கந்தசாமியில் மட்டுமல்ல, அதற்கு முன்பு வந்த ‘திருட்டு பயலே’ படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து, “வந்துட்டோம்ல...” என்று மிரட்டி வருகிறார் சுசி கணேசன். திருட்டுப்பயலே விஷயத்தில் ஜீவனுக்கு ஓ.கே. ஆனால் கந்தசாமிக்கு கசக்கிறதாம் சுசியின் நடிகர் அவதாரம். வெளிப்படையாகவே இது குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார் விக்ரம்.
“கந்தசாமியில் எனக்கு எல்லாமே பிடிச்சது. பிடிக்காதது சுசிகணேசன் நடிச்சதுதான். டைரக்டர்கள் எல்லாரும் நடிக்க வர்றாங்க. இதிலே எனக்கு உடன்பாடில்லை. ஏன்னா, எல்லாருமே நடிக்க வந்திட்டா அப்புறம் எங்களை வச்சு இயக்கறது யாரு? அதனால் வந்த அச்சம்தான் இது. எங்களுக்கு நடிக்க தெரியுமே தவிர, உங்க வேலையை பார்க்க தெரியாது. அதனால் அவங்க வேலையை நாங்க பார்க்காமலும், எங்க வேலையை அவங்க பார்க்காமலும் இருப்பதும் நல்லது. அதுதான் பிடிச்சிருக்கு” என்றார் சீரியஸ் ஆக. ஆனால் இந்த சீரியஸ் வார்த்தைகளை சீயானின் காந்த சிரிப்பு லேசாக்கிவிட்டதுதான் கொடுமை.
இவர் பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும். கோடம்பாக்கத்திலிருந்து இன்னொரு இயக்குனரும் ஹீரோவாக போகிறார். கடந்த சில மாதங்களாகவே செவன்த் சேனல் நாராயணன் அலுவலகத்தில் கதை விவாதத்தில் இருக்கும் கரு.பழனியப்பன்தான் இந்த புதுமுகம். தான் இயக்கப்போகும் இந்த புதிய படத்திற்கு இவர்தான் ஹீரோவாம். கோடம்பாக்கத்தில் கொழுந்துவிட்டு எரியும் இந்த செய்தியை அடுத்து, சக இயக்குனர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கிறது கருவுக்கு!
No comments:
Post a Comment