்பாக வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மாத்தி மாத்தி இருவருமே பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெய் ஆகாஷ் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் ஒன்றைத் தட்டி விட்டிருக்கிறார். “அதில் ‘மதன்’ படத்தில் சுனைனாவை அறிமுகப்படுத்தியதே நான்தான்... அப்புறம் தான் ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வர... அந்தப் படத்தில் நடிக்க அனுமதி வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவரது வளர்ச்சி பாதிக்க வேண்டாமே என்று நான் அனுமதி கொடுத்தேன்... அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்காக எனக்கு நன்றிக்கடன் படாவிட்டாலும் என்மீது ‘டூப் நடிகையைப் போட்டு படமாக்கி விட்டேன்...’ என்று அபாண்டமான பழியைச் சுமத்தாமலாவது இருந்திருக்கலாம்... இந்தப் பிரச்சனை பற்றி நடிகர் சங்கம் விசாரித்து சுனைனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என்று அந்த புகாரில் கண்ணீர் சிந்தாத குறையாக எழுதியிருக்கிறார் ஜெய்ஆகாஷ்.