சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது.
இந்தப் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் கடினமாக உழைத்து வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.
ரஜினியின் உழைப்பு ஒரு பிரமிப்பு. இன்னும் பல காலத்துக்கு அதைப் பற்றி இந்த திரையுலகம் பிரமிப்புடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ரஜினி சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நடிகர்கள், இளைஞர்களை அனைவருமே அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.
ரஜினியின் வழியை விஜய் பயன்படுத்திக்கொண்டால் உச்சத்துக்கு வர முடியும்…, என்றார் சக்ஸேனா.]
இந்த மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், எந்திரன் படம் 85 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “எப்போது விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியூர் சென்றாலும் ரசிகர்கள் கேட்கிறார்கள். ‘முதல்வன்’ படத்தில் முதலில் நடிக்க வைக்க எண்ணியது ரஜினியை. அவர் கிடைக்காவிட்டால் விஜய்யை வைத்து இயக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.
விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கிறது. நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 7 வருடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். விரைவில் விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் உள்ளது. என் குருநாதர் மகன் அவர் என்பதால் மட்டுமல்ல… அவர் திறமையான நடிகர்… அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது…,” என்றார்.
பின்னர் பேசிய விஜய், அடுத்த வரவிருக்கும் தன்னுடைய ஒரு படத்திலிருந்து பாடல் வரிகளைப் பாடிக் காட்டினார்.
“நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் தூங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே…”
-இப்படிப் போகின்றன அந்தப் பாடல் வரிகள்…!!
No comments:
Post a Comment