Sunday, October 25, 2009

படத்தை எடுத்துக்கிட்டு அலைஞ்சேன் - அமீர்

‘மத்திய சென்னை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அமீர், லோ பட்ஜெட் படங்களை வாங்க மறுக்கின்ற விநியோகஸ்தர்கள் பற்றி ஒரு பிடி பிடித்தார். ‘ராம், பருத்திவீரன் ஆகிய எனது இரு படங்களும் லோ பட்ஜெட் படங்கள் தான். அந்தப் படங்களை எடுத்து வைத்துக் கொண்டு விற்பனை செய்வதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். விநியோகஸ்தர்களை அணுகிய போது பெரிய படங்கள் வருகின்றன. இது மாதிரி சின்னப் படங்களை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லி அந்தப் படங்களை வாங்குவதற்கு மறுத்து விட்டார்கள். இது போன்ற பிரச்சனைகளால்தான் பெரிய தொகையில் படம் தயாரிக்க வேண்டியுள்ளது. சின்ன பட்ஜெட் படங்களை நீங்கள் வாங்குவதற்கு தயார் என்றால் நாங்கள் எடுப்பதற்கும் தயார்...’ என்று பேசினார். அவர் பேசிய போது விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரனும் மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: