வசூல் மழை... அப்படி... இப்படி... என படம் வெளிவந்த பிறகு சொல்லிக் கொண்டிருந்தாலும் ‘கந்தசாமி’ கொஞ்சம் நொடிந்தசாமியாகவே ஆகிவிட்டார். சரி... அதுக்கென்ன பண்றது அடுத்த வேலைகளில் இறங்கிட வேண்டியதுதான்... ம்... இறங்கிவிட்டார் விக்ரம்.
‘யாவரும் நலம்’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார் விக்ரம். படத்தின் கதை பற்றி மூச்சு விட மறுக்கிறார் விக்ரம் குமார். ஆனாலும் இந்தப் படத்திலும் விக்ரம் நடிப்பிற்கு ஏற்ற கேரக்டர் இருக்குமாம். இலியானா இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி சேருகிறார்.
No comments:
Post a Comment