Friday, September 18, 2009
டோரன்டோவில் ஷ்ரியா!
நம்ம ஊரு ஷ்ரியா சரண் நடித்த படம் டோரன்டோ பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினருடன் டோரன்டோ போயுள்ளார் ஷ்ரியா.
தமிழில் பிசியாக உள்ள ஷ்ரியா 'சைட் பை சைடாக' இந்தியிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த படம் குக்கிங் வித் ஸ்டெல்லா. இப்படத்தில் ஷ்ரியாவுடன் சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள லிசா ரேவும் இப்படத்தில் நடித்துள்ளார். திலீப் மேத்தா படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் டோரன்டோ பட விழாவில் பங்கேற்றுள்ளது. பட திரையீட்டில் கலந்து கொள்வதற்காக ஷ்ரியாவும், சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோரும் டோரன்டோ சென்றுள்ளனர்.
பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் , நடிகையரை சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார வைத்து அழைத்துச் சென்றனர். அதேபோல, ஷ்ரியாவும், சீமாவும் ரிக்ஷாவில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருவரும் அழகிய புடவையில் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி ஒய்யாரமாக அமர்ந்து வந்த காட்சியை பட விழாவுக்கு வந்தவர்கள் கண்டு ரசித்தனராம். மஞ்சள் நிற சேலை மற்றும் தங்க நிற பிளவுசில் படு கிளாமராக காட்சி அளித்தார் ஷ்ரியா.
நடிகர் நடிகையரின் வருகையைப் பார்ப்பதற்காக திரண்டிருந்த கூட்டத்தினர் கண்கள் எல்லாம் ஷ்ரியாவின் கவர்ச்சி மீதே நிலை குத்தி நின்றிருந்ததாம்.
சைக்ளிங் வித் ஷ்ரியா..!
No comments:
Post a Comment