Monday, December 28, 2009

சைக்கிளில் வரும் தனுஷ்...

'பட்டணம்தான் போகலாமடி' பாட்டு பழசாகியிருக்கலாம். ஆனால் அந்த 'மெட்டை' புதுசாக்கியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். 'குட்டி' படத்தில் இப்பாடலை வேறொரு பரிமாணத்தில் அழகாக்கியிருக்கிற அவர்.

இப்படத்தின் ஆடியோ ரிலீசுக்காக சென்னைக்கு வந்திருந்தார். தனது பாடல், திரையில் காட்சியாக விரியும் போது கிடைக்கிற சந்தோஷத்தை அவர் ரசித்ததை நாமும் ரசித்தோம்.

இப்பாடலுக்கு மேக்னா நாயுடுவும் தனுஷீம் ஆடியிருக்கிறார்கள். ஓடும் ரயிலில் இந்த ஜோடி போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்திருந்தால், பக்கத்தில் வந்த சரக்கு ரயிலே கூட தடம் புரண்டிருக்கும். அப்படியரு கெட்ட ஆட்டம். 'யாரடி நீ மோகினி' படத்திற்கு பிறகு மித்ரன் ஜவகர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. இதையடுத்து இன்னொரு படத்தையும் தனுஷை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஜவகர். "இந்த 'பயாலஜி' எப்படி சார்?" என்றால், "இது ஒன்றும் திட்டமிட்டு நடந்தது இல்லைங்க. அதுவா அமைஞ்சது" என்கிறார்.

படத்தை பற்றி நிறைய பேசிய மித்ரன் சொன்ன ஒரு தகவல், சிக்கனமானது. விசேஷமானது. ரசனையானது. ரகளையானதும் கூட. வேறொன்றுமில்லை, இதில் கல்லூரி மாணவராக நடித்திருக்கும் தனுஷ் கல்லு£ரிக்கு சைக்கிளில் வருவது போல காட்சிகளை அமைத்திருக்கிறாராம். பொதுவாக தங்கள் ஆதர்ஷ ஹீரோவை போலவே நடை, உடை, பாவனை, பைக் என்று அலையும் இளசுகள், இனிமேல் சைக்கிளில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை!

No comments: