Tuesday, September 29, 2009

வருமா வேட்டைக்காரன்?

Vettaikaran
ரசிகர்கள் மட்டுமல்ல... விஜய்யே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேட்டைக்காரன் திரைப்படம் தீபாவளிக்கு வருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஏவிஎம் நிறுவனத்தின் பாலசுப்பிரமணியம், குருநாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி தனது பேனரில் வெளியிடுகிறது.

ஆரம்பத்தில் இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு சூர்யாவின் ஆதவன் மற்றும் ஜெயம் ரவியின் பேராண்மை படங்களுடன் மோதும் எனக் கூறப்பட்டது.

ஆனால் இன்னும் படத்தில் 10 சதவிகித படப்பிடிப்பும், ஒரு பாடல் காட்சியும் பாக்கியுள்ளதாம்.

அக்டோபர் முதல்வாரத்தில்தான் இந்தப் பாடல் காட்சி படமாகுமாம். காரணம் நாயகி அனுஷ்கா இப்போது சூர்யாவுடன் சிங்கம் படத்தில் பிஸியாகிவிட்டாராம்.

ஆனால் விஜய் [^]க்கு தன் படம் எப்படியாவது தீபாவளியன்று திரையைத் தொட வேண்டும் என்பதில் தீராத விருப்பமாம். ஆனால் வேட்டைக்காரன் விஷயத்தில் அவர் விருப்பம் இரண்டாம் பட்சம்தான். படத்தின் உரிமையாளர் சன் பிக்சர்ஸ் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் இப்போது முக்கியம்.

அவர்கள் கையில் ஏற்கெனவே 'கண்டேன் காதலை' தயாராக உள்ளது!

No comments: