Thursday, September 24, 2009

மதுரை டூ தேனி - சீயான் காட்டிய ஆர்வம்

க்ளைமாக்சை மட்டும் நன்றாக யோசித்துவிட்டு, மிச்ச இரண்டேகால் மணி நேரம் ரசிகனை நெளிய விடும் படங்களுக்கு மத்தியில் துவக்கத்திலிருந்தே வித்தியாசத்தை காட்டியிருக்கிற படம் மதுரை டூ தேனி.
இது போன்ற படங்களுக்கு கெட்டி மேளம் கொட்ட தயங்குவதே இல்லை ரசிகர்கள்.
இடுப்பிலே கட்டியிருக்கிற அரைஞாண் கயிற்றை தாலியா கட்டுறானேடா... இப்படி க்ளைமாக்சை மட்டுமல்ல, படத்தின் போக்கையே ஜாலியாக விமர்சிக்கும் ரசிகனின் ஆச்சர்ய குரல்கள் சீயானின் காதில் எப்படி விழுந்ததோ தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நடிகர் விக்ரமே தொடர்பு கொண்டாராம்.

உங்க படம் நல்லாயிருக்குன்னு நிறைய பேர் சொல்றாங்க. அவங்க சொல்றதை கேட்டுட்டு எனக்கும் படத்தை பார்க்கணும்னு ஆசை வந்திருக்கு. ஒரு ஷோவுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?

ஏற்கனவே பி அண்டு சி ஏரியாவில் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் சந்தோஷத்தில் இருக்கிற தயாரிப்பாளரும், இயக்குனரும் சீயானின் இந்த வார்த்தையை கேட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்களாம். இன்னும் சில தினங்களில் படத்தை பார்த்துவிட்டு ஒரு கடிதமே எழுதி தர முன் வந்திருக்கிறாராம் விக்ரம்.

இந்த லட்டரை வச்சு அப்படியே சிட்டியையும் பிக்கப் பண்ணுங்க பிரதர்ஸ்....

No comments: