இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியான, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘காஞ்சிவரம்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.
இதில் காஞ்சிவரம் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. படத் தயாரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வரும் ஃபோர் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு ஃபோர் பிரேம்ஸ் என்ற பெயரில் ப்ரிவியூ தியட்டரும் உள்ளது. அது மட்டுமின்றி சினிமா தயாரிப்புக்குத் தேவையான பல்வேறு துறைகளை தன்னுள்ளே கொண்டுள்ள இந்நிறுவனம் இப்போது தனது இணைய தளத்தை துவங்கியுள்ளது.
இந்த இணையதளத்தை நடிகர் ரஜினிகாந்த் துவக்கி வைத்தார். இந்த இணையதளத்தில் ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டர், டப்பிங், எடிட்டிங், கேமரா சம்பந்தமான அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment