Monday, August 31, 2009

“கை கால் விளங்காம போக...” விமர்சனம் எழுப்பிய வில்லங்கம்!

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று கந்தசாமி படத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. முறையாக படத்தை விமர்சிக்கலாம். அதற்கு உரிமை உண்டு. ஆனால் படத்திற்கு வெளியே வந்து தனிப்பட்ட முறையில் வரிக்கு வரி உள்நோக்கத்தோடு விமர்சித்திருப்பது தேவையற்றது என்று ஆத்திரப்பட்டார் தயாரிப்பாளர் தாணு. கடந்த ஆறு மாத காலமாகவே உள்நோக்கத்தோடு செய்தி வெளியிட்ட அந்த நிருபர் மீது வழக்கு போடவும் முடிவெடுத்திருக்கிறாராம்.

உண்மையில் இந்த விமர்சனத்திற்கு பின்புலத்தில் நடந்தது என்ன? ஆளாளுக்கு கேள்விப்பட்டதை சொன்னாலும், விக்ரம் தரப்பிலிருந்து நமக்கு கிடைத்த தகவல்தான் ரொம்ப அதிர்ச்சியானதாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட நிருபர் ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியிருக்கிறாராம். அது வெளியாகி ஒரு சில நாட்கள் கூட ஓடவில்லையாம். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாகவே விக்ரமிடம் கால்ஷீட் கேட்டு வருகிறாராம் அவர்.

ஆங்கில பத்திரிகை நிருபர் என்பதாலும், முன்னணி நாளிதழ் என்பதாலும் கேட்டபோதெல்லாம் பேட்டி கொடுக்கலாம். கால்ஷீட் கொடுக்க முடியுமோ? விக்ரம் நழுவிக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன நிருபர் சந்தர்ப்பம் பார்த்திருந்தாராம் கழுத்தறுக்க! அதைதான் இப்போது பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள்.

மனம் நொந்து போய் பேசிக் கொண்டிருந்த தாணு ஒருகட்டத்தில் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல், “அவருக்கு கை கால் விளங்காம போயிரும்” என்றார் கண்கள் கலங்க. கலகலப்பாக துவங்கிய பிரஸ்மீட் கவலையாக முடிந்தது.

No comments: