Monday, August 31, 2009

எடிட்ங்கில் ஆர்வம் காட்டும் ஆர்யா

சிம்பு சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், எடிட்டிங் என்று பல துறைகளில் புகுந்து வீடு கட்டுகிறவர். இவரைப் இப்போது ஆர்யாவும் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்.
நடிகராக அறிமுகம் ஆகிய ஆர்யா, இப்போது படம் தயாரிக்கவும் விநியோகம் செய்யவும் செய்கிறார். இதைத் தொடர்ந்து இப்போது ஆர்யா எட்டிப் பார்த்திருக்கும் இடம் எடிட்டிங். முன்னணி எடிட்டரான ஆன்டனியிடம் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று அவருடைய எடிட் சூட்டில் உட்கார்ந்து எடிட்டிங் கற்றுக் கொள்கிறாராம் ஆர்யா.
விரைவில் ஆர்யா ஒரு எடிட்டிங் சூட் திறக்கப்போகிறார் இதனால்தான் இதையெல்லாம் கற்றுக் கொள்கிறார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

பார்த்து ஆன்டனி சார்... உங்களுக்குப் போட்டியா ஆர்யாவும் களத்தில் இறங்கிடப் போறார்.

No comments: