டெல்லியை தலைமையிடமாக கொண்ட ‘பிக்கி’ அமைப்பின் கருத்தரங்கு சென்னையில் கடந்த 2 நாட்களால நடந்தது. இந்த அமைப்பின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சி முடிவடைந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தார்.;
“இனிமேல் தயாராகும் சினிமா படங்களின் காப்புரிமையை முறைப்படுத்த வேண்டும்.
பழைய சினிமா படங்கள் காணாமல் போவதை தவிர்பதற்கு கலாசார கடமையாக நினைத்து சினிமா படங்களை பாதுகாக்க வேண்டும்.
சினிமா சம்பந்தப்பட்ட சங்கங்கள் சட்டவிரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது.
சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பரீதியில் சிக்கல்கள் ஏற்படவாய்ப்பிருக்கிறது. எனவே அதை வரைமுறைபடுத்த வேண்டும். சினிமாவுக்கு அது தேவையாக இருக்கிறது. எடிட்டிங் டப்பிங் போன்ற பணிகளுக்கு இந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது.
சினிமா படங்களுக்கு வழங்கப்படும் வங்கி வட்டியை குறைப்பதற்காக சினிமா தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தென்னிந்திய அளவில் ‘பிக்கி’ அமைப்பிற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக நான் (கமல்ஹாசன்) இருக்கிறேன். கமிட்டியின் உறுப்பினர்களாக இயக்குனர் கே.பாலசந்தர் பட அதிபட் ஏ.வி.எம்.சரவணன். இயக்குனர் மணிரத்னம். பாலசுப்பிரமணிய ஆதித்தன். மனோஜ் குமார் சந்தாலியா. டி.ஜி.தியாகராஜன். சாய்பிரசாத். கவிதா பிரசாத். ஆர்.சரத்குமார். எம்.எஸ்.குகன். ஜி.ராம்குமார். மம்முட்டி. மோகன்லால் உள் பட 31 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்.”
No comments:
Post a Comment