தமிழ், தெலுங்கில் பிஸியாக இருந்த நேரம் தாய் மொழியான மலையாளத்தை திரும்பிக்கூட பார்த்ததில்லை நயன்தாரா. காலம் மாறியிருக்கிறது. தமிழில் ஆதவன் படம் மட்டுமே நயன்தாரா கைவசம் இருக்கிறது. தெலுங்கிலும் ஒரேயொரு படம். என்ன செய்யப் போகிறார் நயன்தாரா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன் மனமிறங்கி மலையாளப் படம் ஒன்றிற்கு கால்ஷீட் கொடுத்தார். திலீப் ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தை சித்திக் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பாடிகாட். 2005ல் மம்முட்டியுடன் நடித்த ராப்பகல் படத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் மலையாளப் படம் இது. இதிலிருந்தே மலையாளத்துக்கு நயன் கொடுக்கும் மரியாதை தெரிந்திருக்கும்.
பாடிகாட் வெளியாகாத நிலையில் மேலும் இரு மலையாளப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது நயன்தாரா தரப்பு. தமிழ், தெலுங்கில் வாய்ப்பு வறண்டு போனதால்தான் இந்த திடீர் முடிவை எடுத்திருக்கிறார் நயன்தாரா. உயரப் பறந்தாலும் இரை தின்ன தரைக்கு வந்துதானே ஆக வேண்டும் ஊர்க்குருவி.
No comments:
Post a Comment