அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் ஷான்குமார் நடித்த படம் கதை. இப்படத்தை இயக்கியிருப்பது மோகமுள் அபிஷேக்.
மௌனம் பேசியதே, நந்தா ஆகிய படங்களை தயாரித்த ராஜன் ராதாகிருஷ்ணன்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளன் ஒருவனின் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்களைதான் இந்த படம் விவரிக்கிறது. கடைசி இருபது நிமிட க்ளைமாக்சை யாராலும் யூகிக்க முடியாது என்றெல்லாம் பந்தயம் கட்டுகிறார்கள் படக்குழுவினர்.
அவரவர் படங்களை அவரவர் போற்றிக் கொள்வது இயல்புதான் என்றாலும், “இவங்க சொன்ன மாதிரி படம் நல்லாதான் இருக்குமோ” என்று திரும்பி பார்க்க வைக்கிறது ஒரு விஷயம். இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக, ஏன், ஒரு விநியோகஸ்தராகவும் வெற்றி பெற்றிருக்கிற சசிக்குமார் இந்த படத்தின் மதுரை ஏரியாவை விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.
இந்த தகவல் கோடம்பாக்கத்தில் பரவியதால், கதை மீது தனி கவனம் செலுத்துகிறார்கள் மற்ற விநியோகஸ்தர்களும். அதற்குள் படத்தில் ஹீரேவாக நடித்திருக்கும் ஷான்குமாருக்கு எராளமான ஆஃபர்களாம்.
No comments:
Post a Comment