வேட்டைக்காரன் படப்பிடிப்பு [^] வேலைகளை முற்றிலுமாக முடித்து கொடுத்துவிட்ட விஜய் தற்போது 50வது படமான சுறாவுக்காக கேரளாவில் பிசியாகி இருக்கிறார்.
இதில் விஜய்க்கு தமன்னா ஜோடி போட்டுள்ளார். காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
அழகர் மலை படத்தை இயக்கிய எஸ்பி ராஜ்குமார் விஜய்யின் 50வது படத்தை பிரமாண்டமான வெற்றி [^] படமாக மாற்ற முயற்சித்து வருகிறார். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவே பெரும் சிரமப்பட்டு உழைத்து வருகிறது.
படப்பிடிப்பு குழுவினர் கடந்த ஒரு வார காலமாக கேரளா, ஆலப்புழையில் ரொமான்ஸ் சீன்களை எடுத்து வருகின்றனர். முதலில் ரொமான்ஸ், மத்ததெல்லாம் அடுத்து என்பதில் இயக்குனர் [^] உறுதியாக இருக்கிறாராம். இதில் பல சீன்கள் நன்றாகவே வந்துள்ளதாம்.
இந்நிலையில் மீனவ இளைஞரான விஜய், தண்ணீரில் தத்தளிக்கும் தமன்னாவை காப்பாற்றுவது போன்ற காட்சிகள் கடற்கரை பகுதிகளில் எடுக்கப்பட்டதாம்.
அப்போது விஜய், தமன்னா வந்திருப்பதை தெரிந்து கொண்ட கேரள ரசிகர்கள் [^] சுமார் ஆயிரம் பேர் மொத்தமாக வந்து ஷூட்டிங் ஸ்பாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனராம்.
விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய அவர்கள் அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என அடம் பிடித்துள்ளனர். அப்போது ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல மணி நேரம் ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படக்குழுவினர் வேறு வழி தெரியாமல் போலீஸாரை கூப்பிட்டு, கூட்டத்தை அப்புறப்படுத்தினார்களாம்.
No comments:
Post a Comment