Wednesday, September 2, 2009
நயன்தாரா – பேக் டூ பெவிலியன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன் மனமிறங்கி மலையாளப் படம் ஒன்றிற்கு கால்ஷீட் கொடுத்தார். திலீப் ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தை சித்திக் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பாடிகாட். 2005ல் மம்முட்டியுடன் நடித்த ராப்பகல் படத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் மலையாளப் படம் இது. இதிலிருந்தே மலையாளத்துக்கு நயன் கொடுக்கும் மரியாதை தெரிந்திருக்கும்.
பாடிகாட் வெளியாகாத நிலையில் மேலும் இரு மலையாளப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது நயன்தாரா தரப்பு. தமிழ், தெலுங்கில் வாய்ப்பு வறண்டு போனதால்தான் இந்த திடீர் முடிவை எடுத்திருக்கிறார் நயன்தாரா. உயரப் பறந்தாலும் இரை தின்ன தரைக்கு வந்துதானே ஆக வேண்டும் ஊர்க்குருவி.
சுசிகணேசன் நடிச்சது பிடிக்கலே! விக்ரம் டமால்...
“கந்தசாமியில் எனக்கு எல்லாமே பிடிச்சது. பிடிக்காதது சுசிகணேசன் நடிச்சதுதான். டைரக்டர்கள் எல்லாரும் நடிக்க வர்றாங்க. இதிலே எனக்கு உடன்பாடில்லை. ஏன்னா, எல்லாருமே நடிக்க வந்திட்டா அப்புறம் எங்களை வச்சு இயக்கறது யாரு? அதனால் வந்த அச்சம்தான் இது. எங்களுக்கு நடிக்க தெரியுமே தவிர, உங்க வேலையை பார்க்க தெரியாது. அதனால் அவங்க வேலையை நாங்க பார்க்காமலும், எங்க வேலையை அவங்க பார்க்காமலும் இருப்பதும் நல்லது. அதுதான் பிடிச்சிருக்கு” என்றார் சீரியஸ் ஆக. ஆனால் இந்த சீரியஸ் வார்த்தைகளை சீயானின் காந்த சிரிப்பு லேசாக்கிவிட்டதுதான் கொடுமை.
இவர் பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும். கோடம்பாக்கத்திலிருந்து இன்னொரு இயக்குனரும் ஹீரோவாக போகிறார். கடந்த சில மாதங்களாகவே செவன்த் சேனல் நாராயணன் அலுவலகத்தில் கதை விவாதத்தில் இருக்கும் கரு.பழனியப்பன்தான் இந்த புதுமுகம். தான் இயக்கப்போகும் இந்த புதிய படத்திற்கு இவர்தான் ஹீரோவாம். கோடம்பாக்கத்தில் கொழுந்துவிட்டு எரியும் இந்த செய்தியை அடுத்து, சக இயக்குனர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கிறது கருவுக்கு!
எதிலும் 'முதல்வன்' கமல்!
அவர் சொன்னதுதான் நிஜமானது. இன்று தமிழ் சினிமாவுக்கு பெரும் உறுதுணையாக நிற்பவை தொலைக்காட்சிகள் தான். படத்தில் போட்ட முதலில் பெரும் பகுதியை இன்று தொலைக்காட்சிகள்தான் தருகின்றன, தயாரிப்பாளர்களுக்கு!
அடுத்து விசிடி - டிவிடியை அடியோடு தடை செய்ய வேண்டும் என்றார்கள். அன்றும் கமல்தான் முதல் குரல் எழுப்பியவர்... 'திருட்டு விசிடி வரும் வரை ஏன் காத்திருக்கிறீர்கள்... நீங்களே உங்கள் படத்தை சிடியாகப் போட்டு அதிகாரப்பூர்வமாக விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளுங்கள். தியேட்டராக இருந்தாலென்ன, சிடியாக இருந்தாலென்ன.. உங்கள் படத்தைக் காசு கொடுத்துப் பார்த்தால் சரிதானே. இது அதிக சினிமா எடுக்கவும் உதவும்' என்று உறைக்கும் படி கேட்டவரும் இவர்தான்.
அடுத்து டிஜிட்டல் சினிமாவுக்கு எதிர்ப்பு எழுந்தபோது, அதற்கு பதில் தர வெறும் பேச்சோடு நிற்காமல் ஒரு டிஜிட்டல் திரைப்படமே எடுத்து அனைவரது வாயையும் அடைத்தவர் கமல்.
இன்று ஆன்லைன் மீடியாவுக்கே சில தயாரிப்பாளர்களும், சில திரைத்துறை பிஆர்ஓக்களும் தடைவிதிக்க வேண்டும் என கொக்கரித்து வருகிறார்கள்.
இன்றும் கமல் ஒருவர்தான் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார். அதுவும் பேச்சோடு நிற்கவில்லை மனிதர். தனது உன்னைப் போல் ஒருவன் படத்தின் டிரைலரை இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி இணைய தளங்களுக்கும் கொடுத்திருக்கிறார்.
எவ்வளவு ஸ்டில்கள் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள், எத்தனை பேட்டிகள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என தனது மீடியா மேனேஜர் நிகில் மூலம் தகவலும் அனுப்பி வைத்துள்ளார்.
அடுத்த கட்ட சினிமாவை வளர்த்தெடுக்க 'யு ட்யூப்'பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தனது திரைக்கதை பயிற்சிப் பட்டறையில் புரட்சிக் குரல் எழுப்பிய கலைஞனல்லவா... தனது பேச்சை இன்று செயல்வடிவம் பெற வைத்துள்ளார்.
இன்று பெரும்பாலான இணையதளத்தைத் திறந்தால் முதலில் உங்களை வரவேற்பது கமலின் உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சி அல்லது பேட்டிகளாகத்தான் இருக்கும்.
இதில்கூட ஒரு சிறப்பைப் பாருங்கள்... உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சியில் ஒரு இடத்தில் போலீஸ் அதிகாரி மோகன்லால், தீவிரவாதியின் படத்தை பேக்ஸில் அனுப்புங்கள் என்று கூறி, அடுத்த கணமே, 'வேண்டாம்... இமெயில் பண்ணுங்கள்!' என்பார். அங்குதான் நிற்கிறார் 'இன்டர்நெட்' கமல்!
கலை செய்யத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது... அந்தக் கலையை அனைத்துத் தரப்பு மக்களிடமும் சரியாகக் கொண்டு சேர்க்கும் அத்தனை உத்திகளையும் அறிந்திருக்க வேண்டும் என்பது கமலின் அழுத்தமான கருத்து.
நயன்தாரா – பேக் டூ பெவிலியன்
ஏன்... அப்படி? ஏதாவது காதல் தோல்வியா...?
"சேச்சே.. எனக்கு பாய் பிரண்ட் கூட யாரும் இல்லை. இதில் காதலாவது... எனக்கு ஆண்களைக் கண்டாலே பிடிக்காது. அவர்கள் எப்போதும் பெண்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருப்பவர்கள்.
இது எனக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால்தான் அவர்களிடமிருந்து விலகி இருக்கிறேன்.
தமிழில் எனக்கு புதிய படங்கள் எதுவுமில்லை. அவன் அவள் அது படம் மட்டும்தான். காரணம், நான் புதுப்படங்களை ஒப்புக் கொள்வதில்லை. இந்தியில் படு பிஸியாக இருப்பதால் மற்ற மொழிப் படங்களில் நடிக்க நேரமில்லை..." என்கிறார்.
ஆனாலும் கனமான வேடம் கிடைத்தால் தமிழில் நடிக்க முயற்சிப்பாராம்.
அடடா... இனி தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்!
Monday, August 31, 2009
சன் வசம் வேட்டைக்காரன்!
பெரிய அளவு பரபரப்பேற்படுத்தி படத்தை எப்படியாவது ஓட்டிவிட விஜய் முயற்சி செய்துவந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களான ஏவிஎம் பாலசுப்பிரமணியன் மற்றும் பி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் ஓசைப்படாமல் இதை சன் பிக்சர்ஸிடம் விற்று விட்டனர்.
ஏற்கெனவே ஏவிஎம்மின் இன்னொரு பிரிவினர் தயாரித்த அயன் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு பெரும் வெற்றி பெற வைத்தது.
இனி வெற்றி பற்றிக் கவலையில்லை என்ற நிம்மதியுடன், அடுத்து என்ன அரசியல் பரபரப்பேற்படுத்தலாம் என விஜய் யோசிக்க நல்ல அவகாசம் கிடைத்திருக்கிறது.
கலக்குங்க விஜய்!
எடிட்ங்கில் ஆர்வம் காட்டும் ஆர்யா
பார்த்து ஆன்டனி சார்... உங்களுக்குப் போட்டியா ஆர்யாவும் களத்தில் இறங்கிடப் போறார்.
நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம்: கமல்
திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை. குடும்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. பலமானது. வாணி கணபதி, சரிகா ஆகியோரை நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம். நான் செய்து கொண்ட ஒரு சமரசம் அது. நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க நான் கொடுத்த விலைதான் திருமணம்.
இவ்வாறு கமலஹாசன் சொன்னதும், நிருபர் குறுக்கிட்டு,‘ அப்படியானால் 2 குழந்தைகள் பெற்ற பின் சரிகாவை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?’என்று கேட்டார். அதற்கு கமலஹாசன் தொடர்ந்து கூறியதாவது;
ஓட்டல்களில் அறை எடுத்து தங்குவதில் சங்கடங்கள் ஏற்பட்டன. ‘ இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்’என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டனர். எனவேதான் சரிகாவை துணைவியாராக ஆக்கிக் கொண்டேன். என் குழந்தைகளுடன் இப்போது சரிகா எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களும் அப்படித்தான். குழந்தைகள், சரிகாவுடன் இருக்க விரும்பவில்லை.
அவர்கள் வயது வந்தவர்கள்.வாக்களிக்கவும் சுயமாக முடிவு எடுக்கவும் அவர்களால் முடியும். எனவே அந்தப் பிரச்னையில் நான் தலையிடுவது இல்லை.
நான் அரசியலில் ஈடுபடுவேனா? என்று கேட்கிறார்கள். அரசியலில் நானும் இருக்கிறேன். ஆனால் நான் அரசியல்வாதியல்ல. என் படங்களில் அரசியல் கருத்துக்கள் அழுத்தமாக இடம் பெற்று இருக்கும்.
நான் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். என் மீது கடும் கோபம் கொள்வார்கள். பிறகு நான் துப்பாக்கியுடன் தான் செல்ல வேண்டியது இருக்கும் என்றார்.
கிளாமர் வேடங்களில் நடிக்க மாட்டேன் - அனுபமா
கொலை வழக்கில் பாவனா! கொதி கொதிக்குது ஏரியா!
வெண்ணெய் திரண்டு வருகிற நேரத்தில் தொன்னை கிழிஞ்ச கதையாக ஆகிவிட்டது பாவனாவுக்கு! ‘அசல்’ படத்திற்கு பிறகு தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் கூட பூட்டி வைத்த கேட் திறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது மாதிரி ஒரு பரபரப்பு. அதுவும் சொந்த மாநிலமான கேரளாவில் இருந்தே!
உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டிருக்கும் முத்தூட் நிறுவன அதிபர் பால் முத்தூட் ஜார்ஜ் என்பவரின் கொலையில் பாவனாவை சம்பந்தப்படுத்தி செய்திகள் கிளம்ப அதிர்ந்து போயிருக்கிறார் அவர். கொலை நடந்ததாக கூறப்படும் நாளில் நான் வெளிமாநிலத்தில் ஷ§ட்டிங்கில் இருந்தேன். என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் செய்யும் சூழ்ச்சி என்று கூறியிருக்கிறார் பாவனா.
என்ன நடந்தது? கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் தனது கார் டிரைவரை பின்னால் தொடர்ந்து வரும்படி கூறிவிட்டு நண்பர்கள் காரில் பயணம் செய்தாராம். ஓரிடத்தில் இந்த காரை விரட்டி வந்த கொலையாளிகள் இவரை கொலை செய்து விட்டு தப்பிவிட்டார்கள். காரில் இவருடன் பயணம் செய்த மற்றவர்களும் எஸ்கேப். இந்நிலையில், அந்த காரில் பாவனாவும் இருந்தார் என்கிறார்கள் இந்த விவகாரத்தில் புயலை கிளப்பும் சிலர். இதற்குதான் மேற்கண்டவாறு பதில் சொல்லியிருக்கிறார் பாவனா.
போலீசார் பாவனாவிடமும் விசாரிப்பார்கள் என்று தெரிகிறது. அந்த வெள்ளந்தி முகத்தை பார்த்தால் அப்படியா தோன்றுகிறது?
“கை கால் விளங்காம போக...” விமர்சனம் எழுப்பிய வில்லங்கம்!
முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று கந்தசாமி படத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. முறையாக படத்தை விமர்சிக்கலாம். அதற்கு உரிமை உண்டு. ஆனால் படத்திற்கு வெளியே வந்து தனிப்பட்ட முறையில் வரிக்கு வரி உள்நோக்கத்தோடு விமர்சித்திருப்பது தேவையற்றது என்று ஆத்திரப்பட்டார் தயாரிப்பாளர் தாணு. கடந்த ஆறு மாத காலமாகவே உள்நோக்கத்தோடு செய்தி வெளியிட்ட அந்த நிருபர் மீது வழக்கு போடவும் முடிவெடுத்திருக்கிறாராம்.
உண்மையில் இந்த விமர்சனத்திற்கு பின்புலத்தில் நடந்தது என்ன? ஆளாளுக்கு கேள்விப்பட்டதை சொன்னாலும், விக்ரம் தரப்பிலிருந்து நமக்கு கிடைத்த தகவல்தான் ரொம்ப அதிர்ச்சியானதாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட நிருபர் ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியிருக்கிறாராம். அது வெளியாகி ஒரு சில நாட்கள் கூட ஓடவில்லையாம். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாகவே விக்ரமிடம் கால்ஷீட் கேட்டு வருகிறாராம் அவர்.
ஆங்கில பத்திரிகை நிருபர் என்பதாலும், முன்னணி நாளிதழ் என்பதாலும் கேட்டபோதெல்லாம் பேட்டி கொடுக்கலாம். கால்ஷீட் கொடுக்க முடியுமோ? விக்ரம் நழுவிக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன நிருபர் சந்தர்ப்பம் பார்த்திருந்தாராம் கழுத்தறுக்க! அதைதான் இப்போது பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள்.
மனம் நொந்து போய் பேசிக் கொண்டிருந்த தாணு ஒருகட்டத்தில் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல், “அவருக்கு கை கால் விளங்காம போயிரும்” என்றார் கண்கள் கலங்க. கலகலப்பாக துவங்கிய பிரஸ்மீட் கவலையாக முடிந்தது.
டைரக்டர் கேட்கும் ஒன்றரை கோடி! தடுமாறும் தயாரிப்பாளர்
உருக்கினா செய்கூலி, உரசுனா சேதாரம்கிறது நகையை பொறுத்த வரைக்கும் சரி. ஆனால் கை கொடுத்து காப்பாற்ற வேண்டிய ஒரு தயாரிப்பாளரை உருக்கி, உரசி சேதாரமாக்கியிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அவரிடம் கன்னாபின்னாவென்று சம்பளம் பேசி அதிர வைத்திருக்கிறார்களாம் ஒரு ஹீரோவும் இயக்குனரும்.
பொக்கிஷம் படத்தை தயாரித்தவர் நேமிசந்த் ஜபக். இந்த படத்தில் பெரும் நஷ்டத்தை சம்பாதித்திருக்கும் அவர் அடுத்ததாக மாப்பிள்ளை என்ற படத்தை தயாரிக்கிறார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். சற்றே சரிவிலிருக்கும் தயாரிப்பாளரை மீட்டெடுக்க வேண்டிய இவர்கள்தான் அதிர அதிர சம்பளம் கேட்டு மிரள மிரள ஓட விடுகிறார்களாம்.
தனுஷ் கேட்கும் ஐந்து கோடி சம்பளத்தை தர தயாராக இருக்கிறாராம் தயாரிப்பாளர். ஆனால் இயக்குனர் கேட்பது எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி. சரி, அதற்கும் தயார்தான். படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அழைக்கலாம் என்றாராம் சுராஜ். சரி போகட்டும் என்றால் ஸ்ரீதேவி கேட்பது ஒரு கோடியாம். தனுஷ் பட வியாபாரத்தோடு ஒப்பிட்டால் இவர்களின் சம்பளமே பட்ஜெட்டில் முக்கால் வாசி பணத்தை விழுங்கிவிடும். பிறகு எப்படி படத்தை முடிப்பது? வியாபாரம் செய்வது? அதிர்ந்து போன தயாரிப்பாளர் ஸ்ரீதேவிக்கு பதிலாக நம்ம ஊர் நடிகைகள் யாரையாவது வைத்துக் கொள்ளலாம் என்றும், டைரக்டரின் சம்பளத்தை குறைக்கலாம் என்றும் பேசி வருகிறாராம்.
கொஞ்சம் இறங்கி வாங்க சாருங்களா, தயாரிப்பாளரும் பிழைக்கட்டும்!
ஸ்ரேயா ஹீரோவா நடிச்சா நான் ஹீரோயினா நடிப்பேன்! விக்ரம் லந்து...
ஒரு படம் வெளியான பிறகு இயக்குனரும், தயாரிப்பாளரும் ஒரே மேடையில் இருப்பதே அபூர்வம். அது நேற்று நடந்தது. “கந்தசாமி படத்தின் முதல் வார கலெக்ஷன் 37 கோடி. இது இதற்கு முன் வெளிவந்த எந்த தமிழ் படத்துக்கும் கிடைக்காத மரியாதை” என்றார் சுசிகணேசன். முதல் வாரத்திலேயே இப்படின்னா 100 வது நாள் அன்றைக்கு இதன் வசூலை கணக்கு போட்டுக் கொள் என்றாராம் தயாரிப்பாளர் தாணு. சொல்லும்போதே கண்களில் பல்ப் எரிகிறது சுசிக்கு. “எல்லாரும் இது சிவாஜி படத்தின் சாயல் என்றெல்லாம் பேசினாங்க, எழுதினாங்க. ஆனால், 2006 ம் வருடத்தின் துவக்கத்திலேயே இந்த கதையை தாணு சாரிடம் சொல்லிட்டேன். போன வருஷம் ஆகஸ்ட்லே ஷ§ட்டிங் முடிச்சோம். போஸ்ட் புரடக்ஷனுக்கே ஒரு வருஷம் ஆச்சு. மூணு வருஷம் கழிச்சு வர்ற படம். இடையிலே சிவாஜி முந்திக் கொண்டது. இதுதான் நிஜம்” என்றார் ஆதங்கத்தோடு.
“இந்த கதையை மட்டுமல்ல, சுமார் 10 கதைகளுக்கு மேலே சுசி சொன்னார். அவரிடம் நான் சொன்னது இதுதான். இதுக்கு முன்னாடி நான் ஒரே ஒரு லுங்கி மட்டும் கட்டிகிட்டு படம் முழுக்க வந்திருக்கேன். இரண்டே இரண்டு டி-ஷர்ட் மட்டுமே என்னோட காஸ்ட்யூமா இருந்திருக்கு சில படங்களில். இந்த படம் எனக்கு ஸ்டைலிஷா அமையணும். நிறைய காஸ்ட்யூம் வேணும்னு சொன்னேன். நான் நினைச்ச மாதிரியே ரொம்ப ஸ்டைலா வந்திருக்கு படம். நிறைய உழைச்சிருக்கோம். என் ஒவ்வொரு படமும் இரண்டு வருஷம், ஒன்றரை வருஷம்னு ஆயிருது. இதுவும் அந்த வரிசை படம்தான் என்றவரிடம், பெண் வேஷம் போட்டிருக்கீங்க? ஒரு படம் முழுக்க அப்படி நடிக்கிற ஐடியா இருக்கா? என்றோம். “ஸ்ரேயா ஹீரோவா நடிச்சா, நான் அவங்களுக்கு ஜோடியா பெண் வேஷம் போட தயார்” என்றார் தமாஷாக!
புரியாமல் விழித்த ஸ்ரேயாவிடம் அவரே ஆங்கிலத்தில் இந்த பதிலை விளக்க, திம்சுகட்டை மீனு முகத்தில் வலைக்குள் அடங்காத சந்தோஷம்!
இன்னொரு செய்தி. கந்தசாமி தியேட்டர்களுக்கு வரும் குழந்தைகளுக்கு சேவல் மாஸ்க் கொடுக்கப் போகிறார்களாம். கூவுங்கள் பிஞ்சுகளே...