Monday, June 14, 2010

பிஸியான கவுதம்மேனன்

உலகச் செம்மொழி மாநாட்டுப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ‘மிஸ்டர் கருணாநிதி’என்று பெயர் குறிப்பிட்டு கௌதம் மேனன் பேசியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

ஆனால் இந்தப் பிரச்சனை குறித்துப் பேசும் கௌதம் மேனனோ, ‘நான் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...’ என்று தான் பேச ஆரம்பித்தேன். ஏதாவது சந்தேகம் இருந்தா நிகழ்ச்சியைப் பதிவு செய்த வீடியோ கேசட்டை போட்டு பார்க்கச் சொல்லுங்க... என்கிறார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா?’ இந்தி கன்னட ரீமேக், அஜித்தின் அடுத்த படம், சூர்யாவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிஸியான கமிட்மென்டில் இருக்கும் கௌதம் மேனன், ‘நான் ஆங்கிலத்தில் படம் எடுத்தால், தமிழ்நாட்டில் நூறு ரசிகர்களாவது என் படத்துக்கு இருப்பார்கள்...’ என்கிறார்.

No comments: