பாலாவின் புதிய படம் குறித்த சில சுவாரஸிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. நான் கடவுள் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் அடுத்து பாலா என்ன மாதிரி படம் செய்வார் என்பது குறித்து திரையுலகிலும், திரையுலகுக்கு வெளியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிய படத்தில் விஷால், ஆர்யா இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுக்குப் பதில் பாலா முதலில் தனது சாய்ஸாக வைத்திருந்தது அண்ணன் தம்பிகளான ரமேஷையும், ஜீவாவையும். சில காரணங்களால் அவர்களை தவிர்த்துவிட்டு விஷால், ஆர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தமுறை காமெடி சப்ஜெக்டை பாலா கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வசனம் எழுத பல எழுத்தாளர்களை முயன்று பார்த்து யாரும் சரிப்படாமல் இறுதியில் இயக்குனர் விஜியிடம் பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொழி படத்தில் விஜி எழுதிய வசனங்கள் பெரிய அளவில் பேசப்பட்டதே இதற்கு காரணம்.
பொதுவாக தனது படத்தின் கதையை ஹீரோவிடமும் சொல்லும் பழக்கம் பாலாவுக்கு கிடையாது. ஆனால் இந்த முறை தனது கதையை விஷால், ஆர்யாவிடம் மட்டுமின்றி படத்தை தயாரிக்கும் விக்ரம் கிருஷ்ணாவிடமும் கூறியிருக்கிறார். அப்புறம், படத்தின் ஹீரோயின்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கேட்டு சொல்லிடறோம்.
No comments:
Post a Comment