Thursday, September 24, 2009

நடிப்புக்கு நயனதாரா முழுக்கு-விரைவில் பிரபு தேவாவுடன் டும்டும்?

நயனதாரா, பிரபுதேவா நட்பு மேலும் இறுகிப் போயுள்ளதாகவும், விரைவில் எதிர்ப்புகளை மீறி கல்யாணத்தில் போய் அது முடியும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக நயனதாரா தனது கவர்ச்சி நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டார். விரைவில் நடிப்புக்கே குட்பை சொல்லப் போகிறார்கள் என்று குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரபுதேவாவின் கல்யாணம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தன்னுடன் நடனம் ஆடி வந்த ரமலத் என்பவரை காதலித்து வந்த பிரபுதேவா ரகசியமாக அவரை மணந்து கொண்டார்.

அதன் பின்னர் இருவரும் சில காலம் தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர். பின்னர் குடும்பத்தினருடன் சமரசம் ஏற்பட்டு அனைவரும் இணைந்தனர்.

இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்து பிரபுதேவா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

ஆனால் அந்த சோகத்திலிருந்து விடுபடுவதற்கு முன்பாகவே பிரபுதேவா தனது மனைவிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார். அது நயனதாராவுடன் அவர் கொண்ட திடீர் காதல்.

தன் மீது பெரும் அன்பும், ஆதரவும், காதலும் கொண்டிருந்த பிரபுதேவா இப்படி திடீரென நயனதாரா மீது காதல் கொண்டது அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. தன்னை விட்டு பிரபுதேவா போய் விட மாட்டார் என்ற பெரும் நம்பிக்கையுடன் உள்ளார். கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மறுபக்கம், நயன், பிரபுதேவா காதல் மேலும் மேலும் இறுகியபடி உள்ளதாம். வாழ்ந்தால் பிரபுதேவாவுடன்தான் வாழ்வேன் என்பதில் நயன்தாரா உறுதியாக உள்ளாராம். பிரபுதேவாவும் அப்படியே. அதேசமயம், இருவரும் சேர்ந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்று நயன்தாரா கொடுத்த பார்முலாவை கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்து விட்டாராம் ரமலத்.

இருப்பினும் இதுகுறித்து நயன்தாராவும் சரி, பிரபுதேவாவும் சரி கவலைப்படாமல் உள்ளனராம். சமீபத்தில் நயனதாராவுக்காக தான் இந்தியில் முதன் முறையாக இயக்கியுள்ள வான்டட் படத்துக்குக் கூட்டிச் சென்று காண்பித்தார்.

இந்த நிலையில் நயனதாரா நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாகவும், விரைவில் பிரபு தேவா - நயன் கல்யாணம் நடக்கப் போவதாகவும் மும்பை மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதை உறுதிப்படுத்துவது போல நயனதாராவின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. நயனை தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் விநாயக். தற்போது ஜூனியர் என்.டி.ஆர்., நயனதாராவை வைத்து அதுர்ப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதில் கவர்ச்சிகரமான உடை அணிய வேண்டும் என்று அவர் நயனிடம் கூறியபோது மறுத்து விட்டாராம். இதை விட கவர்ச்சிகரமான டிரஸ் முன்பு போட்டு நடித்தவர்தானே என்று அவர் ஆச்சரியத்துடன் நயனிடம் கேட்டபோது, அது அப்ப, இப்ப இப்படித்தான் என்று கூறி விட்டாராம நயன்.

கவர்ச்சிகரம் வேண்டாமே என்று பிரபு தேவா கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கவர்ச்சிக்கு விடை கொடுத்து விட்டாராம் நயனதாரா. அப்படியே படிப்படியாக படங்களையும் குறைத்துக் கொள்ளவும், பின்னர் திடுதிடுப்பென கல்யாணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம் நயனதாரா.

கோடம்பாக்கத்தில் விரைவில் 'குண்டு' வெடிக்கலாம்..!

No comments: