ஷாருக்கானும், செக்ஸும்தான் பாலிவுட் டில் நல்ல விலை போய்கிறது என்று கூறி முன்பு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் நேஹா. தான் கவர்ச்சியாக நடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கவர்ச்சியாக நடிப்பது அலுப்பு தட்டுவதாக கூறியுள்ளார் நேஹா. அதீத கவர்ச்சியாக தான் இருப்பதே தனக்கு எதிராக போய் விட்டதாக சலிப்புடன் கூறுகிறார் நேஹா.
முன்னாள் மிஸ் இந்தியாவான நேஹா கயாமத், ஜூலி படங்களில் பிரமாண்டக் கவர்ச்சியுடன் கலக்கியவர். தான் சீரியஸ் ரோல்களில் நடித்தும் கூட கவர்ச்சிகரமான கேரக்டரில்தான் என்னை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்கிறார் நேஹா.
செக்ஸி என்ற வார்த்தையையே நான் வெறுக்க ஆரம்பித்துள்ளேன். அந்த அளவுக்கு அது எனக்கு எதிராக போய் விட்டது என்று கூறும் நேஹா, நான் நல்ல கேரக்டர்களில் நடித்துள்ள மித்யா, சிங் இஸ் கிங், மகாரதி ஆகியவற்றை மக்கள் மறந்து விட்டனர். இது வருத்தமாக இருக்கிறது என்கிறார்.
No comments:
Post a Comment