ஒரு படம் வெளியான பிறகு இயக்குனரும், தயாரிப்பாளரும் ஒரே மேடையில் இருப்பதே அபூர்வம். அது நேற்று நடந்தது. “கந்தசாமி படத்தின் முதல் வார கலெக்ஷன் 37 கோடி. இது இதற்கு முன் வெளிவந்த எந்த தமிழ் படத்துக்கும் கிடைக்காத மரியாதை” என்றார் சுசிகணேசன். முதல் வாரத்திலேயே இப்படின்னா 100 வது நாள் அன்றைக்கு இதன் வசூலை கணக்கு போட்டுக் கொள் என்றாராம் தயாரிப்பாளர் தாணு. சொல்லும்போதே கண்களில் பல்ப் எரிகிறது சுசிக்கு. “எல்லாரும் இது சிவாஜி படத்தின் சாயல் என்றெல்லாம் பேசினாங்க, எழுதினாங்க. ஆனால், 2006 ம் வருடத்தின் துவக்கத்திலேயே இந்த கதையை தாணு சாரிடம் சொல்லிட்டேன். போன வருஷம் ஆகஸ்ட்லே ஷ§ட்டிங் முடிச்சோம். போஸ்ட் புரடக்ஷனுக்கே ஒரு வருஷம் ஆச்சு. மூணு வருஷம் கழிச்சு வர்ற படம். இடையிலே சிவாஜி முந்திக் கொண்டது. இதுதான் நிஜம்” என்றார் ஆதங்கத்தோடு.
“இந்த கதையை மட்டுமல்ல, சுமார் 10 கதைகளுக்கு மேலே சுசி சொன்னார். அவரிடம் நான் சொன்னது இதுதான். இதுக்கு முன்னாடி நான் ஒரே ஒரு லுங்கி மட்டும் கட்டிகிட்டு படம் முழுக்க வந்திருக்கேன். இரண்டே இரண்டு டி-ஷர்ட் மட்டுமே என்னோட காஸ்ட்யூமா இருந்திருக்கு சில படங்களில். இந்த படம் எனக்கு ஸ்டைலிஷா அமையணும். நிறைய காஸ்ட்யூம் வேணும்னு சொன்னேன். நான் நினைச்ச மாதிரியே ரொம்ப ஸ்டைலா வந்திருக்கு படம். நிறைய உழைச்சிருக்கோம். என் ஒவ்வொரு படமும் இரண்டு வருஷம், ஒன்றரை வருஷம்னு ஆயிருது. இதுவும் அந்த வரிசை படம்தான் என்றவரிடம், பெண் வேஷம் போட்டிருக்கீங்க? ஒரு படம் முழுக்க அப்படி நடிக்கிற ஐடியா இருக்கா? என்றோம். “ஸ்ரேயா ஹீரோவா நடிச்சா, நான் அவங்களுக்கு ஜோடியா பெண் வேஷம் போட தயார்” என்றார் தமாஷாக!
புரியாமல் விழித்த ஸ்ரேயாவிடம் அவரே ஆங்கிலத்தில் இந்த பதிலை விளக்க, திம்சுகட்டை மீனு முகத்தில் வலைக்குள் அடங்காத சந்தோஷம்!
இன்னொரு செய்தி. கந்தசாமி தியேட்டர்களுக்கு வரும் குழந்தைகளுக்கு சேவல் மாஸ்க் கொடுக்கப் போகிறார்களாம். கூவுங்கள் பிஞ்சுகளே...
No comments:
Post a Comment