Sunday, December 13, 2009

பா படம்... ரஜினி விருப்பம்

பா படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யும் அளவு உணர்வுப்பூர்வமான படம். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார்.

சென்னையி்ல் நேற்று முன்தினம் பா திரைப்படத்தைப் பார்த்தார் ரஜினி. அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோரும் இந்தப் படம் பார்த்தனர்.

படம் பார்த்து விட்டு, கருத்து தெரிவித்த ரஜினி, "அமிதாப் எப்போதுமே அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்து வந்துள்ளார். மொழிகளைத் தாண்டி இந்தப்படம் பெரும் வரவேற்பைப் பெறும். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, "அதுபற்றி இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது" என்றார் ரஜினி.

ரஜினி நடித்தால் கண்டிப்பாக அது 'சூப்பர் பா'..!

No comments: