Monday, December 28, 2009

நயன்தாராவுக்கு நாமம்?

வேட்டையாடு விளையாடு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் இப்படி நான்கு தொடர் ஹிட் கொடுத்த லேட்டஸ்ட் நாயகன் கமல்!

இவரைப்போலவே தொடர் ஹிட் பார்ட்டி நம்ம தனுஷ். பொல்லாதவன், திருவிளையாடல், படிக்காதவன், யாரடி நீ மோகினி! இதுதான் தனுஷின் ஹாட் லிஸ்ட்.

ஒரு ஹிட் கொடுத்தாலே ஒரு கோடியை ஏற்றிக் கொடுக்கும் தமிழ்சினிமாவில், இந்த தொடர்ஹிட் இருவரையும் ராசாதி ராசாவாக்கியிருக்கிறது. இவர்களுடன் ஜோடி சேர ஒரே போட்டா போட்டி. அதிலும், கமலை விட வயதில் மிக மிக சிறியவரான தனுஷிடம் ஜோடி போட கெஞ்சும் அதே நடிகைகள், கமலுடனும் ஜோடி போட அலைவதுதான் கனவுலகத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதிலும் நயன்தாராவுக்கும் தமன்னாவுக்கும் மறுபடியும் ஒரு நேரடி போட்டி. குருவியில் துவங்கிய இந்த போட்டி, இப்போது கமலிடமும் தொடர்வதுதான் லேட்டஸ்ட் லடாய். மர்மயோகியில் விட்டதை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற முயற்சியில் இறங்கிவிட்டாராம் த்ரிஷா. இந்திக்கு போய் விட்டாலும், நாற்பதே நாளில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
தனக்காக நாற்பது நாட்கள் பொறுத்திருக்க சொல்கிறாராம். கே.எஸ்.ரவிகுமார், கமல் இருவரும் பொறுத்திருந்தால் நயன்தாராவுக்கு வழக்கம் போல நாமம்தான்!

No comments: