Tuesday, August 18, 2009

எவண்டா அது? தனுஷ் ஆத்திரம்...

எவண்டா அது? ஆத்திரத்தில் ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறார் தனுஷ். பல இளசுகளின் இப்போதைய பொழுது போக்கு ஃபேஸ்புக் தான்.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட், என்று எல்லா ஏரியாவையும் ஆட்டிப்படைக்கும் இந்த இணைய தளத்தில் தனுஷ் பெயரில் ஒரு ஆசாமி நுழைந்து ஆயிரக்கணக்கானவர்களை தில்லாலங்கடி ஆக்கியதுதான் தனுஷின் கோபத்திற்கு காரணம்.

ஃபேஸ்புக் ஏரியாவில் பிரபலம் என்றால் அது சிம்பு, நயன்தாரா ஃபேஸ்புக்குகள்தான். அதிலும் நயன்தாராவின் வலைக்குள் நுழைந்தால், தினந்தோறும் தனது படத்தை போட்டு அது குறித்த தகவல்களையும் அளிக்கிறார். த்ரிஷாவின் புகைப்படம் ஒன்றை போட்டு, இது நானே எடுத்ததாக்கும் என்று நயன்தாரா பெருமை அடித்துக் கொள்வதையும் ரசிக்க முடிகிறது. ஆனால், இந்த ஃபேஸ்புக் அட்ரஸ் நயன்தாரா என்ற பெயரில் இல்லை. அவரது ஒரிஜனல் பெயரான டயானா மரியம் குரியன் என்ற பெயரிலேயே துவங்கப்பட்டுள்ளது.

பல நடிகர் நடிகைகள் நேரடியாகவே இதில் தகவல்களை பரிமாறிக் கொள்வதால், ரசிகர்களும் உண்மை என்று நம்பிதான் தொடர்பு கொள்கிறார்கள். அப்படிதான் தனுஷ் ஃபேஸ்புக்கிலேயும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் நடமாட்டம். தனுஷ் கஸ்தூரிராஜா என்று துவங்கப்பட்டிருக்கும் இதில் நாள்தோறும் ரசிகர்களிடம் சாட்டிங்கில் பேசி வந்திருக்கிறார் இந்த நபர். விஷயம் இப்போதுதான் தனுஷின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. அவ்வளவுதான். அந்த நபரை கண்டுபிடிக்கும்படி சைபர் க்ரைமில் புகார் செய்யப் போகிறாராம்.

No comments: