‘வேட்டைக்காரன்‘ படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகள் ஆரம்பித்துவிட்டதால் விஜய் தனது அடுத்த படமான ‘சுரா’ படத்திற்கான முயற்சிகளில் இறங்குகவதற்குத் தயாராகி வருகிறார்.
இது இவரது 50 வது படம். விஜய்யை வைத்து ‘காதலுக்கு மரியாதை’ படத்தை எடுத்த சங்கிலி முருகன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘காதலுக்கு மரியாதை’ விஜய் படங்களில் முதன் முதலில் மிகப்பெரிய ஹிட் அடைந்த படம் என்பதால் இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் விஜய்.
இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ்.பி. ராஜ்குமார். இவர் சென்டிமென்டான படங்களை எடுத்துக் கொண்டிருந்தவர். முதன்முறையாக விஜய்யுடன் இணைகிறார். விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ‘ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்தப் படத்தைப் பற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும்... அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிற மாதிரியாக படம் இருக்கவேண்டும்’ என்று இயக்குநருக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் விஜய்.
No comments:
Post a Comment