ஜாலி மூடில் இருக்கிறார் பிரபுதேவா. நயன்தாரா பிரச்சனையை மீடியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டிவிட்டது ஒரு காரணம் என்றாலும், இன்னொரு காரணம் அவருடைய இந்திப்படம் ஹிட்டானதுதான். |
இதைத் தொடர்ந்து இந்திப்படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரபுதேவாவுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த இந்தி வாய்ப்புகளை தூரத்தள்ளிவிட்டு, தமிழ் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஜெயம் ரவி. இந்தப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். பாரிஸில் வாழும் இரண்டு தமிழ் குடும்பங்களின் வாரிசுகள் காதலிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் தோற்றுப் போக, அதற்குப் பிறகு இருவரும் என்னவாகிறார்கள் என்பதுதான் கதையாம். ஜெயம்ரவிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றுத் தெரிகிறது. ஜெயம்ரவி தில்லாலங்கடியை முடித்த கையோடு இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். |
No comments:
Post a Comment