Monday, August 31, 2009

நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம்: கமல்

நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம் என்று நடிகர் கமல் கூறியுள்ளார். டெல்லியில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சிக்கு கமல ஹாசன் அளித்த பேட்டியில்,

திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை. குடும்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. பலமானது. வாணி கணபதி, சரிகா ஆகியோரை நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம். நான் செய்து கொண்ட ஒரு சமரசம் அது. நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க நான் கொடுத்த விலைதான் திருமணம்.

இவ்வாறு கமலஹாசன் சொன்னதும், நிருபர் குறுக்கிட்டு,‘ அப்படியானால் 2 குழந்தைகள் பெற்ற பின் சரிகாவை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?’என்று கேட்டார். அதற்கு கமலஹாசன் தொடர்ந்து கூறியதாவது;

ஓட்டல்களில் அறை எடுத்து தங்குவதில் சங்கடங்கள் ஏற்பட்டன. ‘ இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்’என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டனர். எனவேதான் சரிகாவை துணைவியாராக ஆக்கிக் கொண்டேன். என் குழந்தைகளுடன் இப்போது சரிகா எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களும் அப்படித்தான். குழந்தைகள், சரிகாவுடன் இருக்க விரும்பவில்லை.

அவர்கள் வயது வந்தவர்கள்.வாக்களிக்கவும் சுயமாக முடிவு எடுக்கவும் அவர்களால் முடியும். எனவே அந்தப் பிரச்னையில் நான் தலையிடுவது இல்லை.

நான் அரசியலில் ஈடுபடுவேனா? என்று கேட்கிறார்கள். அரசியலில் நானும் இருக்கிறேன். ஆனால் நான் அரசியல்வாதியல்ல. என் படங்களில் அரசியல் கருத்துக்கள் அழுத்தமாக இடம் பெற்று இருக்கும்.
நான் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். என் மீது கடும் கோபம் கொள்வார்கள். பிறகு நான் துப்பாக்கியுடன் தான் செல்ல வேண்டியது இருக்கும் என்றார்.

No comments: