Thursday, September 24, 2009

சீமான் ஹீரோவாக நடிக்கும் உத்தரவு!

மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு முழு நேர நடிகராகவும் ஆகியிருக்கிறார் இயக்குனர் சீமான்.
உலக தமிழர்களுக்காக ஓயாமல் குரல் கொடுத்து வரும் சீமான், தனது கொள்கைகளை வலியுறுத்த திரைப்படத்தை ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வேடங்களில் நடித்து வந்த சீமான், முதன் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுக்கப் போகிறார். குருபார்வை, வானவில், ராஜ்ஜியம் போன்ற ஏராளமான படங்களை இயக்கிய மனோஜ்குமார் இயக்க உத்தரவு என்ற படத்தில் கதாநாயகனாக புரமோஷன் ஆகியிருக்கிறார் சீமான். இப்படத்திற்கு இசை விஜய் ஆன்ட்டனி.

குதிக்கணும்னு முடிவு செய்தபின் நீச்சலுக்கு பயந்தால் ஆகுமா? கடந்த சில மாதங்களாகவே சண்டை பயிற்சி, நடனப் பயிற்சி எல்லாவற்றையும் முறையாக கற்றுக் கொண்டாராம். நமது கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் பாத்திரத்தில் நடிக்கிறாராம். வசனங்களை மனோஜ்குமார் எழுதியிருந்தாலும், குறிப்பிட்ட சில காட்சிகளில் அனல் பறக்கும் வசனங்களை தனக்கேயுரிய ஸ்டைலில் உருவாக்கியிருக்கிறாராம் சீமான்.

சீமானின் வாயால் சென்சாரில் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள் என்றும் தோன்றுகிறது. சரி, தலைவருக்கு ஜோடி யாராம்? புரட்சி, கிளர்ச்சி என்று வாதாடுகிற ஹீரோக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடுமா அதெல்லாம்? வலையை வீசியிருக்கிறார்களாம். எந்த புரட்சிக்காரி மாட்டுகிறாரோ?

No comments: