Monday, August 31, 2009

சன் வசம் வேட்டைக்காரன்!

வேட்டைக்காரன் படத்தில் எப்படியாவது ஜெயித்தே தீர வேண்டும் என்ற நெருக்கடியிலிருந்த விஜய்க்கு இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு வந்திருக்கும்... காரணம் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி விட்டதாம்.

பெரிய அளவு பரபரப்பேற்படுத்தி படத்தை எப்படியாவது ஓட்டிவிட விஜய் முயற்சி செய்துவந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களான ஏவிஎம் பாலசுப்பிரமணியன் மற்றும் பி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் ஓசைப்படாமல் இதை சன் பிக்சர்ஸிடம் விற்று விட்டனர்.

ஏற்கெனவே ஏவிஎம்மின் இன்னொரு பிரிவினர் தயாரித்த அயன் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு பெரும் வெற்றி பெற வைத்தது.

இனி வெற்றி [^] பற்றிக் கவலையில்லை என்ற நிம்மதியுடன், அடுத்து என்ன அரசியல் [^] பரபரப்பேற்படுத்தலாம் என விஜய் யோசிக்க நல்ல அவகாசம் கிடைத்திருக்கிறது.

கலக்குங்க விஜய்!

No comments: