Sunday, October 25, 2009

ரஷ்யாவில் ர‌ஜினி, கமல் படங்கள்

ர‌ஜினி, கமல் படங்களை ரஷ்ய சப் டைட்டிலுடன் ரஷ்யாவில் வெளியிட‌ப் போகிறார்கள் என்று பல மாதங்கள் முன்பு சேதி சொல்லியிருந்தோம். அதற்கான வேலைகள் தற்போது ஜரூராக நடந்து வருகின்றன.
வருகிற டிசம்பர் மாதம் சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா நடக்கிறது. பதில் விருந்து மாதி‌ரி அடுத்த ஜனவ‌ரியில் மாஸ்கோவில் தமிழ்‌த் திரைப்பட விழாவை நடத்துகிறார்கள்.

இதில் சரஸ்வதி சபதம், வசந்த மாளிகை, புதிய பறவை, முத்து, புன்னகை மன்னன் உள்ளிட்ட திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாக‌த் தெ‌ரிகிறது. இந்த‌ப் படங்கள் சம்பந்தப்பட்ட தயா‌ரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கும் பணி இப்போது நடந்து வருகிடிறது.

வேட்டையாடு விளையாடு படத்தை தி ஸ்மார்ட் ஹண்ட் என்ற பெய‌ரில் இந்தியில் டப் செய்து, ரஷ்ய சப் டைட்டிலுடன் திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர். அப்படியே படத்தை பாலிவுட்டில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

சில மாதங்கள் கழித்து மாஸ்கோ சென்றால் ரஷ்யர்கள் தில்லானா தில்லானா என்று பாடிக் கொண்டிருப்பதை கேட்கலாம்.

1 comment:

Unknown said...

Movies Mahanadhi, Aboorva sagothargal, Nayagan,Varumayin niram sigappu,Michael madhana kaama rajan, GUNA, Devar Magan should be dubbed to Russian Langauages.