நடிக்க ஆசைப்பட்ட ஏழாவது நாளிலேயே ஒரு படத்தில் ஹீரோவாகிற அதிர்ஷ்டம் யாருக்கு வாய்க்கும்? ‘அப்பாவி’ ஹீரோவுக்கு வாய்த்திருக்கிறது அந்த அதிர்ஷ்டம்.
லயோலா கல்லூரியில் இரண்டாமாண்டு விஷீவல் கம்யூனிக்கேஷன் படித்து வருகிற கவுதமுக்குதான் இப்படியொரு லக்கி பிரைஸ். சுமார் 300 மணி நேரம் (விட்டு விட்டுதான் பாஸூ) இவரை நடிக்க வைத்து ஒரு மினி ஷீட்டிங்கே நடத்தி முடித்தாராம் படத்தின் இயக்குனர் ரகுராஜ். இப்படி ஒரு திட்டமிடலோடு துவங்கிய படம் நாம் பார்க்கப் போகிற இரண்டரை மணி நேரத்தோடு முடியப்போவதில்லை. மொத்தம் மூன்று பாகங்களாக இந்த படம் வெளிவரப்போகிறது. முதல் பாகத்தைதான் இப்போது படமாக்கி வருகிறாராம் ரகுராஜ்.
“இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள்ளாம் ஒரு குடும்பமா பழகினோம் என்றெல்லாம் எல்லா படத்தின் பிரஸ்மீட்டிலேயும் சொல்லியிருப்பாங்க. நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். நாங்க பாட்டுக்கு வருவோம், நடிப்போம். அவ்வளவுதான். குடும்பம்னு சொல்றதெல்லாம் ஹம்பக். அதை விடுங்கள்... நீங்க நினைக்காத ஒரு படமா இது இருக்கும். அப்பாவி ரிலீஸ் ஆன பின் தமிழ்நாட்டில் எல்லார் மனசிலும் ஒரு ஃபயர் உருவாகியிருக்கும்” என்கிறார் ரகுராஜ்.
தமிழ்சினிமாவின் மூன்று முன்னணி நாயகர்களில் ஒருவரிடம் இந்த கதையை சொன்னாராம். அவரும் பிரமிப்பாக கேட்டுவிட்டு, பிரமாதம் என்று சிலாகித்தாராம். இந்த கதையை நாம கண்டிப்பா எடுக்கிறோம். அதுக்கு முன்னாடி நீங்க ஒரு படத்தை இயக்கி புரூஃப் பண்ணிட்டு வாங்க என்றாராம். அதுவரைக்கும் இந்த கதையை வைத்துக் கொண்டு காத்திருப்பதை விட ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கலாம் என்று இறங்கிவிட்டார் ரகுராஜ்.
தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து எக்ஸ்பீரியன்ஸ் ஆன சுஹானிதான் இப்படத்தின் ஹீரோயின். அவரது எக்ஸ்பீரியன்ஸ் எவ்வளவு ‘உயர்வானது’ என்பதை அவர் அணிந்திருந்த குட்டை பாவாடையே சொன்னதுதான் ஹாட்!
No comments:
Post a Comment