Wednesday, September 2, 2009

நயன்தாரா – பேக் டூ பெவிலியன்

ஜெயம் படத்தில் அறிமுகமாகி, அந்நியன் மூலம் பெரும் விளம்பரம் பெற்று, உன்னாலே உன்னாலே-யுடன் காணாமல் போன சதாவை நினைவிருக்கிறதா... அம்மணிக்கு இப்போது ஆண்களைக் கண்டாலே அலர்ஜியாம். முன்பெல்லாம் பார்ட்டி, டிஸ்கொத்தே என்று கலக்கியவர் இப்போது ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு ஓடிவிடுகிறாராம்.

ஏன்... அப்படி? ஏதாவது காதல் தோல்வியா...?

"சேச்சே.. எனக்கு பாய் பிரண்ட் கூட யாரும் இல்லை. இதில் காதலாவது... எனக்கு ஆண்களைக் கண்டாலே பிடிக்காது. அவர்கள் எப்போதும் பெண்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருப்பவர்கள்.

இது எனக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால்தான் அவர்களிடமிருந்து விலகி இருக்கிறேன்.

தமிழில் எனக்கு புதிய படங்கள் எதுவுமில்லை. அவன் அவள் அது படம் மட்டும்தான். காரணம், நான் புதுப்படங்களை ஒப்புக் கொள்வதில்லை. இந்தியில் படு பிஸியாக இருப்பதால் மற்ற மொழிப் படங்களில் நடிக்க நேரமில்லை..." என்கிறார்.

ஆனாலும் கனமான வேடம் கிடைத்தால் தமிழில் நடிக்க முயற்சிப்பாராம்.

அடடா... இனி தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்!

No comments: