Tuesday, October 20, 2009
திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நிதியுதவி...
கையில பணம் இருந்தாலும் கொடுக்கிறதுக்கு மனசு வேணும்ல... அந்த மனசு இருக்கிறதுனாலதானோ என்னவோ... திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான திரிசக்தி சுந்தர்ராமன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். ‘வல்லமை தாராயோ’ என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது ‘கொலை கொலையா முந்திரிக்கா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் இவர். அடிப்படையில் எழுத்தாளரான ‘திரிசக்தி’ சுந்தர்ராமன் எழுத்தாளர்களின் கஷ்டத்தை ரொம்பவே புரிந்திருக்கிறார். ‘சினிமாவில் நடிகர் நடிகைகள் படங்கள் ஹிட் ஆகும் போது உச்சத்திற்குப் போய்விடுகிறார்கள். ஆனால் எழுத்தாளர்கள் மட்டும் தான் பாவம். படம் ஹிட் ஆனாலும் அப்படியே இருப்பார்கள். இதற்கு உதாரணமாக ‘டைட்டானிக்’ படத்தின் கதைஆசிரியரையே சொல்லலாம். உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படம் 300 கோடி வசூலை அள்ளியது. ஆனால் அந்த படத்தின் கதையாசிரியருக்கு 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. உலகம் முழுக்க சினிமா கதை ஆசிரியர்கள் நிலை இதேதான்... இந்நிலை மாற வேண்டும்.’ என்கிறார் திரிசக்தி சுந்தர்ராமன்.
No comments:
Post a Comment