Thursday, October 1, 2009

பிகினியா... வேணவே வேணாம்...

ரம்யா நம்பீசனை நினைவிருக்கிறதா...? பின்னே, ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு எஸ்கேப் ஆனவரை இப்படிக் கேட்டுத்தானே ஆரம்பிக்க முடியும். இவர் நடித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. சேரனை கதாநாயகனாகக் கொண்ட இந்தப் படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் இவரும் ஒருவர். பின்பு ஓரமாய் ஒதுங்கிக் கொண்டவர், இப்போது டி.எஸ். கண்ணன் இயக்கத்தில் ‘வெட்டாட்டம்’ படத்திலும் ஷக்தி நடிக்கும் ‘ஆட்டநாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஆறு படங்களில் நடித்து விட்ட ரம்யா நம்பீசன், இப்போது நல்ல பிரேக் தரும் படங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ‘வெட்டாட்டம்’ படத்தில் கிராமத்து பெண்ணாக வலம் வரும் இவர் மேக்கப் போடாமலே இந்தக் கேரக்டரில் நடித்திருக்கிறார். வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரம்யா நம்பீசனுக்கு பிகினி என்ற வார்த்தையைக் கேட்டாலே அலர்ஜியாம். ‘பிகினி மட்டும் நமக்கு ஆகவே ஆகாது... வேற எந்த டிரஸ்னாலும் ஓ.கே...’ என்கிறார் இந்த குயின்.

No comments: