இணையதளம் என்றாலே கோபத்தில் எகிறித்தான் குதிக்கிறார்கள் சினிமாக்காரர்கள். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. பிரிண்ட் மீடியா என்றால் அச்சில் மட்டும்தான் கொண்டு வர முடியும். ஆனால் இணையதளக்காரர்களோ, படங்களின் வீடியோக்களையும் பாடல்களையும் இணையத்தில் ரகசியமாகப் போட்டுத் தாக்கிவிடுகிறார்கள். |
இப்போது டென்ஷனில் இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத். இவர் சிங்கம் படத்திற்கு இசை அமைத்து வருவது ஊரறிஞ்ச விஷயம். இந்தப் படத்தை, சூர்யா அனுஷ்கா நடிப்பில், ஹரி இயக்கிவருகிறார். இதில் ஒரு ரீமிக்ஸ் பாடல் வருகிறது. முரட்டுக்காளை படத்தில் ரஜினி பாட்டான, ‘பொதுவாக எம்மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...’ இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார் தேவிஸ்ரீபிரசாத். இந்த ரீமிக்ஸ் பாடலை மெல்ல இணையத்தில் யாரோ கசிய விட்டிருக்கிறார்கள். இதனால் கொதிப்படைந்து போயிருக்கிறார் இசையமைப்பாளர். ‘நாம எவ்வளவு கஷ்டப்பட்டு மியூசிக் போடறோம்... எப்படி இவங்க எடுத்து போட்டாங்கன்னு தெரியலையே...’ என்று கோபத்தில் உச்சியில் இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத். |
No comments:
Post a Comment