Tuesday, December 29, 2009

கதாநாயகன் மேலே விழுந்த குதிரை...

கும்ப மேளா மாதிரி ‘கும்பல் மேளா’ நடத்துவதில் தமிழ் சினிமாவுக்கு நிகர் அதுவேதான். ஆக்ஷன் படம் ஏதாவது நன்றாக ஓடினால் அதன்பின் வருகிற படங்கள் எல்லாம் ரத்த கறையோடுதான் வரும்.

லேடீஸ் சப்ஜெக்ட் படம் ஓடுகிறதா? திபு திபுவென்று அது மாதிரி கதைகளின் பின்னாலேயே ஓடுவார்கள். ஆனால் தனக்கென்று தனி ஸ்டைலை மேற்கொள்கிற இயக்குனர்கள் ஒரு சிலரே. இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம், தமிழ்சினிமாவின் பழைய ட்ரென்ட்டை மீண்டும் துணிச்சலாக புதுப்பித்தவர் சிம்புதேவன்.

அவரது லேட்டஸ்ட் படம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். தமிழ்சினிமா மறந்தே போய்விட்ட கௌபாய் ஸ்டைல் படத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் சிம்பு. இதற்காக அவர் மெனக்கட்டது கொஞ்ச நஞ்சமல்ல. ரெஃபரன்ஸ் தேடி அவர் அலைந்ததையே தனி கதையாக படம் பிடிக்கலாம் போலிருக்கிறது. அதுபோகட்டும்...

படத்தில் நடிக்கிற லாரன்ஸ், லட்சுமிராய், சந்தியா, பத்மப்ரியா ஆகியோருக்கும் இது புது அனுபவம்! புது லொக்கேஷன், புதிய ஸ்டைலில் ஆடைகள் என்று கடந்த சில மாதங்களாக வேறொரு உலகத்தில் வாழ்ந்தார்களாம் அத்தனை பேரும். அவுட்டோர் ஷ§ட்டிங்கில் ஒளிப்பதிவாளர் அழகப்பனுக்குதான் திண்டாட்டம் என்றார் சிம்புதேவன். நடிகர் நடிகைகள் அனைவருக்கும் தோல் ஆடைகள்தான் காஸ்ட்யூம். வெயில் அதிகம் அடித்தால் அவர்கள் வெந்து போய்விடுவார்கள். லைட்டிங் இல்லையென்றால் அழகப்பன் வெந்து போய்விடுவார். இதையெல்லாம் மீறிதான் படத்தை அழகாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்றார் சிம்புதேவன்.

“முதல் நாள் படப்பிடிப்பில் குதிரை மீது ஏறினேன். அது என் மேல் விழுந்துவிட்டது” என்றார் லாரன்ஸ். அந்த குதிரை மீது எந்த ஹீரோயின் இருந்தாரோ?

No comments: