மலையாள நடிகர் மோகன்லால், ஆஸ்கர் விருது பெற்ற ரஸூல் பூக்குட்டி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஸ்ரீசங்கராச்சார்யா சம்ஸ்கிருத பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் காலடியில் உள்ள இப்பல்கலைக்கழகத்தின் இவ்வாண்டு பட்டமளிப்பு விழாவில் இப்பட்டம் வழங்கப்படும்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
திரைத் துறையில் இவ்விரு கலைஞர்களும் செய்துள்ள சாதனைகளுக்காக இந்த கவுரவம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
சிறந்த ஒலி அமைப்புக்காக ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு ரஸூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment