நடிகர் பிரகாஷ்ராஜ் தமது டூயட் மூவிஸ் சார்பாக தயாரித்து வரும் படம் இனிது இனிது. இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி சக்கைகோடு போட்ட ஹேப்பி டேஸ் படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தை குகன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கி வருகிறார். |
இயக்குநர்தான் புதுமுகம் என்றில்லை. நடிகர்களும் புதுமுகங்கள்தான். வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் என்பதால் இந்தப் படமும் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்தப் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளார் அவர். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இன்று இப்போது ரீரிக்கார்டிங் மற்றும் எடிட்டிங் பணிகள் போய்க்கொண்டிருக்கின்றனவாம். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் பிரகாஷ்ராஜ். |
No comments:
Post a Comment