Sunday, December 13, 2009

ஆர்.கே. நடத்தும் ஸ்னூக்கர் போட்டி

தொழிலதிபரான ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு ஓடியதைத் தொடர்ந்து, ‘அழகர்மலை’ படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

அடுத்து இயக்குநர் பி.வாசு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் ஆர்.கே. இவர் சமீபத்தில் ‘வாங்க சாப்பிடலாம்’ என்ற உணவகத்தை சென்னை தியாகராய நகரில் தொடங்கினார். இந்த உணவகத்துடன் இணைந்த விஐபி ஆக்ஸஸ் கிளப் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தையும் நடத்தி வருகிறார்

ஆர்.கே. இங்குள்ள வி.ஐ.பி. அக்ஸஸ் கிளப்பில் சர்வதேசத் தரம் கொண்ட ஸ்நூக்கர் அரங்கு அமைத்துள்ளார். இந்த அரங்கில் விஐபி மேட்ரிக்ஸ் ஆல் இந்தியா இன்விடேஷன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.. போட்டியில் வெல்லும் வீரருக்கு முதல் பரிசாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இரண்டாவது வீரருக்கு ரூ. 90,000மும் அரையிறுதி வரை வரும் வீரருக்கு ரூ 50000-மும், காலிறுதிப் போட்டி வரை வரும் வீரர்களுக்கு ரூ 25000-மும் பரிசாக வழங்கப்படும்.

வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கும் இந்த போட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

No comments: